Monday, December 22, 2008

ஒரு கோப்பை மதுவும், விடுதலைக்கான வழியும்!

இறுக்கம் தளர்ந்து
கண்கள் பணிகின்றன

சூழ்ந்தவை யாவும்
நீர்க்குமிழ்களைப் போல
காணாமல் போகின்றன

போகிற போக்கில்
போய்விட்டால்
வலி ஏதுமில்லை

வளைக்கிற போதெல்லாம்
வளைய மறுக்கிறது
மனதும், உடம்பும்

மன்றாடினாலும்
காதுக்குக் கேட்பது
மனதுக்குக் கேட்பதில்லை

மனம் தூங்கிவிட்டால்
துக்கமேதுமில்லை

இருப்பதால் தான்
எல்லாம்.
இல்லாமல் போய்விட்டால்...

அதற்க்காகத்தான்
கொஞ்சம்
கொஞ்சமாக
ஓன்று
இரண்டு என்று
பல அவுன்ஸ்களாய்
பிராந்திப் புட்டிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்


ஓருலகம் உடைந்து
சில்லுச் சில்லாய்
சிதறிக் கிடைக்கிறது

எந்தப் பிரங்கையுமற்று
கண்கள்
தூக்கதிட்க்காக ஏங்குகின்றன.

Saturday, December 20, 2008

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்- பாகம்2

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
நேர்பட பேசு
குற்றென நிமிர்ந்துநில்
தாழ்ந்து நடவேல்
தீயோர்க் கஞ்சேல்
ரவுத்திரம் பழகு
_ மகாகவி சுப்பிரமணியபாரதியார்.

'ராஜிவை விடுதலைப் புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகிறார்கள். அவர்கள் தீவிரவாதி என்கிறார்கள். ஒட்டு மொத தமிழ் இனத்தையே அழிப்பதட்க்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு லட்சம்பேரை அனுப்பினார் ராஜிவ்; இது சர்வதேச தீவிரவாதமில்லையா? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம் -சீமான்.

ஒரு தேசத் தலைவரின் கொலைக்காக தமிழ் இனத்தையே அழிக்கத் துணை போவதில் எந்த நியாயமும் இல்லை. சீமான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. உண்மையச் சொன்னால் காங்கிரசுக்கு வலிக்கிறதா?

சீமான், தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்றால், காங்கிரஸ்காரர்கள் சீமானின் காரைக் கொழுத்தியது சுத்த அயோக்கியத்தனம்!


தினமலர் பத்திரிக்கையைப் பொறுத்த வரையில், தன் அரிப்பிற்கு யாரையாவது சொறிய வேண்டும். 18.12.08 அன்றைய தினமலரின் தலைப்புச் செய்தி: சீமான் கைது ஆவாரா? என்பது. தமிழ் உணர்வாளர்களை, கலகக்காரர்களாக அடையாளப் படுத்துவதில் யாருக்கு லாபம்? தினமலர் காசுக்கு 'பீ' தின்பதை நிறுத்த வேண்டும்.

பாவம். தினகரன் பத்திரிக்கைக்கு 'சீமான் காரை கொழுத்தியது யார்?' என்றே தெரியாது. 20.12.08 அன்று 'காரை கொழுத்திய மர்ம ஆசாமிகள்' என்று எழுதுகிறார்கள். தொலையட்டும்.

தேர்தலுக்காக பெட்டியை மாற்றிக் கொண்டும், கூட்டணி வைத்துக் கொண்டும், மரியாதை தெரியாமல் பேசும் ஜெயலலிதா போன்ற தேசத்துரோகிகள், விடுதலைப் புலிகளை வார்த்தைக்கு வார்த்தை 'தீவிரவாதிகள்' என்று தூற்றுகிறார்கள். கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்காக மாரடிப்பவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது. முடியவே முடியாது.

ஈழப் பிரச்சனையில் விஜயகாந்தின் கருத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவரின் பிதற்றல்களை எல்லாம் விகடன் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிடுகிறது. நாட்டின் சாபக்கேடு.

சினிமா கூட்டத்தில் பேசி கைது ஆனால் தான் நடிகர்கள் எல்லாம் போராடுவார்களா? உணர்ச்சிவயப்பட்ட தமிழன் என தனக்குத்தானே போலிச் சயாங்களைப் பூசிக்கொண்டு அலையும் புரட்சிதமிழன் சத்தியராஜ் எங்கே போனார்? தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்து அரசியல் கணக்குப் போட்ட 'ஒன்டிப்புலி' விஜய் எங்கே போனார்? யோசியுங்கள்!

காது கேளாதவர்கள் அல்லது காது கேளாது போல் நடிப்பவர்களுக்கு:

1) மக்களுக்க்காகதான் அரசாங்கம்.
2) கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்க்கு மாரடிப்பவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.
3) பிரதமர் மன்மோகன்சிங் தலைமைக்கு டப்பிங் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
4) ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத்துறை பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
5) அடிப்படை பேச்சுரிமைச் சட்டம் அமலுக்கு வரவேண்டும்.
6) இல்லையென்றால் இந்தியாவை 'பாசிச' நாடு என்றழைக்க உரிமை கொடுங்கள்.

Friday, December 12, 2008

சென்னைக்கு வந்து போனவர்கள் சொன்னது...


இந்த நகரத்திற்க்கு
வந்து போனவர்களெல்லாம்
என்னிடம்
சிலாகித்துப் பேசுவதுண்டு

மெரினா கடற்க்கரை
அண்ணா சமாதி
ஸ்பென்சர் பிளாசா
ரங்கநாதன் தெரு
போகவர
நிமிடத்திட்க்கொரு ரயிலென்று

அவர்களுக்கென்ன தெரியும்
வாடகை வீடு
தேடியலைவதிலும்
மின்சார ரயிலின்
தொங்களிலுமே
என் காலம் போன கதை.

Monday, December 8, 2008

நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு!

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி\சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்

2004ம் ஆண்டு கல்லூரி ஹாஸ்டலில் தான் முதன் முறையாக விஜேந்திரனைச் சந்தித்தேன். அப்போது விஜேந்திரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு என்னன்ன கெட்ட பழக்கம் இருக்கு?" சற்று தடுமாறிய நான் "ரெம்ப பேசுவேன்" என்றேன். மறுத்த விஜேந்திரன் "அது இல்ல தண்ணி, தம் வேற ஏதாவது?" என்று கேட்க, நான் இல்லை என தலையாட்டினேன். அன்று அவன் பார்த்த பார்வைக்கு இன்று தான் அர்த்தம் புரிகிறது.(சரியான 'பழம்' வந்து மாட்டிக்கிட்டான் என்பதே அது)


பின் நாட்களில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் வாட்ச்மேனிடம் சிக்காமல் சரக்கை பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவருவதில் நான், விஜயின் வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.(ஒரு 'பாடிகாட்' போல) இதில் கவனிக்க வேண்டிய ஓன்று நாங்கள் ஒரு நாளும் மாட்டிக் கொண்டதில்லை.

விஜயின் விருப்பமான ப்ராண்ட் 'signature' விஸ்கி. கைச் செலவு குறையக் குறைய 'vintage'ஆக மாறி கடைசியில் 'nepoleon'இல் வந்து நிற்கும். 2005 மார்ச் 3ம் தேதி விஜயின் பிறந்த நாள். ஹாஸ்டலின் முதல் மாடியே போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. யாவரும் போதையில் மூழ்கிப் போன பின்னிரவில், " விஜேந்திரன் பிறந்த நாள்னா பசங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கணும்!" என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான், நான் 'யாருக்காவது உதவலாமே?' என்றேன். ( விஜயின் அடுத்த இரண்டு பிறந்த நாளுக்கும் பல்லாவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு அரிசி மூட்டைகள் வங்கிக் கொடுத்தான்.)

எனக்குத் தெரிந்து விஜயுடனான மூன்றாண்டுகளில் அவன் குடிக்காமல் இருந்தது, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் மட்டும் தான்.

விஜயின் வகுப்பு நண்பர்களில் ஒரு சிலரைத் தவிர பலரும் ஓசியில் குடிப்பதற்காகவே அவனோடு அலைந்து கொண்டிருந்தனர். ஓசிக் குடியோடு நிறுத்தாமல் அறைகளில் வாந்தி எடுத்து வைப்பதும், நான் சுத்தம் செய்வதுமாக சில விஷயங்களில் விஜயோடு சண்டை போட்டிருக்கிறேன்.'ஓசிக் குடிகளிடம்' நான் எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் எங்கள் அறைக்கு வருவதை நிறுத்தவே இல்லை.

விஜய் ஒரு முறை 'காக்டெயில்' கலக்குவதாகச் சொல்லி பிராந்தி+விஸ்கி+ஒயின்+பழச்சாறு+உப்பு என எல்லாவற்றையும் கலந்து கொடுக்க அறையில் உள்ள எல்லோரும் வாந்தியும், பேதியுமாக அலைந்தது போன்ற சம்பவங்களும் உண்டு.

குடித்து விட்டு போதையில் விழுந்து கிடப்பவர்களை மட்டுமே பார்த்த எனக்கு, மது அருந்தி விட்டு விஜய்,கோகுல்,வினோத்,பாண்டி என்று யாவரும் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது, ஆச்சரியத்தை தருவதாகவே இருந்தது.

