அருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.
Tuesday, September 9, 2008
எழுத்தாளனின் மனைவி - குறும்படம்2006
கதைச்சுருக்கம்-
எதிர் வீட்டு நபர் கூட யார் என தெரியாத இன்றைய சூழலில் வாழும் இரு வேறு மனங்களைப் பற்றிய கதை.அடங்காமல் பீறிட்டெழும் தனிமை,அது இட்டுச்செல்லும் உணர்வுநிலைகளின் பதிவு...
இந்த குறும்படத்தில் எழுத்தாளராக நடித்த திரு.செண்பகநாதன்(உபாலி) அவர்கள் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகங்கள்; சுரோனித வானம்(கவிதை), அமரத்தவம்(போர்கே,மார்க்வெஸ்,கால்வினோ மொழி பெயர்ப்பு சிறுகதை), ஆலிஸின் அற்புத உலகம் (மொழி பெயர்ப்புப் புதினம்) ஆகியனவாகும். மேலும் தீராநதி ,நிழல் ஆகிய இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருவதுடன் , தற்போது நாவல் ஒன்றையும் எழுதி வருகிறார்.
இந்த இனிய தருணத்தில் இக் குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக் குறும்படத்தில் எங்களுடன் பணிபுரிந்த பாலாஜி கார்த்திக், சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு இறந்து விட்டான். அவனுக்கு இந்த குறும்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
http://in.youtube.com/watch?v=zUhy0inJd0w
உங்களுடைய கருத்தை பதியலாம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Indha kurum padathin mulam neengal solla vumbiya karuthu enna, nanbare? Udagangalin poruppinmaiyin mel evalavu aathiram konda neengal,ungalin siru pangalippai sariyai seidhadhai enkku thondravillai.
"Be the change that you want to see in the world" - Gandhi
Sindhithu parungal, nanbare!
ஒரு எழுத்தாளனின் மனைவி ,
இயக்குனர் அவர்களே , நீங்கள் எடுத்த கரு பாராட்டிற்குரியது . ஒரு எழுத்தாளனின் உலகம் என்பது விசாலமானது . அவன் வாசிக்கும் எழுத்துகளின் உலகத்தில் உறைந்து போவதும் , படைக்கும் கதாபாத்திரங்களிடம் அவன் கற்பனா உலகத்தில் செய்யும் சம்பாஷனைகளும் புரிதலுக்கு சிரமம் தான் . ஆம் , அவன் வேறு!
அது போல தானே அவன் மனைவியும் ? அவள் மாமேதை அல்ல. உங்கள் கதையை என்னவென்று சொல்ல , எழுத்தாளனின் மனைவிக்கு நெஞ்சோடு சோகமும் , தாபமும் இருக்கும் தான் ஆனால் அதையே மூலதனமாக வைத்து
அவளை வேறு ஒருவனுடன் உறவாடும் படி காட்டி , அவள் கதாபாத்திரத்தை படு மட்டமாக சித்தரித்தது ,கணவனிற்கு விஷம் வைப்பது போல் காட்டியது , மன்னிக்கவும் சார் இதெல்லாம் விரசத்தின் உச்சம் , ஒரு விதமான "பெர்வெர்ட்" மனோபாவம்.
இதே கதையை ஒரு மனைவியின் கோணத்தில் , ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவனை தள்ளி நின்று ரசிப்பது போல் , அவன் இரவில் அவளை தவிக்க விட்டு தூங்கும் பொழுது தலை கோதி விடுவது போல் , அதற்க்கு மாற்றாக அந்த எழுத்தாளன் தனது படைப்பையும் அதற்கான விருதையும் அவளுக்கே அற்பனிப்பது போல் இருந்தால் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா?
நீங்கள் சொன்னது உண்மை கதை என்றே இருந்தாலும் கூட அதை ஏற்க்க முடியாது , காரணம் இதை விட வேறு ஒரு தாபத்தை மெல்லிய சோக இழையோடு பதிவு செய்தது இருக்கலாம் .
ஹெட் போன் வைத்து படம் பார்த்தல் காத்து வலிக்குதுங்க இசையமைப்பாளர் , என்னலாமோ சம்பந்தம் இல்லாமல் இசை பின்னணியில்.
கடைசியாக, என் விமர்சனத்தில் இருந்து நீங்கள் கற்று கொள்ள ஒன்றுமே இல்லையென்றால் கூட , விமர்சனங்கள் தேவையே . உங்கள் அடுத்த படைப்பில் நல்ல ஆழமும் , கதையம்சமும் எதிர்பார்க்கிறேன்.
It's quite disappointing to watch that short movie, which had a promising start, but fades away as the script moves on and ends with a shambolic note. It's pretty depressing to note that it's just-another-movie which tries to portray a woman as a trump and glorify a writer who also happends to be a failed creator.
A damp squib.
Post a Comment