Saturday, September 13, 2008

மானாட மயிலாட-உலகிற்க்கு உணர்த்தும் உண்மைகள்நிகழ்வு -1

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் கணேஷ்-ஆர்த்தி ஜோடி ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி இருகிறார்கள்.
நடிகர் கணேஷ் தனது தந்தையின் மரணத்திற்க்கு பிறகான இறுதிச் சடங்கிற்க்கு கூட செல்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நடனத்தையும் அரங்கேற்றிவிட்டு, பின்பு நாட்டிய சிகாமணி மாஸ்டர் கலாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். நாட்டிய சிகாமணியும் அழுதபடியே ஆறுதல் கூறியிருக்கிறார்.அடுத்ததாக நடிகை ஆர்த்தி.ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதட்க்காக தலையை மொட்டை அடித்திருக்கிறார். அனுதாப அலையில் முழுகிப்போன குஸ்பூ,கலா,ரம்பா (நாட்டிய சிகாமணிகள்) ஆகிய மூன்றுபேரும் ஒன்பது மதிப்பெண்கள் வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்வு - 2

நான்கு நாட்களுக்கு முன்பாக காலை பதினோரு மணியளவில் மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தேன். கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அப்போது பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பள்ளி மாணவனும்,ஒரு பள்ளி மாணவியும் மாரோடு மாறாக உரசியபடி உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
எங்கள் பெட்டியிலிருந்த ஆண்கள்,பெண்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எழுந்து வந்து அந்த மாணவனை காதோடு காதாக நான்கு அறை விட்டார். அந்த மாணவனும்,மாணவியும் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விட்ட பின்பும் கூட யாவரும் அதிர்ச்சி விலகாமல் இருந்தனர்.

இரண்டு நிகழ்வுகளும் விளக்கும் உண்மைகள்:

1) நீங்கள் நிகழ்வு-1ஐ ஏற்றுக்கொண்ட்டீர்கலானால், நிகழ்வு-2ஐயும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

2) தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு ரசித்து மகிழும் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள், நீங்கள் இறந்த பின்பு உங்கள் இறுதிச் சடங்கை கூட அப்படியே போட்டு விட்டு, தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்பார்கள். உங்கள் ஆத்மா அவர்களுக்கு நிச்சயம் ஆசி வழங்கவேண்டும் .

3) மேலும் இது போன்ற வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவும் நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு, பிறிதொரு நாளில் மாரோடு மாராக அணைத்து முத்தங்கள் பரிமாற்ற நீங்கள் அனுமதி வழங்க வேண்டும் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

பின்குறிப்பு:
நான் ஒன்றும் கலைஞருக்கோ, கலைஞர் டி.விக்கோ எதிரானவன் அல்ல. என்னுடைய தாத்தா திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகளாக திராவிட கழகத்தின்பால் பற்றோடு இருந்து, இறந்தவர். எனுடைய கோபம் சாமானியனுக்கான கோபம்.
இறுதியாக..... முத்தம்மிடுக்கொண்ட மாணவனை அடித்த அந்த நபரும், இந்த பத்தியை எழுதும் நானும் எதோ "கட்டியணைத்து முத்தமிட இயலாதவர்கள்" என நினைப்பவர்களும், இந்த பத்தியின் மீது மாற்றுக் கருத்து கொண்டவர்களும், மானாட மயிலாட ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும், கமென்ட் எழுதுவதை விட்டு விட்டு வேறு ஒரு உருப்படியான வேலையைப் பாருங்கள்.

19 comments:

Albert said...

கலாச்சார சீரழிவைவை என்னண்ணு சொல்ல‌ ‌

மதிபாலா said...

நான் ஒன்றும் கலைஞருக்கோ, கலைஞர் டி.விக்கோ எதிரானவன் அல்ல. என்னுடைய தாத்தா திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகளாக திராவிட கழகத்தின்பால் பற்றோடு இருந்து, இறந்தவர். எனுடைய கோபம் சாமானியனுக்கான கோபம்.///


இதத்தான் எங்கப்பன் குதுருக்குள்ள இல்லைன்னு ஒரு பழமொழி சொல்வாய்ங்க......நீங்க செப்டம்பர்ல எழுதுன மூணு பதிவுல ரெண்டு பதிவு மானாட மயிலாட பத்தி...!!! இந்த உலகத்துல கலாச்சார சீரழிவை தடுக்க வந்த ஆபத்பாந்தவனாக உங்களைக்கருதிக்கொள்ளும் உங்களுக்கு "மானாட மயிலாட " மட்டுமே கண்ணுக்கு தெரிகிறதே??? அது ஏன்...சற்றேறக்குறைய இதே மாதிரியான ஜோடி நம்பர் 1 ம் , மஸ்தானா மஸ்தானாவும் உங்கள் கண்களுக்கே தெரியவில்லையே அது ஏன்???