கோழியின் கால்கள் குப்பையைக் கிளறுவதைப் போல, மது பலருக்கும் வேதனையான நினைவுகளை கிளறிவிடுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது புலம்புவதும்,வாய் விட்டு அழுவதும், விழுந்தடித்து தூங்கிவிடுவதுமாக அமைந்து விடுகிறது. ஆனால், விஜயைப் பொறுத்த வரை 'மது' என்பது கண்ணுக்குத் தெரியாத உற்சாகத்தை கொணரும் ஒரு மாயத் திரவமாகவே இருந்து வந்தது. அதை பல நேரங்களில் நான் நேரடியாகவே பாத்திருக்கிறேன்.

விஜய் குடிப்பதோடு மட்டுமே நிறுத்தி விடாமல் படிப்பிலும் சிறந்து விளங்கினான். சென்னையில் B.com., முடித்தான். சிங்கப்பூரில் M.B.A., முடித்து விட்டு தற்போது அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். இப்போது குடிப்பதில்லயாம்!? நம்புகிறோம்!

விஜய் தன்னையும் அறியாமல் ஒரு பழமொழியைப் பின் பற்றியிருக்கிறான்.'களவும் கற்று மாற' என்பதே அது.

இவை எல்லாம் நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறது. ஆனால், காலம் நமக்கு மிச்சம் வைப்பது வெறும் நினைவுகளை மட்டும் தான். அந்த நினைவில் விஜயின் உற்சாகமும், பிராந்தி கிளாசின் மனமும் நிறைந்திருக்கிறது. நினைவில் அமிழ்ந்து போவது போல சுகம் எதுவும் உன்ன்டா இந்த உலகில்?

Sunday, November 30, 2008

தரமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் மட்டும் வரட்டும்!

'தங்கராசு மாமா, தங்கராசு மாமா' என்று ஒவ்வொரு நொடியும் உருகும் 'மாரியாயி' என்ற தூய ஆத்மாவின் கதை தான் 'பூ'.

எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போயி' என்ற சிறுகதை, இயக்குனர் சசியால் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. திலகவதி i.p.s அவர்களால் ச.தமிழ்செல்வனின் சிறந்த பத்து கதைகள் 'முத்துக்கள் பத்து' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது (விலை-ரூ40). அதில் முதல் கதையாக இந்த 'வெயிலோடு போயி' அமைந்துள்ளது. அதை நான் படித்தபோது உண்டான உணர்வு, எவ்வளவு தூரம் திரையில் சாத்தியமாகும் என்ற கவலை இருந்தது. ஆனால் 'பூ' திரைப்படத்தைப் பார்த்தபோது கதை, கவிதையாக மாறி அதில் மாரியாயி(பார்வதி) உயிரூட்டப்பட்ட பிம்பமாக அலைந்து கொண்டிருந்தாள்.

நண்பர்களே முடிந்தால் நீங்கள் சிறுகதையைப் படித்துவிட்டு திரைப்படத்தைப் பாருங்கள். அந்த சிறுகதை உங்களுக்குள் உருவாக்கும் பிம்பம் மிகவும் அற்புதமான தோற்றம் கொண்டது.ஒரு திரைப்படத்தை அணுகும் முறை அல்லது படம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை:

1) முதலில் திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பாருங்கள்.
2)திரைக்கதையில் ஏதேனும் குளறுபடி இருந்தால் மட்டும் விவாதம் செய்யுங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்கு திரைப்படத்தை வளைக்கப் பார்க்காதீர்கள்.
3)படம் 'slow'வாக இருக்கிறது என்ற மோசமான மனநிலையைத் தூக்கி எறியுங்கள்.
4)'திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5)திரைப்படத்தின் எல்லைகளை தீர்மானிப்பது கதையும், திரைக்கதையும் தான்.
6)இந்த செய்திகள் தரமான சினிமாவிற்க்கு மட்டுமே பொருந்தும். தரமான சினிமா எதுவென்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் 'பூ'.

மேற்கொண்டு 'பூ' திரைப்படத்தைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை. அந்த அற்புதத்தை நீங்கள் நேரடியாக சென்று உணருங்கள். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திட்க்கு நாம் கொடுக்கும் மரியாதை.

'தெனாவட்டு' போன்ற மட்டரகமான படங்களையெல்லாம் சன் டி.வி, சூரியன் fm, குங்குமம் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் மிகையான விளம்பரங்களைக் கொடுத்து நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். அப்போது தான் தரமான சினிமாவிற்க்கு தரமான ரசிகர்கள் கிடைப்பார்கள். 'பூ' திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். ஆரோக்கியமான விவாதங்களைத் தொடரலாம்.

Monday, November 24, 2008

நடிகர் விஜய் அவர்களே தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்!

நடிகர் விஜய் அவர்களுக்கு,
எந்த ஒரு நாட்டில் கலையும், அரசியலும் சிறந்து விளங்குகிறதோ அந்த நாட்டில் உள்ள மக்கள் அறிவிலும், செல்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், நமது தமிழ்நாட்டில் 'திரைப்படம்' எனும் 20ம் நூற்றாண்டின் ஒரு ஆகச்சிறந்த கலையை மிகமோசமாக பயன்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை.

வாழ்க்கையை பதிவுசெய்யும் கலையை பொழுதுபோக்குக் களமாக, நடனம் எனும் நளினத்தை குரங்காட்டமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்.

ஒரு மனிதன் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறானோ அந்தத் துறையை தன்னால் இயன்றவரை சில கட்டங்களாவது உயர்த்துவானேயானால், அவன் மதிப்பிற்குரியவன் ஆவான். பாலுமகேந்த்ரா, மகேந்திரன், மணிரத்னம், பாலா போன்ற சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் உயரத்தை அதிகரிக்க முயலும் போதெல்லாம் குரங்காட்டம் மூலம் நிங்கள் அதனை தெருவுக்கு இழுத்து வந்து விடுகிறீர்கள். இந்த உண்மையை எந்த ஒரு தரமான சினிமா விரும்பியும் மறுக்கமாட்டான்.

அடுத்ததாக அரசியல். அரிசி கொடுத்தவன், அயன் பாக்ஸ் கொடுத்தவன், காலை ஏழு மணிக்கே மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு 8லிருந்து 4மணிவரை உண்ணாவிரதம் இருந்தவனெல்லாம் அரசியல் நடத்தினா நாடு எப்படி இருக்கும்.

சினிமாவைக் கெடுத்து போதாதென்று அரசியல் வேறு. விஜய் அவர்களே உங்கள் தந்தையைப் போன்று குடும்ப உறவுகளை!? சித்தரிக்கும் (கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த) படங்களை எடுக்கும் சிந்தனைவாதிகள் உங்கள் பின்னே இருப்பது தான் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

உங்களுக்காக ரசிகர்கள் 37ஊர்களில் உண்ணாவிரதமிருந்தார்கள். சராசரியாக 50 பேர் என்று கணக்கிட்டால் மொத்தம் 37 X 50 = 1850 பேர். டெப்பாசிட் பணம் கூட கிடைக்காது சார்.

நான் கூறுவது இல்லாமல், உங்கள் கணக்கு சரியாகுமானால் எங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. ஏற்கனவே அரசியல் கெட்டுவிட்டது. நீங்களும் கெடுக்க வேண்டாம். உங்களுக்கு உரிமை இருக்கிறது தான். மறுப்பதற்கில்லை. நேர்மையானவர்கள் வரட்டும்.

நிஜத்தில் நடித்தது போதும்; இனியாவது சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள். நான் வேண்டுமானால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களில் பயன்படுத்திய 'ஒரே பாடலில் பணக்காரனாகும்' பாடல் கேசட்டை வாங்கித்தருகிறேன். வைத்துக்கொண்டு பெரிய ஆள் ஆகிவிடுங்கள்.

"சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேண்டும் பேரப்புள்ள" என்று உங்கள் படங்களுக்கு தொடர்ந்து ஜால்ரா பாடல்களை எழுதி வரும் பா. விஜய்யைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன். அதனால் தான் சொல்கிறேன்.நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்!

Saturday, November 15, 2008

அந்த அயோக்கியனை தேடிக் கொண்டிருக்கிறேன்!


இந்த உலகத்தில்
யாரைவிடவும்
என்னை அதிகமாய் வெறுப்பவன்
ஒருவன் இருக்கிறான். அவன்,
நான் சிரிக்கும் பொழுது
என்னை உறுத்தும்படியாகப் பார்க்கிறான்
நிலைகுலைந்து கண்கள் கலங்கும் தருணங்களில்
பரிகாசம் செய்கிறான்.

வெயில் எரிக்கும் சமயங்களில்
மூச்சுக் காற்றால்
மேலுமென்னை சுட்டெரிக்கவும்,
இரவுகளில் தனிமைப்படுத்தவும்
அவன் தயங்குவதேயில்லை.

முற்றங்களில் தொலைத்துவிட்டுப் போகவும்
நான் வாழ்நாள் முழுக்க நோகவும்
அவன் தன்னை உரமேற்றிக் கொண்டிருக்கிறான்.

