Friday, October 1, 2010

"எந்திரன்" - அதிர்ச்சியில் அதிரும் ஹாலிவுட்!!!???



2010

கலங்கும் ஹாலிவுட்-டை கண்டு களியுங்கள்!

http://www.google.co.in/images?hl=en&source=imghp&biw=1016&bih=575&q=Bicentennial+Man&btnG=Search+Images&gbv=2&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=

Saturday, July 31, 2010

மந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது,)


அன்பார்ந்த வாசகர்களுக்கு
உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கிய பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நாம் மெச்சாமல் இருக்க முடிய வில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான் மிக சரியாக பொருந்தியது. “தமிழை ஆதிக்கம் செலுத்தவதை எதிர்த்து கலைஞர் மணமேடையிலிருந்து புறபட்டு வந்த போராளி,” என்றார். தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடன் நடந்தேறியது. விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிக சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, மறைந்த நன்னிலம் நடராசன், வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது தான் நம் ஆற்றலை உலகுக்கு உணர்த்த முடியும். மாநாடு நடந்து முடிகிற வேளையில் பழ. கருப்பையா தாக்கப்பட்டும், வீடு சூறையாடப்பட்டும் உள்ளது. அவரும் அவரது மகன் ஆறுமுக தமிழனும் தீவிர தமிழ் பற்றாளர்கள், ஆய்வாளர்களும் கூட. தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷேக்கும், தமிழ் உணர்வார்களை காயப்படுத்தும் இவர்களுக்கும் என்ன வித்யாசம். இதை விட வேறு பல கேவலமான விஷயங்களும் மாநாட்டில் நடந்தேறியுள்ளது. கேவலத்தக்க தமிழ் சொறியர்களை கொண்டு மாநாடு நடத்தியுள்ள கருணாநிதி சற்றும் கூச்சம் இல்லாத அறுவருக்கத்தக்க சதைப் பிண்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
இதனிடையே மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாளிலேயே தமிழருவி மணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்திருக்கிறது. தமிழறிஞர்களை போற்றி வளர்க்க வழியின்றி எப்படி தமிழ் மீட்சி கொள்ளும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் கலைஞரை பொருத்தவரையில் வேசியைப் போல் இரந்துண்ணும் அறிஞர்களே போதுமானது. இத்தகைய சூழ்நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான அரசியல் மற்றும் கலை பற்றிய அறிதலும், புரிதலும் பெறதாதவாறு மக்களை வைத்திருப்பது தான் என்பதை நமக்கு சற்றே உணர தருகிறது. அதற்கு உதாரணம் மாநாட்டுக்கு வந்த ஒரு கழக உடன்பிறப்பு தேவதேவன் கவிதையை வாங்கியுள்ளார். கடை விரித்திருந்த அந்த பதிப்பாளரிடம் நாற்பது ரூபாய் விலை இப்புத்தகத்திற்கு அதிகம் என்று கூறி, பேரம் பேசி இருபத்தைந்து ரூபாய்க்கு அப்புத்தகத்தை வாங்கியுள்ளார். வாங்கும் போது நம்ம ஆளு இதை எழுதியதுபோல் (அந்த உடன் பிறப்பு தேவதேவனின் பெயரில் உள்ள பிற்பகுதி வார்த்தையை சாதி பட்டம் என்று தவறுதலாக எண்ணிருந்தார். ஆனால் அந்த நபர் நினைத்தது போல் கவிஞர் அச்சாதியை சேர்ந்தவரும் அல்ல) என்ற பெருமித்துடன் அதனை வாங்கியுள்ளார். அவ்வாறாகத்தான் மக்களும், கழக உடன் பிறப்புகளும் உள்ளனர். இத்தகைய மனிதர்களிடம் தான் கலைஞர் தனது வாய் ஜாலத்தை கட்டி தன்னை ஒரு ரட்சகராக பாவித்து வருகிறார். அது தான் அவரது விருப்பமும் கூட. எண்ணற்றற வியாதிகளை போல் பெருகி கிடக்கும் ஊடகங்கள் அனைத்தும் பிச்சைகாரர்களை போல் இரந்துண்ணும் நிலையை காண முடிகிறது. இந்த மாநாட்டின் விளைவால் அணு அளவு நன்மைக் கூட ஏற்பட போவதில்லை.
அடுத்ததாக மாவோயிஸ்டு பிரச்சனையில் இந்திய பேரரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நோக்குகையில் இந்திய அரசாங்கம் சாவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. படையினரை பெருமுதலாளி தரகு அரசாங்கம் கைகூலியாக பயன்படுத்தி வருகிறது. படையினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

Saturday, June 19, 2010

ராவணா - ரிலையன்சின் குரல்!