இதைவிடக்கேவலமான மார்ப்பாட்டங்களை தியேட்டருக்கு காசு கொடுத்து போய் பார்க்கும்போது , சற்றேறக்குறைய நீலப்பட ரேஞ்சிற்கான படங்களையும் தியேட்டருக்கு போய் பார்த்துவிட்டு மணக்க மணக்க விமர்சனமும் எழுதிவிட்டு என்னமோ மானாட மயிலாட தான் கலாச்சாரத்தை கெடுப்பதாக அங்கலாய்ப்பது யாரை ஏமாற்ற நண்பரே?

venkat said...

The two incidents portrays de cultural degradation of our nation!!! I really pity on this!!
ppl lik us shud agitate against these nonsense and de neusense dat it creates on de minds of our ppl!!
Lets strive hard to eradicate this situation!!!!!

Mohan said...

//இதைவிடக்கேவலமான மார்ப்பாட்டங்களை தியேட்டருக்கு காசு கொடுத்து போய் பார்க்கும்போது , சற்றேறக்குறைய நீலப்பட ரேஞ்சிற்கான படங்களையும் தியேட்டருக்கு போய் பார்த்துவிட்டு மணக்க மணக்க விமர்சனமும் எழுதிவிட்டு என்னமோ மானாட மயிலாட தான் கலாச்சாரத்தை கெடுப்பதாக அங்கலாய்ப்பது யாரை ஏமாற்ற நண்பரே?//
---------------
மதிபாலா,
மானாட மயிலாட , மற்றும் இன்னும் பல பாலியல் வக்ரங்களை தூண்டும் குப்பைகள் நம் வீட்டு வரவேற்பறையில் வந்து குவிகிறது !
தியட்டருக்கு காசு கொடுத்து போகவேண்டும் !


எத்தனை சானல்களை தான் child lock செய்வது !

lenin said...

indha koottathil pengalai thavarana ichaiyodu nokkadhavar evaro avargal indha pennin meedhu kal eriyungal..(by jesus to save a prostitute.) hope u aware of it..
i am criticizing r finding fault in the commenters..r v practicing that logic of jesus story truly...if yes proceed.if not practice..take care..

usha rajan said...

really its shocking when u tld about those train matters..i saw those maana ada mayil ada episode in tv..really its pity..those ppl r addicted to fame thts y they r dng these sort of stupid things..i m the fan of maanada n mayila ada..but surely i wnt encourage these things[even others also]..its jz a dance show..so competators dont do anything for ur fame..ppl r not stupids..

Anonymous said...