என்னைப் பலகீனப்படுத்தும்
அவனிடம் ஒரே ஒரு உதவிகேட்டேன்.
"நான் மீள முடியாதபடி
தயக்கம் என்னை
இரு கரங்களாலும் பற்றிக் கொண்டுள்ளது.
என்னைத் தயக்கங்களிலிருந்தும், தனிமையிலிருந்தும்
விடுவிக்கும் ஒருத்தி இருக்கிறாள்.
அவளிடம் என் காதலைச் சொல்ல
உதவி செய்" என்றேன்.
மறுத்தான் அவன்.

அவன் கால்களில் விழுந்து அழுதேன்.
எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்தான்.

அந்த அயோக்கியன் எனக்குள் இருக்கிறான்,
நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Tuesday, November 11, 2008

வாழ்க்கை கருணையற்றது!


டென்சிங். இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் பறந்தபடி குண்டு மழை பொழிந்த அமெரிக்க வீரரென நினைத்து விடாதிர்கள். காரைக்குடியில் எனது சிறு வயது தோழன்.இப்போது மினி லாரி ஓட்டுனராக உள்ளான்.

நீலகிரி மாவட்டம் உயிலட்டி கிராமத்திற்க்கு, காரைக்குடியிலிருந்து தேக்கு கட்டைகளை எடுத்துக்கொண்டு ஒரு இரவில் இருவரும் பயணமானோம். அன்றைய இரவு பேசிக் கழித்த படியே இருளில் கரைந்தது. எதிரே வரும் வாகனங்களின் விளக்கொளிகள், கண்களில் வலிஏறச் செய்திருந்தன. தூக்கம் கண்களை அழுத்த தேநீர் அருந்தி விட்டு மீண்டும் உதகை நோக்கி பயணித்தோம். காற்றைக் கிழித்தபடி லாரி விரைந்து கொண்டிருந்தது.

லாரி ஓட்ட ஆரம்பித்த புதிதில் தடுமாறிய டென்சிங், இப்போது ஒரு இரும்புக் குதிரையை போல் லகுவாக செலுத்தினான்.அவனுக்கு முதல் மலை பயணம் என்பதால் இயற்கையை ரசிக்க விடாத படி பயம் குளிரைப்போல இருவரின் உடலுக்குள்ளும் கசிந்து கொண்டிருந்தது.

உயிலட்டி நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அழகாக இருந்தது. தேக்கு கட்டைகளை இறக்கி வைத்த பின்பு படுகர் இனத்தை சேர்ந்த திப்பையன் என்பவரது முன்னூறு ஆண்டுகள் பழைமையான வீட்டிற்க்கு சென்ற போது, வீடு முழுக்க மயக்கும் வஸ்துவின் வாசனை எழுந்தது. திப்பயனிடம் கேட்டபோது ஜாடி நிறைய கஞ்சா இலைகளை எடுத்து காண்பித்தார்.அன்று முழுக்க திப்பயன்,"சரக்கு வாங்கித்தா, சிகரெட் வாங்கித்தா" என்று எரிச்சலூட்டினான். பொறுமையிழந்த டென்சிங், திப்பயனை அருகில் அழைத்து வந்து திட்டி விட்டான். திப்பையனுக்கு போதை இறங்கிப்போனது.

அன்று மாலை, மலையிலிருந்து கிழே இறங்கிக்கொண்டிருந்தோம். குளுமையான காற்று நாசியில் ஏறி அற்புதமான சுகந்தத்தை தந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் இரவு பகலாக வண்டி ஒட்டிய காரணத்தால் தூக்கத்தை கட்டுப்படுத்திய படி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். மறுநாள் காலை காரைக்குடிக்கு செல்ல வேண்டும் என்பதால் தூக்கத்தை மறந்திருந்தான்.இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய் கரி அங்காடியில் காரைக்குடிக்கு எடுத்துச்செல்ல சரக்கு ஏதேனும் உள்ளதா என கேட்ட பொழுது ஏற்கனவே சரக்குகள் எடுத்து செல்லப்பட்டிருந்தன.ஏமாற்றத்துடன் காரைக்குடி நோக்கி விரைந்து கொண்டிருந்தது லாரி.


உறவுகள்,உணவு,உறக்கம்,சிரிப்பு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அவன் நாயாய் அலையும் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது யாரால்? டென்சிங் வசிக்கும் தெருவில் அவனது பெற்றோரைத் தவிர அனேகபேர் ஆசிரியர்கள். டென்சிங் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரன். இளங்கலை பொருளாதாரத்தில் பல்கலைகழக அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்றவன். அவனுடைய கனவுகள் யாவும் தன் ஒரு வழக்கறிஞர் ஆவதே.

அவனது பெற்றோர்கள் அவனை M.B.A., படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அவர்கள் என்ன செயவார்கள்?சுற்றி உள்ளவர்கள் M.B.A., பொறியாளர் என்று பெருமை பேசும் பொழுது, படிப்பறிவு இல்லாத அவனது பெற்றோர்களுக்கு அப்போது தெரியவில்லை. சிபாரிசு இல்லாத நடுத்தர குடும்பங்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பென்று.

ஒரே ஒரு பையனை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க விரும்பாத அவனது பெற்றோர்கள் டென்சிங்கின் கல்லூரி சான்றிதழை மறைத்து வைக்க பிரச்சனை பூதாகரமானது.பக்கத்துக்கு வீட்டு ஆசிரியர்கள் நள்ளிரவு பஞ்சாயத்து நடத்தினார்கள். குடித்திருந்த அவனது அப்பா அவனின் தோளை பிடிக்க முயன்று தடுமாறி கீழே உள்ள கல்லில் விழுந்தார்.பின் மண்டையில் அடி பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, துணிகளை அள்ளிக்கொண்டு அவனது அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறஇப்போது அந்த வீட்டிலிருப்பது வெறுமை மட்டும் தான். இந்த அனைத்து பிரச்சனைகளும் நடந்தேறியது, டென்சிங்கின் சட்டக்கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு முந்தய நாள் இரவு.

எப்போது டென்சிங் வீட்டிற்க்கு சென்றலும் விருந்து பரிமாறும் அவனது அம்மாவையும், "நான் எந்த பொண்ணு பின்னாடி சுத்தி, ஊர் சண்டை போட்டுட்டு இருந்தேன்.படிக்கனும்னு தானே ஆசைப்பட்டேன்" என்று புலம்பும் டென்சிங்கையும் நினைக்கையில் மனது தன்னை அறியாமல் மவுனம் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை வந்த டென்சிங் என்னுடைய அறைக்கு வந்திருந்தான். வீட்டருகே புதிதாக திறந்திருந்த உணவகதிட்க்கு அவனை அழைத்துச்சென்றிருந்தேன். ஆரம்ப நாட்களில் சுவையாக உணவு பரிமாறப்பட்ட அந்த உணவகத்தில் அன்று எதுவுமே நன்றாக இல்லை.(அன்றிலிருந்து ஒருநாள் கூட அங்கு பழைய சுவையில் உணவு பரிமாரப்படவே இல்லை என்பது வேறு கதை) காசு, பணம் தான் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அரை குறையாக சாப்பிட்டும்,சாப்பிடாமலும் அவன் காரைக்குடிக்கு திரும்பிய போது, அவனை சூழ்ந்த நெருக்கடிகள் ஒரு இரவைப்போல பிசுபிசுப்புடன் என்னில் இறங்கி அழுத்தத் துவங்கியது.

இரவு சென்னையிலிருந்து கிளம்பியவன் அதிகாலை புதுக்கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவனது லாரியில் சிக்கி ஒரு பெரியவர் இறந்து போனார். அன்றிலிருந்து ஒரு வாரம் அவன் லாரியை எடுக்காமல் மதுவில் கரைந்து கொண்டிருந்தான்.

"வாழ்க்கை கருணையற்றது.அது யாவரின் வாழ்க்கையையும் ஒரு வெற்றிலையை மென்று துப்புவதைப் போல உதட்டில் ரத்தச் சாறு வழிய கடந்து போய் விடுக்கிறது" என்று எஸ்.ராமகிருஷ்ணன் நெடுக்குருதி நாவலின் முன்னுரையில் எழுதியிருப்பார். அது உண்மை தானோ என்னவோ?

"காசுக்கும், பணத்துக்கும், ஊரார் பெருமைக்கும் ஆடக் கற்றுக்கொண்டோம். இது எத்தனை பெரிய அவமானம். வாழ்க்கை ஒரு கவிதை புத்தகத்தைப் போலவோ, நாவலைப் போலவோ இயல்புகளின் பதிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அக்கௌன்ட் நோட்டைப் போல வாழ்க்கை வெறும் வரவு,செலவுகளின் பதிவாக இருப்பின், கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பின்பு நீங்களோ,நானோ தூர தூக்கி எறியப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளவோம்.

பின்குறிப்பு:
அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட டென்சிங், ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.

புதிய தகவல்:

கை செலவுக்காக சென்ற வாரம் டைல்ஸ் கல் ஏற்றிக்கொண்டு கோட்டயம் சென்ற டென்சிங்,

1)ஒற்றை விளக்குடன் வாகனம் ஒட்டியது.
2)முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டியது.
3)சீருடை அணியாமல் இருந்தது.
4)ஓவர் ஸ்பீட்.
5)ஓவர் லோடு,
என்று ஐந்து 'கேஸ்' வங்கி வந்திருக்கிறான். கூடிய சீக்கிரமே வக்கீல் ஆகிவிடுவான் போல. என்ன நான் சொல்வது சரிதானே?