மணிரத்னம் எப்போதும் அரசியலை முன் வைக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். இந்த வகையில் ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து வரிசையில் ராவணாவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்த முறை மணிரத்தினம் நக்சல் இயக்கங்களை தொடர்பு படுத்தியே விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கியுள்ளார். 'நக்சல்' போன்ற இயக்கங்களை சித்தரிக்கும் பொழுது இயக்கம் சார்ந்த உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளவது அவசியம்.

'நக்சலைட்' என்பவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகளே. அவர்களின் போராட்டம் தங்களின் வாழ்வாதாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்க்கான முயற்சியே. நக்சல் பழங்குடிகள் வாழும் மலைகள் வெறும் பாறைகள் அல்ல. அங்கிருக்கும் மலைகள் முழுக்க "பாக்சைட் கனிமம்". எண்ணிலடங்கா கோடிகள் விலை போகும் இந்த மலையை விலைக்கு வாங்க முனைப்பு காட்டும் ரிலையன்ஸ், வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் நிறுவனங்கள்; அதனை தடுக்க போராடும் நக்சலைட்; இதில் மணிரத்தினம் ரிலையன்ஸ் பக்கம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் முதலாளிகளான அம்பானி சகோதரர்களை குளிர்விக்கும் பொருட்டு 'குரு' படத்தில் குரு(திரு)பாயின் திருட்டுகளை ஞாயப்படுத்தினார். மணிரத்தினத்தின் இந்த செயலுக்கு அம்பானி சகோதரர்கள் குளிர்ந்து போய் வழங்கியது தான் 'ராவணா'!

ராவணாவில் மலைவாழ் மக்களாக(நக்சலைட்டின் ஆடை அமைப்புடன்) சித்தரிக்காப்படும் நாயகனை 'பொம்பளை பொருக்கி என்றும், ஒரு பொம்பளையைக் கூட விடமாட்டான்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதைவிடவும் நாயகன் வாயிலாகவே 'எங்க கை எச்சிக் கை தான்' என்று குறிப்பிடுகிறார். கொள்கைகளுக்காக போராடும் இயக்கங்களை இழிவுபடுத்தியுள்ளனர். 'வசனம்' என்ற பெயரில் சுகாசினி மணிரத்னம் படம் முழுக்க வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்.

ராமன்-சீதை-ராவணன் கதையை எடுத்துக் கொண்ட மணிரத்தினம் இதனை சிறப்பாக செய்திருந்தால் ஹாங்-ஹாங்கின் 'IN THE MOOD FOR LOVE' திரைப்படத்தைப் போல காவியமாக வந்திருக்கும். ஆனால் ஹாலிவுட் தரத்திற்க்கு தொழில் நுட்பங்களை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தும் மணிரத்னம் பெரும் முதலாளிகளின் கைக் கூலியாக செயல்படுவது வேதனைக்குரியது.

படத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ள கதாபாத்திரம் ப்ரியாமணியின் கதாபாத்திரம்தான். மன்சூரலிகானின் டப்பிங்!? ப்ரியாமணியின் கதாபாத்திரத்தை ஓவியமாக்கியிருக்கிறது!???

ஜெயா TV-யில் வாய் கிழிய தமது மேதமையை நிரூபிக்கும் சுகாசினி இனி செய்ய வேண்டியது மணிரத்தினதிற்க்கு அடுத்த மாரடைப்பு வராமல் அவரைப் பார்த்துக் கொள்ளவது மட்டும் தான். பல நூறு பேரைக் கொள்ளவதை காட்டிலும், ஒருவரை காப்பாற்றுவது மேலான செயல் அல்லவா?

இந்த செயலை செய்ய முனைந்தாலே இந்திய சினிமா உங்களுக்கு தலை வணங்கும். மற்றபடி வசனம் எழுதும் வேலையெல்லாம் யாராவது வேலை இல்லாதவர்கள் பார்த்துக் கொள்ளவார்கள்.

NT tv, CNN - எல்லாம் சொல்வது மாதிரி படம் ஆகா ஒஹோ என இல்லாவிட்டாலும் படத்தை திரையில் கண்டு மகிழுங்கள்.

Friday, May 14, 2010

எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து
முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...

பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்




பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்

ஆசிரியர்
செல்வ புவியரசன்

உதவி ஆசிரியர்
த.கிருஷ்ணமூர்த்தி


க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312

Sunday, January 3, 2010

மந்திரச்சிமிழ்!


சென்னை புத்தகச் சந்தையில் 'மந்திரச்சிமிழ்' காலாண்டிதழை வாங்க விரும்புவோர் "அன்னம், பாவை, அனன்யா, உன்னதம்" ஆகிய பதிப்பகங்களில் பெறலாம்.

பற்றிய விவரங்களுக்கு...

http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_17.html

http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_21.html