நண்பரே...உங்கள் பதிவுகளில் சில நன்றாக உள்ளன்.சில சுமாரகவும்..இன்னும் சில அபத்தமாகவும் உள்ளன.
இதில் மானட மயிலாட நிகழ்ச்சியை விமர்சித்ததில் நியாயம் உள்ளது.நீங்க‌ள் ஏன் க‌லைஞ‌ர் டிவி யை ம‌ட்டும்...அல்ல‌து இந்த‌ நிக‌ழ்ச்சியை ம‌ட்டும் விம‌ர்சிக்கிறீர்க‌ள் என்ப‌து ஒரு ச‌த்தே இல்லாத‌ கேள்வி.அது உங்க‌ளுடைய‌ ப‌திவுக்க‌ன‌ விம‌ரிச‌ன‌மே கிடையாது.இது ஒரு எடுத்துக்காட்டுன்னு சொல்லீட்டு போயிகிட்டே இருக்க‌லாம்.
ஊட‌க‌ங்க‌ள் கேவலமான‌ விஷ‌ய‌ங்க‌ளை வெளியிட்டு காசு பார்ப்ப‌து ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி க‌ண்டிக்க‌ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.
ஆனால் மின்சார‌ ர‌யிலில் ஒரு மாண‌வ‌னும் மாண‌வியும் முத்தங்கொடுத்துக்கொண்ட‌தை விம‌ர்சிப்ப‌து மிக‌த்த‌வ‌றான‌ ஒன்று.
க‌லாச்சார‌ சீர்கேட்டைப்ப‌ற்றி பேசுப‌வ‌ர்க‌ள் பார‌த‌க்க‌லாச்சார‌த்த‌யோ த‌மிழ் க‌லாச்சார‌த்தையோ ப‌ற்றி என்ன தெரிந்து வைத்துள்ளார்க‌ள் என்று கூற‌ வேண்டும்
சும்மா கூவாதீங்க‌.
ஒரு பைய‌னோ பெண்ணோ காத‌ல் செய்வ‌து எவள‌வு இனிமையான‌ விஷ‌ய‌ம்.க‌லாச்சார‌ம் என்று சொல்லி அதைப்ப‌ழிப்ப‌து எவளவு கீழ்த்த‌ர‌மான‌ செய‌ல்.
ஒரு பைய‌னும் பொன்னும் காத‌ல் செய்ய‌ ச‌முதாய‌த்த‌யோ இல்லை பெற்றோரையோ அனும‌தி கேக்கனும்ங்க‌ற‌து அசிங்க‌மான‌ வாத‌ம் இல்லையா?
ஈரான் நாட்டில் சில‌ வ‌ருடங்க‌ளுக்கு முன்ன‌ர் த‌வ‌றான‌ உற‌வு வைத்திருந்த‌தாக‌ ஒரு ப‌தினாறு வ‌ய‌துப்பெண்னை தூக்கில் போட்டார்க‌ள்.அந்த‌ பிற்ப்போக்கு வாதிக‌ளுக்கும் ந‌மக்கும் என்ன‌ வித்யாச‌ம்???
காம‌வேள் ப‌ண்டிகைன்னு ஒன்னு த‌மிழ் நாட்டில் ஒரு கால‌த்தில் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.அது ப‌ற்றிப் ப‌டித்த‌துண்டா...
எழுத்தாள‌னுக்கு நேர்மை மிக‌வும் முக்கிய‌ம்.க‌ண்மூடித்த‌ன‌மா ஒரு விஷ‌ய‌த்தைப்ப‌ற்றி யோசிக்காம‌ல் எதையாவ‌து எழுத‌க்கூடாது.
எதையேனும் ப‌திவு செய்யும் முன்ன‌ர் த‌ய‌வு செய்து நிதான‌மாக‌ யோசித்து பின்ன‌ர் ப‌திவு செய்ய‌வும்

மதிபாலா said...

மதிபாலா,
மானாட மயிலாட , மற்றும் இன்னும் பல பாலியல் வக்ரங்களை தூண்டும் குப்பைகள் நம் வீட்டு வரவேற்பறையில் வந்து குவிகிறது !
தியட்டருக்கு காசு கொடுத்து போகவேண்டும் !


எத்தனை சானல்களை தான் child lock செய்வது !
///

நண்பரே...சரிதான்.....ஆனால் அதே வரவேற்பரையில் அத்தகைய சினிமாக்களும் , பாடல்களும் குவிகிறதே....அது போன்ற காட்சிகளை என்ன செய்ய...சைல்ட் லாக் செய்தால் சற்றேறக்குறைய மக்கள் தொலைக்காட்சியையும் , சுட்டி டீவியையும் மற்ற செய்தி சேனல்களையும் தவிர எதையும் பார்க்கவியலாது!!!!

தவிர்த்து சினிமாவில் எவளோ ஒருத்தி உடை களைந்தால் ரசிக்கும் நாம் சமூகத்தில் மட்டும் அதை ரசிப்பதில்லை..விமர்சிக்கிறோம்!!!!! ஏன்??? ஏன் இந்த இரட்டை அளவுகோல்???

மதிபாலா said...

இதில் மானட மயிலாட நிகழ்ச்சியை விமர்சித்ததில் நியாயம் உள்ளது.நீங்க‌ள் ஏன் க‌லைஞ‌ர் டிவி யை ம‌ட்டும்...அல்ல‌து இந்த‌ நிக‌ழ்ச்சியை ம‌ட்டும் விம‌ர்சிக்கிறீர்க‌ள் என்ப‌து ஒரு ச‌த்தே இல்லாத‌ கேள்வி////

நண்பரே........பதிவர் அவர்கள் நான் கலைஞருக்கோ இல்லை கலைஞர் தொலைக்காட்சிக்கோ எதிரி அல்ல என்ற ஒரு அறிவிப்புத்தான் என்னை அத்தகைய விமர்சனத்தை வைக்கத்தூண்டியது!!!! மற்றபடி எதிர்ப்பதாய் இருந்தால் அதுபோன்ற அத்துணை நிகழ்வுகளையும் எதிர்ப்பதில் எனக்கு சம்மதமே!!!