Sunday, November 9, 2008

சூப்பர் ஸ்டாரும்,'என்னத்த' கண்ணையாவும்!


நான்கு நாட்களுக்கு முன்னதாக எந்த சேனலை பார்ப்பது என்ற குழப்பத்துடன் ரிமோட்டை வைத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது சன் தொலைக்காட்சியில், ரஜினி தன் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.


ரிமோட்டை கீழே வைத்துவிட்டு, ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ரஜினியின் முகமானது, நடிகர் 'என்னத்த' கண்ணையாவை நியாபகப்படுத்தியது. எந்திரனில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினியும், தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வரும் 'என்னத்த' கண்ணையாவும் மிக நெருக்கமான உருவ அமைப்புடன் இருந்தார்கள்.

'ரஜினி' என்ற நடிகனை வியாபாரிகள் (தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்) பன்ச் வசனம் பேசவைத்து வசூல் மன்னனாக மாற்றிவிட்டார்கள். ஆனால் 'என்னத்த' கண்ணையா பேசிய வசனங்கள்...

"என்னத்த...போயீ.., என்னத்த...செய்ய..?" (மன்னன்)
"வரும்... ஆனா வராது..!"
"சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு...மின்னுரிங்க..."(தொட்டால் பூ மலரும்) இப்படியே இழுத்து இழுத்து வசனம் பேசி, வெறும் கண்ணையா 'என்னத்த' கண்ணையாவாக மாறிவிட்டார்.
என் நண்பன் மகேஷ் அடிக்கடி சொல்வது மாதிரி எல்லாத்துக்கும் கட்டம்(ஜாதகம்) நல்லா இருக்கணும் போல! நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட கட்டம் நல்லா இருக்கானும் போல.., என்னுடைய கட்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்; இருளில் மூழ்கியபடி...

Monday, November 3, 2008

புலிகளின் தீபாவளி!

அக்டோபர் 28ம் தேதி காலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குமாரபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம். ஆனால் அவர்களின் குறி தப்பி... போரினால் இடம் பெயர்ந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியது. இதில் மூன்று பேர் இறந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட பிரபாகரன் இலங்கை ராணுவம் மீது விமானத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

28ம் தேதி இரவு புலிகளின் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், மன்னார் மாவட்டத்திலுள்ள தள்ளாடி என்ற இடத்தில் இருக்கும் சிங்கள ராணுவ தரைப்படைத் தளத்தை இலக்கு வைத்து சீறிப்பாய்ந்தது. சரியாக 10.20 மணிக்கு இலக்கை அடைந்த புலிகளின் விமானம் தரைப்படைத் தளத்திற்க்கு நேர் உச்சியிலிருந்து மூன்று குண்டுகளை அடுத்தடுத்து பிரசவிக்க தரைப்படைத்தளம் வெடித்து சிதறியது.

"இந்த தளத்தில் இயங்கிவந்த ரேடார் முற்றிலுமாக லாக் ஆகி விட்டதால் புலிகளின் விமானத் தாக்குதலை தடுக்க முடியவில்லை. சீனாவிலும், இஸ்ரோவிலிருந்தும் தருவித்த அதி நவீன 20 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளது" என்கின்றனர் ராணுவத்தினரே.

இலங்கை ராணுவம் சுதாரிப்பதட்க்குள் இலங்கையின் வட பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு அப்படியே கிழக்கு பகுதியில் உள்ள கொழும்பு நகரை நோக்கி அதிவேகத்தில் சீறிப்பாய்ந்துள்ளனர் வான் படையினர்.

கொழும்பு
நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெலனி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் கேலனிதிச அனல் மின் நிலையத்தை சரியாக இரவு 11.45க்கு இரண்டு குண்டுகளை விடுவித்து ட்ராம்ஸ்பார்ம்களையும் அழித்தனர்.
தாக்குதல் நடந்த சமயத்தில் மின் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்பலி நிகழவில்லை.

163 மெகாவாட் மின்
சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், சுமார் 800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையம் தான் கொழும்பு நகரத்தின் மின் தேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. "அதி முக்கியமான இந்த மின் நிலையத்தை குறிவைத்து புலிகள் தாக்கியதை அறிந்து ராணுவத்தினரே நிலை குலைந்து விட்டனர்" என்கிறார்கள் மிரட்சியுடன் கேலனிதிச மின் ஊழியர்கள்.

பின்குறிப்பு:
1) கொழும்பு நகரத்திற்
க்கு மற்றொரு பகுதியிலிருந்து மின்சாரம் வழங்க 4 மணி நேரம் போராடியிருக்கிறார்கள்.

2) இது விடுதலைப் புலிகளின் 8வது ஏர்அட்டாக்.

3) ஒரே சமயத்தி இரண்டு தாக்குதலை புலிகள் நடத்தியதும் இது தான் முதல்முறை.


4) வடக்கில் அட்டாக் நடத்தியதுமே, ராணுவத்தின் அத்தனைப் படைகளும் உஷார் நிலைக்கு வந்துவிட்டன. அப்படியிருந்தும் இலக்கை தாக்குவதட்க்காக ஒன்னே கால் மணி நேரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த புலிகளின் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளது ராணுவம்.

5) இரு மாதங்களுக்கு முன்னால் வவுனியா ராணுவ முகாம் மீது புலிகள் ஏர் அட்டாக் நடத்திய போது இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்தி:
"புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம். அவர்களிடம் விமானப்படை இனி இல்லை
நன்றி:நக்கீரன்

Sunday, October 26, 2008

என்ன கொடுமை சார் இது!

3iorn:
இயக்குனர்: கிம் கி-டுக்
மொழி :கொரியா

Filmography

Year English title Korean title Transliterated title
1996 Crocodile 악어 Ag-o
Wild Animals 야생동물 보호구역 Yasaeng dongmul bohoguyeog
1998 Birdcage Inn 파란 대문 Paran daemun
2000 Real Fiction 실제 상황 Shilje sanghwang
The Isle Seom
2001 Address Unknown 수취인불명 Suchwiin bulmyeong
Bad Guy 나쁜 남자 Nabbeun namja
2002 The Coast Guard 해안선 Haeanseon
2003 Spring, Summer, Autumn, Winter... and Spring 봄, 여름, 가을, 겨울 그리고 봄 Bom yeoreum gaeul gyeoul geurigo bom
2004 Samaritan Girl 사마리아 Samaria
3-Iron 빈집 Bin-jip
2005 The Bow Hwal
2006 Time 시간 Shi gan
2007 Breath Soom
2008 Sad Dream 비몽 Bimong


குரு என் ஆளு(உலக சினிமா):

இயக்குனர்: செல்வா
மொழி: தமிழ்
திருடியது: கொரியத் திரைப்படத்திலிருந்து....
இயக்குன செல்வாவிட்க்கு தமிழக முதல்வர் அவர்களால் 2009 இல் கலைமாமணி விருது வழங்கப்படும்.

அடங்கப்பா கதையத்தான் திருடினிங்க, போஸ்டரையுமா? உங்கள் கலைப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Thursday, October 23, 2008

காலம் மறந்த கலைஞன்

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களைத் தந்ததில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு மிகப் பெரியது. மிகக் குறைவான திரைப்படங்களில் தன்னுடைய ஆளுமையை நிருபித்தவர். (பாரதியின் கவிதையைப் போல). ஆனால், இன்று கேளிச் சித்திரங்களை உருவாக்கும் பேரரசு போன்றோரின் அளவுக்குக் கூட இயக்குனர் மகேந்திரனின் பெயர் உச்சரிக்கப்படாமல் போனது, மிகப் பெரிய அவலம்.


மகேந்திரன் இயக்கிய திரைப்படங்கள்:
1) முள்ளும் மலரும்
2) உதிரிப் பூக்கள்
3) பூட்டாத பூட்டுக்கள்
4) ஜானி
5) நெஞ்சத்தைக் கிள்ளாதே
6) மெட்டி
7) நண்டு
8) கண்ணுக்கு மை எழுது
9) அழகியக் கண்ணே
10) ஊர் பஞ்சாயத்து
11) கை கொடுக்கும் கை
12) சாசனம்
13) அர்த்தம் (Teleplay)
14) காட்டுப் பூக்கள் (Teleplay)
மேலும் 26 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

லீலா மணிமேகலை அவர்களால் நடத்தப்பட்ட (இப்போது நின்றுவிட்டது) 'திரை' மாத இதழில் (ஜனவரி 2006), புதிய தலைமுறை தமிழ் சினிமா பற்றிய கேள்விக்கு இயக்குனர் மகேந்திரன் அளித்த பேட்டியின் சிறு பகுதி:

புதிய தலைமுறை தமிழ் சினிமா பத்தி உங்கள் கருத்து?
"இப்ப உள்ள இளைஞர்கள் சினிமாவில் வெற்றி பெறணும்னு நினைக்கிறாங்களே தவிர அதற்குரிய உரத்தை ஏற்றிக்கொள்ள மறுக்குறாங்க. இலக்கியம் படிக்கிறதில்லை. சமுகத்தை அவதனிக்கிறதில்லை. ஒரே ஒரு கேள்வி, காதலைத் தவிர நமக்குச் சொல்லறதுக்கு வேற ஒன்னும் இல்லையா? சர்வதேச அரங்கில் தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் தமிழர்களுக்கு ஐ லவ் யூ சொல்றதைத் தவிர வேறு பிரச்சினையே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரவில் நிர்வாணமாக இருப்பார்கள் கணவனும், மனைவியும், பகலில் மனைவி உடை மாத்தும்போது கணவன் வந்துட்டா அய்யய்யோ என்று பதறி கதவைச் சாத்துவாங்க. அது அழகு. வாழ்கையில் ஆழமான விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு டூயட், குத்துப்பாட்டு என்று எடுப்பது சரியில்லை. கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட காட்சிக்குத் தேவைப்படும்போது அப்படியே காட்டுவதில் தவறில்லை. ஆனால் கையை வெட்டி, காலை வெட்டி, pelvic movements காட்டி, ஆபாசமாக நடனமாட விடுவது கோரம்.கோவிலில் நிர்வாண சிலைகள் இருக்கு. ஆனா அதை ஏன் கோவிலில் வச்சாங்க. இவ்வளவுதாண்டா, பார்த்துகோங்க என்று கோவிலில் தெய்வங்களை நிர்வாணமாக்கியிருந்தங்க நம்ம முன்னோர்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களிலை. இங்கு கதை இல்லாமல் கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் தொப்புள் இல்லாமல் படம் எடுக்கிறார்களா? ஆண் லுங்கியைத் தூக்கிக் காட்டுகிறான். பெண் பாவாடையைத் தூக்கிக் காட்டுகிறாள். மானக்கேடு".

இயக்குனர் மகேந்திரனின் சாதனைகள் சொல்லில் அடங்காது. மனதுக்கு நெருக்கமானது. இளம் இயக்குனர்கள் யாராவது, ஏதாவது ஒரு பத்திரிக்கையில் 'தனக்கு பிடித்த படம் உதிரிப் பூக்கள்' என்று பேட்டி கொடுப்பதோடு மகேந்திரன் மறக்கப்படுக்கிறார். இயக்குனர் மகேந்திரனின் சாதனைக்கு நிகரான மரியாதையை நாம் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Monday, October 20, 2008

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்!

அன்று:
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பொழுது, அரசியல்வாதிகள் பலராலும் கோமாளியாக சித்தரிக்கப்பட்டார். ஆனால் எந்த குரலுக்கும் நடுங்கி விடாத விஜயகாந்த் தொடர்ந்து தன்னுடைய குரலையும் உயர்த்திப் பேசினார்.

அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதி, விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தார். விஜயகந்திட்கு பதில் தந்து அவரை பெரிய ஆளாக மாற்ற வேண்டாம் என்பதே கருணாநிதியின் நோக்கமாக இருந்தது.இந்த நேரத்தில் தான் ஜெயலலிதா, விஜயகாந்தைப் பார்த்து 'குடிகாரன்' என்று சொல்ல, பதிலுக்கு விஜயகாந்தும் 'ஆமாம், நீங்க தான் ஊதிக் கொடுத்திங்க' என்று சொல்ல, அரசியல் நாடகத்தின் 'பன்ச்' பறக்க ஆரம்பித்தது. காலை, மாலை, வார, மாத இதழ்கள் எல்லாம் இந்த டீக்கடை சண்டையை புலனாய்வு செய்தன.


அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க கணிசமான வாக்குகளைப் பெற, அரசியல் வாதிகள் பலரும் ஆடித்தான் போனார்கள். அதைத் தொடந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க 27% வாக்குகள் பெற, விஜயகாந்தின் கோமாளி பிம்பம் களைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் தயாநிதி மாறனுடனான மனமுறிவிட்கு பிறகு சன் குழுமத்திலிருந்து இருந்து வெளியேறியது தி.மு.க. நுழைந்தது தே.மு.தி.க.

நேற்று:

18.10.08 சனிக்கிழமை தீவுத் திடலில் நடைபெற்ற தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டில் பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். விஜயகாந்தும் கார சாரமாக வார்த்தைகளை அள்ளி வீசினார். குறிப்பாக குடும அரசியலைப் பற்றி பேசினார். (மனைவியையும், மைத்துனரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு முதலில் காமெடியாக, நேரம் ஆக ஆக இன்னும் காமெடியாக). சன் குழுமம் அதனை வரிந்து கட்டிக் கொண்டு ஒளிபரப்பியது.

இன்று:

பிரியாணி பொட்டலங்கள் கொடுக்காமலேயே பதினைந்து லட்சம் பேர் திரண்டதால் பொறுக்காத தி.மு.க ஆதரவு மாலை நாளிதழான எதிரொலி, 19.10.08 அன்று வெளியிட்ட செய்தியின் விபரம்:

"கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி கோட்டைக்கு வந்து விட முடியாது. அரசியல் பயணம் இதுவல்ல. சில ஜென்மங்களுக்கு சொன்னால் தெரியாது. பட்டால் தான் புரியும். விஜயகந்திட்கு போகப் போகத்தான் புரியும். இன்னும் அரசியல் சோதனைகள் அவருக்கு ஆரம்பிக்கவே இல்லை. எல்லாம் இனிமேல் தான் இருக்கிறது."

இதில் திருக்குறள் வேறு;

"உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல

கற்றும் கல்லார் அறிவிலாதார்"

(நல்லவேளை திருவள்ளுவர் உயிரோடு இல்லை)


இந்த வார்த்தைகளின் நோக்கம் விஜயகந்திட்க்கு அறிவுரை தருவதல்ல; எச்சரிக்கையை முன் வைக்கிறது. எதிரொலி நாளிதழ் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்க வேண்டாம்.

நாளை:

இதையெல்லாம் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ரசிப்பார்களா?

பின்குறிப்பு:

கட்சிகளும், தலைவர்களும் தீவிர கதியில் கேவலங்களாக மாறிக்கொண்டிருக்க, நாடு நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கருப்பு, வெள்ளைத் திரைப்படத்தில் (பெயர் தெரியவில்லை) நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்கள் "இந்த நாடும் நாடு மக்களும் ஒரு நாள் நாசமாய்ப் போகும்" என்று நக்கலாகச் சொல்வார். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் பி.எஸ்.வீரப்பாவின் வார்த்தைகள் நிஜமாகக் கூடும்.

Friday, October 17, 2008

முற்றுப்பெற்ற கவிதையும், முடிவில்லாத கோபங்களும்...

நாய்கள் யாவும்
நிலை குலைந்து ஓட
முடிந்த மட்டும்
சிறகடித்துப் பறக்கிறது
ஒரு பெட்டைக் கோழி

அதிர்ந்து அடங்குகிறது
பாதசாரியின் மனம்
சிறகொடிந்து விழுகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்

ஆனாலும்
கானலை விரட்டியபடி செல்கின்றன
நெடுஞ்சாலை வாகனங்கள்!
.................................
................................
இலைகளின்
......................................
மண்டியிட விருப்பமில்லாததால்
அவஸ்தைகள் நீள்கிறது
ஆனாலும்
மண்டியிட முடியாது
என்னால்!
......................................
இனி
அப்பாவின் தயவு தேவையில்லை
வேலை கிடைத்து
அடிமை சாசனம் எழுதுகிறேன்
பிழைத்துக் கொள்வேன்!

Sunday, October 12, 2008

நடிகர், நடிகைகள் தேவை!

என்னுடைய கல்லூரி நண்பன் விஜய்வரதராஜன் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க உள்ளான். சிறப்பான கதை அம்சத்துடன் உருவாகும் இத் திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருகிறது. டிஜிட்டல் முறையில் தயாராகும் இத் திரைப்படம், இந்தியாவிலேயே முதல் முறையாக "DEPTH OF FIELD ADAPTER" எனும் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

vijayvaratharajan
Phone: 9840855156

E-mail:
vijayvedha01@yahoo.co.in

Thursday, October 9, 2008

தேவதைகள் உலாவும் வீதி

புளிய மரத்தின் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி அலறும் பேய்களும், என் மாரில் கால் வைத்து கூட்டம் கூட்டமாக ஓடும் டைனோசர்களுமாக என் கனவில் வந்து கொண்டிருந்த காலத்தில், என் கனவுலக நாடகத்திட்க்கு தேவதைகளை அனுப்பி வைத்தவள், அவள். (இங்கே 'அவள்' என்ற வார்த்தை இப்போதைக்கு போதுமானது)

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு மழை நாளில் அவள் என் முன் தோன்றினாள். அப்போது அவள் என்னிடம் ஏதேதோ சொன்னாள்.அவள் உதடு குவியும் புள்ளியில் லயித்துக் கிடந்ததால் எதுவும் புரியவில்லை எனக்கு. அன்றிலிருந்து ஒவொரு நாளும் என் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். (அவர்கள் பாரதிராஜா படங்களில் வரும் தேவதைகளைப் போல அவலட்சணமாக இல்லாமல், அழகாகவே இருக்கிறார்கள்)

எப்போதும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்த தேவதைகள் இரவில் தூக்கத்தையும், பகலில் நிஜங்களையும் தின்று கனவுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவளின் சார்பாக சில பரிசுகளையும் வழங்கினார்கள். அந்த பரிசுகள் யாவும் பரிசளித்தவளையே நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
தேவதை தந்த பரிசுகள் :
. தூக்கம் மறந்த விழிகள்
. நிலை கொள்ளாத மனது
. பசிகளை அறியாத வயிறு

. வருடிய படியே யோசிக்கத் தாடி
. சிதறிய நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் பொறுமை

. இரவின் நீளத்தை அளந்து பார்க்கும் திறமை
. அம்மாவிடம் பரிந்து பேச ஒரு வார்த்தை
. எப்போதும் பூக்கும் ஒரு புன்னகை
. உலகை வெல்லும் நம்பிக்கை
. அவள் வந்து போன மழை நாளின் ஈரம்
. இளைப்பாற விருட்சம்; அதற்க்கான விதைகள்
. கனவுகளைக் கட்டிப்போ சில கவிதைகள்...அவள் வந்து போன
ஒரு மழை நாளில்
புட்கள் பணிந்தன
இலைகள் சிலிர்த்தன
மண் கரைந்தது
கூடவே நானும்...
. . . . . . . . . .