அதேபோல கலாச்சாரம் , கலாச்சாரம் என்று கூவிக்கொண்டு சினிமாவில் லிப் டூ லிப் கிஸ்ஸை பார்த்து ரசித்துக்கொண்டே தெருவில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சிப்பதென்பது போலியான கலாச்சாரப்பாதுகாப்பு....!!

கூடுதுறை said...

இந்த நிகழ்ச்சி கலாச்சார சீர்குலைவுதான்...

மக்கள் விரும்புகிறார்கள் என்றால் 1 மணி நேர நிகழ்ச்சியை 2.5 மணி நேரம் நீட்டித்து கொலை செய்கின்றனர்...

vinoth said...

உண்மையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் இதே மாதரி பல விஷயங்கள் ஓவராக உள்ளன. மாற்ற படி அதுவும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அவளாவே .
Train matter : எனக்கும் அது பண்பாட்டை மீறிய சம்பவமாக படுகிறது.
காரணம் 1 : அவர்களூடைய வயது .
காரணம் 2 : பொது இடத்தில் அரங்கேற்றியது .
காரணம் 3(உண்மையான காரணம் ) : எனக்கு இது வரை அதே மாத்ரி வாய்ப்பு கிட்டவில்லை என்பது .

த.கிருஷ்ணமூர்த்தி said...

நண்பரே, நிகழ்வு-2ஐ நாம் கலாச்சார, பண்பாடு சார்ந்து பார்க்க தேவையில்லை. 'அடிப்படை நாகரிகம்' என்ற அளவில் பார்த்தாலே போதுமானது.

Mohan said...

நமது கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல கூடாது, தொல்லை கட்சி பெட்டியால் (தொலைக்காட்சி) சீரழிக்கப்பட்டு விட்டது.

சுதந்திர தினத்தன்று நடிக நடிகர்களின் பேட்டி,
கவர்ச்சி குத்தாட்டம்
தமிழ் வருடபிரபன்று ஆங்கில படம்,
இதெல்லாம் நாம் தொலை கட்சி பேடிகளால் நாம் அனுபவிக்கும் கொடுமைகள்.

(மக்கள் தொலைக்காட்சியை தவிர - நன்றி மருத்துவர் ஐயா)

antony said...
This comment has been removed by the author.
antony said...

அன்புள்ள கார்த்திகேயன் அவர்களுக்கு உங்கள் கருத்து அருமை, ஆனால் ஒரு சந்தேகம்.. அங்கு முத்தமிடுவது உங்கள் தங்கையாக அல்லது உங்கள் மகளாக இருந்தால் ரசிபிர்களா அல்லது எதிர்பிர்களா???

Ravi said...

Did Ganesh made this country proud by doing this act. ?The first time came to know this news, i felt very bad. The train incident is shocking.!!

Subash said...

:))))
both r usual
ஆனா ரயிலில் வைத்து எல்லை மீறியது அவர்கள் பிழைதான். சில இடங்களில் நிலமையை புரிந்து நடக்க வேண்டும். அன்றைக்கு அது புரிந்திருக்கும் அவர்களுக்கு.

BALAJI said...

sir naan sollrenennu thappa ninachukathinga... neenga ezhuthiya athanaiyum poi poi poi....ganesh MOM DIED AND AFTER ALL THE THING IS OVER ONLY, HE WENT AND DANCED... HERE AFTER DON'T DO LIKE THIS...
இதைவிடக்கேவலமான மார்ப்பாட்டங்களை தியேட்டருக்கு காசு கொடுத்து போய் பார்க்கும்போது , சற்றேறக்குறைய நீலப்பட ரேஞ்சிற்கான படங்களையும் தியேட்டருக்கு போய் பார்த்துவிட்டு மணக்க மணக்க விமர்சனமும் எழுதிவிட்டு என்னமோ மானாட மயிலாட தான் கலாச்சாரத்தை கெடுப்பதாக அங்கலாய்ப்பது யாரை ஏமாற்ற ?
ITS A WARNING TO YOU. MIND IT...

த.கிருஷ்ணமூர்த்தி said...

Mr balaji,
ரெம்ப கோவப்படாதிங்க ரத்தக் கொதிப்பு வந்திரப் போகுது. நீங்கள் சொல்வது சரிதான். நான் ப்ளூ பிலிம் பாக்குற ஆள் தான். ஆனா அந்த ப்ளூ பிலீமை நீங்கள் குடும்பதோடு ரசித்துப் பார்ப்பீர்களா?