எனக்கென்று இருந்த
ஒரு சிலவும்
இல்லாமல் போனது
நீ போனதும்...
. . . . . . . . . .

இருப்பதற்க்கும்,
இறப்பதற்கும்

அர்த்தம் வேண்டும்
நீ வேண்டும்!
. . . . . . . . . .

எப்போதும் போல்
இருந்தேன்

நான்
நீ வந்தாய்

நான்
இல்லாமல் போனேன்.
. . . . . . . . . . .


மனிதனுக்கும், விலங்கிட்க்குமான

இடைவெளியை

அதிகப்படுத்திக் கொண்டிருந்தாள்
அவள்
அனுபவித்துக் கொண்டிருந்தது
காதல் .
. . . . . . . . . . .


முத்தங்கள் கொடு

எனக்கு உணர்வுகள் போதும்
உதடுகளை நீயே வைத்துக்கொள்.
. . . . . . . . . . .


தூக்கம் வேண்டாம்

நிஜங்களைத் தின்று
கனவுகளை வளர்க்கிறது
அது.

. . . . . . . . . . .


பிரிவு...

நீ வந்தால் மரிக்கும்.

. . . . . . . . . . .

(நீங்கள் இதை கவிதை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதையென்று சொல்லிக் கொள்வதால் நான் சந்தோசப்படுகிறேன். அதனால் கவிதையென்றும் சொல்லிக் கொள்கிறேன்.)

கனவுகளையும், தேவதைகளையும் விலக்கி வைத்து விட்டு, தேவதைகளின் தேவதைகளை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த ஒரு பொழுதில், அவள் அன்று சொல்லி புரியாமல் போன வார்த்தைகளுக்கு தேவதைகள் கூறிய விளக்கம்...

"உன் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பியுள்ளேன். கனவுகளை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிஜங்களை மட்டும் நீயே பார்த்துக்கொள். நீ என்னை பரிசாகக் கேட்காதே. என்னை ஒரு போதும் உனக்கு பரிசளிக்க முடியாது. என்னைப் பற்றி எழுதிச் சாக, உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கூழ் முட்டைகளை அடைகாப்பதால் எந்த பயனும் இல்லை. நினைவில் கொள். என்னை மற!"


நிலை கொள்ளாமல் ஒரு மவுனம் நீள்கிறது...Saturday, October 4, 2008

திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள்!

தொடர்ந்து என் எழுத்துக்களை உங்கள் விமர்சனத்திற்கு திங்க கொடுப்பதிலோ, அதற்க்கு பதில் சொல்லிக் கொண்டும் என் காலத்தை வீணடிக்க விரும்பாத காரணத்தால் இப் பகுதியை நீக்குகிறேன்.

Sunday, September 28, 2008

மதுவில் வீழ்ந்த காதல்!


உங்களுக்கு எத்தனையோ நெருக்கமான நண்பர்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களை முதல் சந்திப்பிலேயே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி எத்தனையோ நண்பர்களை, நான் முதல் சந்திப்பில் புரிந்து கொண்டதற்க்கும், இன்று அவர்களோடு நெருங்கிப் பழகுகையில் நான் புரிந்து கொண்டதத்குமான இடைவெளி மிகவும் நீளமானது.

இப்படியான ஒரு நட்புதான் எனக்கும் நண்பன் பொன்முடிக்குமான உறவு. பொன்முடியின் சொந்த ஊரின் பெயரைக் கேட்டால் '௨.பி' என்பான். நான் வெகு நாட்களாக 'உத்திரப்பிரதேசம்' என நினைத்திருந்தேன். பின்னொரு நாளில் தன் தெரிந்தது அவன் 'உளுந்தூர்பேட்டை' என்று.

பொன்முடியைப் போல நகைச்சுவை உணர்வு கொண்ட நபரைப் பார்ப்பது மிகவும் அரிது. அவனோடு படம் பார்க்க சென்றால், அருகில் இருப்பவர்கள் படம் பார்க்க முடியாது. இது எழுதப்படாத விதி. வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் அடிப்பான்.

இப்படி எப்போதும் சிரித்தும், சிரிக்க வைத்துக் கொண்டும் இருக்கும் அவன், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலிருந்து மொவ்னம் கொள்ள ஆரம்பித்தான். அறையில் உள்ள நண்பர்களோடு பேசுவதைக் கூட முற்றிலும் தவிர்த்தான்.

பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை மருத்துவமனை சென்று ரத்த தானம் செய்து விட்டு இரவு தாமதமாக வந்தான். யார் யாரோ ஏதேதோ கேட்டுப் பார்த்தும் கூட எதுவும் பேச மறுத்தான்.

சூரியன் இறங்கி முகத்தில் விளையாடும் வரை தூங்கும் அவன், பிப்ரவரி மூன்றாம் தேதி சூரியனுக்கு முன்னமே எழுந்து கோவிலுக்குச் சென்றான். திரும்பி வரும் போது மது பாட்டிலோடு வந்து குடிக்க ஆரம்பித்தான். குடிப்பதற்க்கு காரணம் தேவைப் படாத நண்பர்களும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். மதியம் தாண்டியும் யாவரும் மதுவோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த மயக்கம் பொன்முடிக்கு சற்று ஆறுதல் தந்திருக்க வேண்டும். மெதுவாக பேச ஆரம்பித்தான். "பள்ளி நாட்களில் கண்மணி என்றொரு பெண்ணை காதலித்ததாகவும், அவள் ஒரு போதும் தன்னையும், தன் காதலையும் ஏற்க்கவில்லை" என்று நேற்று நடந்ததைப் போல எல்லாவற்றையும் எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்தான்.

மது அருந்திய உதடுகள் என்ன பேசுவது என்று தெரியாமல் வெறுமையை பருகத் தொடங்கின. காரணமற்ற மவ்னம் யாவரையும் நிலை குலைய வைத்திருந்தது. சூரியன் வடக்கே ஓடி ஒளிந்து கொண்ட மாலை நேரத்தில் மது புட்டிகளும், பிரியாணி பொட்டலங்களுமாக அறை முழுவதும் சிதறிக் கிடந்தது. அறையின் அந்த கோலமே மனதில் வலியை உருவாக்கியிருந்தது. பொன்முடி நிலை குலைந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் வழிந்து உறைந்து போயிருந்தது. பின்னாளில் அவன் தன்னிலைக்கு வருவதற்க்கும், உதட்டில் புன்னகை குடிகொள்வதற்க்கும் ஒரு வார காலமாகியது.

பொன்முடியின் காதலை ஏற்பதும், ஏற்காமல் போவதும் அவளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "யாருக்காக இப்படி ஒருவன் மதுவில் வீழ்ந்து கிடக்கிறான்? இரவில் தலையணையோடு காதலில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போய்கிறான். அவள் நினைவிலேயே, அவன் நாட்கள் மூர்க்கம் கொண்டு நகர்கிறது" என்பதையோ அவள் அறிந்திருக்கவில்லை என்பதில் தான் அவனுடைய துயரம் தாளாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு:
வரும் பிப்ரவரி 3ம் தேதி நீங்கள் பொன்முடியை சந்திக்க நேர்ந்தால், உங்களுக்கு நிச்சயமாக நெப்போலியன் ஹாப்போ, குவாட்ரோ கிடைக்கும். ஆனால், அதில் போதை ஏறாது. வெறுமையும், துயரமும் உக்கிரத்தாண்டவமாடும். அருந்திப் பாருங்கள்!

Thursday, September 25, 2008

J.K.ரித்தீஸ் குமார்-காலத்தின் கட்டாயம்

இருபது நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாலையில், என்னுடைய நண்பன் விஜேந்திரன் சிங்கப்பூரிலிருந்து என்னை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினான். இங்கே சென்னையில் இருந்த நாட்களில் காலை பத்து மணி வரை தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் அவன், அதி காலையில் எனக்குபோன் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. போனை எடுத்து பேசிய போது விஜேந்திரனின் குரல் மிகவும் பதட்டமாக இருந்தது.காரணம் கேட்டபோது, அவன்கூறிய செய்திகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

"
முந்தய நாள் இரவு J.K.ரித்தீஸ் குமார் நடித்த நாயகன் படம் பார்த்ததாகவும், அப்போதிலிருந்து இன்னும் தூக்கம் வரவில்லை. நீ அந்தபடத்தைப் பற்றி ப்ளோகில் எழுத வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டான். நாயகன் ட்ரைலரை பார்த்த எனக்குபடம் பார்க்கும் தைரியம் வரவில்லை. ஆனாலும்விஜேந்திரன் எனக்கு தொடர்ந்து போன் செய்து எழுதுமாறு கேட்டுக்கொண்டான்.


"ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா?" என நினைத்ததைத் தவிர எழுதாததட்க்கு வேறு எந்தகாரணமும் இல்லை.

நடிகர் விஜயின் முதல் பட விமர்சனத்தில் "இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்குதேவையா?" எனக் கேட்ட ஆனந்த விகடன், சச்சின் திரைப் படத்திற்க்கு எழுதியவிமர்சனத்தில் "விஜயின் கன்னங்கள் ஆப்பிள் போல இருக்கிறது" என்றுஎழுதியது.(எழுதியவரின் மன நிலையை பற்றி நீங்கள் சாவகாசமாக சிந்தித்துப்பாருங்கள்)

ஆகவே வீரத்தளபதி கவலைப் படத் தேவையில்லை. அடுத்த பட விமர்சனத்தில் விகடன் நண்பர்கள் 100க்கு 35 மதிப்பெண்கள் வழங்கி உங்கள் கன்னங்களை பலாப்பழம் என்றோ அன்னாசி பழம் என்றோ வருணிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ப்ரொடக்சன் மேனஜர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் "வீரத்தளபதி கிட்ட எதாவது இங்கிலீஷ் படக் கதையைசொல்லி படம் பண்ணப்போறேன்" என்று சொன்னேன். அதற்க்கு அவர் அதெல்லாம் சிரமப்பட வேண்டாம். ஏதாவது தமிழ் படக் கதையவே சொல்லி படம் பண்ணிரு!' என்றார்.

ஆகவே நண்பர்களே, இந்த பத்தியை கண்டு கொள்ளாதிர்கள். முடிந்தால் மறந்துவிடுங்கள். விரைவில் வீரத்தளபதியை வைத்து ஒரு படம்(பாடம்) எடுக்கப்போகிறேன். அதற்க்கு உங்களின் மேலான ஆதரவையும் வேண்டுகிறேன்.


Wednesday, September 17, 2008

டென்சிங் - பொன் முட்டையிடும் வாத்து!

இந்த பதிவு 'வாழ்க்கை கருணையற்றது' என்ற பெயரில் நவம்பர் மாதம் பதிவில் புதுபிக்கப்பட்டுள்ளது.

Saturday, September 13, 2008

மானாட மயிலாட-உலகிற்க்கு உணர்த்தும் உண்மைகள்நிகழ்வு -1

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் கணேஷ்-ஆர்த்தி ஜோடி ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி இருகிறார்கள்.
நடிகர் கணேஷ் தனது தந்தையின் மரணத்திற்க்கு பிறகான இறுதிச் சடங்கிற்க்கு கூட செல்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நடனத்தையும் அரங்கேற்றிவிட்டு, பின்பு நாட்டிய சிகாமணி மாஸ்டர் கலாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். நாட்டிய சிகாமணியும் அழுதபடியே ஆறுதல் கூறியிருக்கிறார்.அடுத்ததாக நடிகை ஆர்த்தி.ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதட்க்காக தலையை மொட்டை அடித்திருக்கிறார். அனுதாப அலையில் முழுகிப்போன குஸ்பூ,கலா,ரம்பா (நாட்டிய சிகாமணிகள்) ஆகிய மூன்றுபேரும் ஒன்பது மதிப்பெண்கள் வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்வு - 2

நான்கு நாட்களுக்கு முன்பாக காலை பதினோரு மணியளவில் மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தேன். கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அப்போது பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பள்ளி மாணவனும்,ஒரு பள்ளி மாணவியும் மாரோடு மாறாக உரசியபடி உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
எங்கள் பெட்டியிலிருந்த ஆண்கள்,பெண்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எழுந்து வந்து அந்த மாணவனை காதோடு காதாக நான்கு அறை விட்டார். அந்த மாணவனும்,மாணவியும் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விட்ட பின்பும் கூட யாவரும் அதிர்ச்சி விலகாமல் இருந்தனர்.

இரண்டு நிகழ்வுகளும் விளக்கும் உண்மைகள்:

1) நீங்கள் நிகழ்வு-1ஐ ஏற்றுக்கொண்ட்டீர்கலானால், நிகழ்வு-2ஐயும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

2) தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு ரசித்து மகிழும் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள், நீங்கள் இறந்த பின்பு உங்கள் இறுதிச் சடங்கை கூட அப்படியே போட்டு விட்டு, தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்பார்கள். உங்கள் ஆத்மா அவர்களுக்கு நிச்சயம் ஆசி வழங்கவேண்டும் .

3) மேலும் இது போன்ற வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவும் நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு, பிறிதொரு நாளில் மாரோடு மாராக அணைத்து முத்தங்கள் பரிமாற்ற நீங்கள் அனுமதி வழங்க வேண்டும் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

பின்குறிப்பு:
நான் ஒன்றும் கலைஞருக்கோ, கலைஞர் டி.விக்கோ எதிரானவன் அல்ல. என்னுடைய தாத்தா திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகளாக திராவிட கழகத்தின்பால் பற்றோடு இருந்து, இறந்தவர். எனுடைய கோபம் சாமானியனுக்கான கோபம்.
இறுதியாக..... முத்தம்மிடுக்கொண்ட மாணவனை அடித்த அந்த நபரும், இந்த பத்தியை எழுதும் நானும் எதோ "கட்டியணைத்து முத்தமிட இயலாதவர்கள்" என நினைப்பவர்களும், இந்த பத்தியின் மீது மாற்றுக் கருத்து கொண்டவர்களும், மானாட மயிலாட ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும், கமென்ட் எழுதுவதை விட்டு விட்டு வேறு ஒரு உருப்படியான வேலையைப் பாருங்கள்.

Tuesday, September 9, 2008

எழுத்தாளனின் மனைவி - குறும்படம்2006


கதைச்
சுருக்கம்-
எதிர் வீட்டு நபர் கூட யார் என தெரியாத இன்றைய சூழலில் வாழும் இரு வேறு மனங்களைப் பற்றிய கதை.அடங்காமல் பீறிட்டெழும் தனிமை,அது இட்டுச்செல்லும் உணர்வுநிலைகளின் பதிவு...

இந்த குறும்படத்தில் எழுத்தாளராக நடித்த திரு.செண்பகநாதன்(உபாலி) அவர்கள் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகங்கள்; சுரோனித வானம்(கவிதை), அமரத்தவம்(போர்கே,மார்க்வெஸ்,கால்வினோ மொழி பெயர்ப்பு சிறுகதை), ஆலிஸின் அற்புத உலகம் (மொழி பெயர்ப்புப் புதினம்) ஆகியனவாகும். மேலும் தீராநதி ,நிழல் ஆகிய இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருவதுடன் , தற்போது நாவல் ஒன்றையும் எழுதி வருகிறார்.

இந்த இனிய தருணத்தில் இக் குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக் குறும்படத்தில் எங்களுடன் பணிபுரிந்த பாலாஜி கார்த்திக், சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு இறந்து விட்டான். அவனுக்கு இந்த குறும்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.


http://in.youtube.com/watch?v=zUhy0inJd0w

உங்களுடைய கருத்தை பதியலாம்

Tuesday, September 2, 2008

மானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வைஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாக்குமரியில் வானுயர வள்ளுவர் சிலை, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், மற்றும் செம்மொழி தகுதியை தமிழ் அடைந்தது வரை, கலைஞரின் தமிழ் பணியை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும், நமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிய மனக் குறை ஒன்று இருந்து வந்தது. அது திருக்குறளை ஒட்டி அமைந்த மனக்குறை.

திருக்குறளில் திருவள்ளுவர் "தமிழ்" என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என தமிழாசிரியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இந்த இடத்தில் தன் கலைஞர் நம்முடன் வித்யாசப்படுகிறார். அவர் பல நாட்களாக தலை கீழாக நின்று சிந்தித்ததன் விழைவு (இது ராமன் விழைவைக் காட்டிலும் அற்புதமானது) "மச்சான் விழைவு". இந்த மச்சான் என்ற வார்த்தையையும் வள்ளுவர் பயன்படுத்த வில்லை என்பதை அறிந்த கலைஞர், அதை உலகுக்கு அறிவிக்க ஆசைப்பட்டார். இதன் பயனே கலைஞர் டி.வி. இந்தியாவிலேயே பெயரை பதிவு செய்த அறுபத்து ஐந்து நாட்க்களுக்கு உள்ளாகவே டி.வி சேனலை தொடங்கிய குழுமம் கலைஞர் டி.வி. (அதிகார வர்க்கத்தின் வலிமை நிருபிக்கப்பட்ட இடம் அது)

கலைஞர் டி.வியின் ஆரம்ப நாட்களில் நல்ல தமிழில் நமீதா "மச்சான்" என்று அழைக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள்
சிலாகித்தார்கள். கலைஞர் கனவும் இனிதே நிறைவேறியது.

நமீதா பேசும் தமிழைக் கூட சகித்து கொள்ளலாம். அனால் நடன நிகழ்ச்சிகளில் "கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்" செய்கிறார்கள். எவன் பொண்டாட்டியோட எவன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்றது? _ _ _ _ _ _!
சன் மியூசிக், இசையருவி தொகுப்பாளிகள் சாப்டிங்களா? என்ன சாப்பாடு? யார லவ் பண்றீங்க? என்று பல்லை இளித்துக்கொண்டு கேட்கிறார்கள். இவர்கள் கேட்ட பிறகு தான் தமிழன் சோறு சமைப்பான், சாப்பிடுவான், காதல் செய்வான். இல்லையா?

சுதந்திர தினத்திற்கும் நமீதா, நயன்தாராவிட்கும் என்ன சார் சம்பந்தம்? நாம் ஏன் இப்படி அறிவீலிகளாக மாறிப்போனோம்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சுசில் குமார், விஜேந்தர் குமார் ஆகியோரைப் பற்றி அரை மணி நேரம் நிகழ்ச்சி வழங்க லாயக்கற்றவர்களாக டி.விக்கள் மாறிப்போனது யாருடைய சாபக்கேடு?

காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்று வந்த சாந்தி, பால்(ஆனா?பெண்ணா) சர்ச்சையில் சிக்கிய போது பிரச்சனையை ஊதி கிளப்பியதேயன்றி, எந்த ஊடகமும் குரல் கொடுக்க வில்லையே?

ஆகஸ்ட் 31ம் தேதி கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில், புதுக்கோட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் விஜயலட்சுமி(15) இரண்டாவது இடத்தையும், கவிதா(16) நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்த இருவரும் ஷூ அணியாமலேயே ரத்தம் கசிய ஓடி வந்து பரிசுகள் பெற்றனர். இதையெல்லாம் பற்றி பேச மீடியாவிற்க்கு நேரம் இல்லை. ஆனாலும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் பண்ணுவதிலும், காதலை சேர்த்து வைப்பதிலும் பெரும் சேவை புரிந்து வருகின்றன.

இந்த வேலைக்கெல்லாம் எங்கள் ஊரில் வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள்! அந்த பெயர் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்!

இந்த பத்தியைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

Wednesday, August 27, 2008

எரியும் காடு


மழை காளானைப் போலவும் வளர்கிறது
மலை மூங்கிலை போலவும் வளர்கிறது
காமம்

மண் தின்னும் உடம்புக்குள்
எத்தனை அறுபடும் உணர்ச்சிகள்

பிடுங்கி எறியமுடிவதுமில்லை
தூக்கி அலைய முடிவதுமில்லை.

. . . . . . . . . .
. . . . . . . . . .

தனிமையின் பாடல்


வியர்வை இறங்கி
கண்ணில் பிசுபிசுக்கும்
பகல் வேளை

உறக்கம் அமர மறுத்த
இரவுகளில்
தனித்து அலையும்
கால்கள்

இப்படி இரவும் பகலும்
வண்ணங்களின் பேதமாய் மட்டும்
கடந்து விடுகிறது
காரணமற்ற துயரங்களை சுமந்து கொண்டு

கொட்டித் தீர்க்க
எவ்வளவு இருந்தும்
பகிர்ந்து கொள்ளப்படாத தனிமை

கால நேரமற்று
மூர்கமேறித் திரியும் காமம்

இடம் பொருள் ஏவலற்று
வெடிக்கும் கோபம்

கண்ணில் தேங்கி நிற்கும்
குழப்பங்கள்
ஒரு முறை கத்தி அழுதால்
கரையக்கூடும்

நோய்மை வாட்டத் துவங்கியதிலிருந்து
மவ்னம் கொள்ளத் துவங்கி விட்டாள்
அம்மா

என்னைப் போலவே அப்பாவும்
காரண மாற்ற துயரங்களை
கண்ணில் சுமந்து திரிகிறார்

நீயும் கூட என்னை அழவைத்து
வேடிக்கை பார்ப்பதயே விரும்புகிறாய்...

நீண்ட மவுனத்தில்
புதைந்து கொள்ள விரும்புகிறேன்
மரணம் என்னை எழுப்பும் வரையில்...


. . . . . . . . . . . . . . . . . . . .

ஊர் சுற்றும் புராணம்


வானவியல் ஆராய்ச்சி பற்றி தெரியாது
ஆனாலும்
நட்சத்திரகள் ரசிப்பேன்

சில வேளைகளில்
அதுவா?இதுவா?
குழப்பிக் கொள்வதுண்டு

அப்படி இருக்குமோ?
இப்படி இருக்குமோ? என எதிர்பார்த்து
எப்படியும் இல்லாமல் போவதுவும் உண்டு

நரகத்தை விட்டுத் தள்ளுங்கள்
நான் சொர்கத்தை அனுபவித்ததுண்டு
மலை பயணங்களில்
ஜன்னல் இருக்கைகளில்..!


Saturday, August 23, 2008

ரஜினி, விஜய் பத்திரிக்கைகள் உருவாக்கும் அதி புனைவு


1967 பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் ஒ.பன்னீர் செல்வத்தை தவிர அனைத்து முதல்வர்களும் சினிமா துறையை சார்ந்தவர்களே. கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் தொடர்ந்து எழுதி
அழுத்துப்போன பத்திரிக்கைகள் 'பாட்சா' படம் வெளியான நாளிலிருந்து ரஜினியை துரத்தி கொண்டிருதன. 'வரும் ஆனா வராது' என்று வடிவேலு பாணியில் இழுத்தடித்து கொண்டிருந்த ரஜினியின் பிம்பம் நெய்வேலியில் நடந்த கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுத்து எடுபடாமல்போன பின்பும் , அதை தொடர்ந்து ஒக்கேனக்கல் பிரச்சனையை லாவகமாக கையாண்டு தாபித்தபின்பு,குசேலன் படத்திற்காக மன்னிப்பு கேட்டபோது சுக்கு தூளாக சிதரிபோனது.

பலரும் ரஜினியை கிழித் தெடுத்தபோது பாலச்சந்தர் மட்டும் 'குரு' என்ற முறையில் ரஜினிக்காக பரிந்து பேசினார். இதை சரியான வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட பாரதிராஜாவும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் . உண்மையான தமிழன் எனவும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்
.

பின்குறிப்பு :

பாலச்சந்தருக்கு குசேலன் நடித்து கொடுத்ததைப் போன்று , பாரதிராஜாவின் தயாரிப்பில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்தால் நன்றிக் கடனாக அமையும் .

இதையெல்லாம் பத்திரிக்கைகள் பேசி ஓய்தாகி விட்டது . அதனால்தான் இளையதளபதி விஜயின் தலையில் அரசியல் மஞ்சத்தண்ணியை
ஊத்து
கிறார்கள் விஜயும் முனைப்பாக ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார்.வணிக பத்திரிக்கைகள் தங்களுக்கு பெருந்தீனி கிடைத்தது என்ற சந்தோஷத்தில விஜயைப் பற்றி எழுதித் குவிக்கின்றன.

இளையதளபதியின் வரலாறு?

இளையதளபதியின் தந்தை சந்திரசேகர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்ப்பட்ட திரைபடங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கற்பழிப்பு காட்சிகளை வைத்து புரட்சி ஏற்படுத்தியவர்.விஜயின் ஆரம்ப காலங்களின் அவரது படத்தை அவரது தந்தை சந்திரசேகரே இயக்கினர்.யுவராணி,சங்கவி ஆகியோர் நனைந்த படி ஆடும் காட்சிகள் இல்லாத விஜய் படங்களும் கவர்சிக்க்காகவே ஓடிக் கொண்டிருந்தன.இன்றும் தெளிவாக சொல்வதானால் விஜய் செக்ஸ் பட நடிகராகவே அறியப்பட்டார். விஜயின் தந்தையே எதிர்பாராத வகையில் விஜயின் வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் வெளிவந்தன இளைய தளபதியாகவும் மாறினார்.கொஞ்சம் கூட சிந்திக்க இயலாத இளைஞர்,இளைஞிகளின் கனவு நாயகனாக மாறினார்.

இந்த உயரத்தை தக்கவைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்த விஜயும் அவரது தந்தையும் எடுத்த முதல் முடிவு தான் ரசிகர் மன்றக் கொடி.

பூமியின் வெப்பத்தை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.நகரமெங்கும் இலை உதிர்வதைப் போல கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிக்கைகள் விஜயை மகாத்மாவாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்கின்றன.

பின்குறிப்பு :

விஜயின் 'திருமலை' பட பேனர் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 'சுரேஷ்' என்பவர். காரைக்குடியில் எனது வீட்டின் அருகே இருந்தவர்.கனவுகளையும்,சுரேஷையும் இழந்த அவனது அம்மா இன்று பள்ளிக்கூட வாசல்களில் மிட்டாய் விற்று பிழைத்து வருகிறார்.

அரசியலும்,ஊடகமும் மக்களின் நம்பிக்கையை இழந்த பின்பும்,அது பாமர மக்களை பெருந்தீனிகளாக மாற்றி விட முயற்சிக்கிறது.