Wednesday, December 30, 2009

திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமா!

இந்த பதிவை 2008 அக்டோபர் மாதம் எழுதினேன். ஆதாவது 'யோகி' வெளி வருவதற்க்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னமே tsotsi என்ற ஆப்பிரிக்க படத்தில் தழுவல் என்றும் எழுதினேன். இன்றைக்கு அந்த உண்மையை!!!??? பல பேர் கண்டறிந்து சிலாகிக்கிறார்கள். சிலர் பின்னூட்டங்களைக் கொடுத்து ஆராதிக்கிறார்கள். ஆனால் ஒன்னரை வருடத்திற்க்கு முன் வலைப் பதிவர்கள் என்னை வறுத்தெடுத்து விட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதனை thamizhstudio தளத்தில் வெளியிட்டார்கள். சமீபத்தில் கூட 'நிழல்' பத்திரிக்கையில் என்னுடைய பதிவை ஒட்டிய ஒரு நீண்ட (திருடப்பட்ட) பட்டியலை வெளியிட்டார்கள்.

thamizhstudio -வின் உரிமையாளர்களில் ஒருவரான அருணை சந்தித்து "என்னுடைய பதிவை நீக்கும் படியும் திட்டு வாங்கி சக முடிய வில்லை" என்றும் கேட்டுக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே 'முடியாது' என்றார். விதி வலியது! வேறென்ன சொல்ல......

பழைய பதிவை படித்து திட்ட விரும்புபவர்கள் வாங்க...
http://www.thamizhstudio.com/valaipookkal_3.htm

Sunday, December 27, 2009

தமிழ் சினிமா தமாசு..!

காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்றே பிரத்தியோகமான விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவை மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்படும் போது தான் நகைச்சுவைக்குரியதாய் மாறி விடுகிறது. அவற்றுள் சில...

தமிழ் சினிமா கதாநாயகர்கள்:


* தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் அனைவருமே மிக மிக நல்லவர்கள்.
* Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.
* சோத்துக்கே வழியில்லை என்றால் கூட நமது நாயகன் Arrow prant சட்டையும், reebok shoe-வும் அணிவார்கள்.
* 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.
* பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்.
* உலகத்தில் எந்த மூலையில் பிரச்சனை என்றாலும் நாயகனுக்கு கோபம் வரும்.
* காதலியைத் தவிர மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும் நினைப்பவர்கள்.
* சில நேரங்களில் தங்கையை கற்பழித்த குற்றதிட்க்காக வில்லனை பழிவாங்கத் துடிப்பார்கள்.
* தாயைக் கட்டியணைத்து (சித்திரவதைப் படுத்தி) ஒரு பாடல் ஒன்றைப் பாடுவார்.
* தங்கையின் திருமணத்திட்க்காக வாக்குக் கொடுப்பார். அதை கிளைமாக்ஸ்க்குள் காப்பாற்றிவிடுவார்.
* நமது நாயகன் கெட்டவனாக இருந்தால் கூட, நமது நாயகி இடைவேளையின் போது பேசும் நீண்ட வசனத்தைக் கேட்டு திருந்தி விடுவான்.
* அப்படியே திருந்தாமல் போனாலும் தாயின் மரணதிலாவது நிச்சயம் திருந்தி விடுவான்.
* துப்பாக்கி கிடைத்தால் கூட தன்னுடைய கைகளால் அடித்தே வில்லனை வீழ்த்துவார்.

கதாநாயகிகள்:


* ஓன்று கோடீஸ்வர வீட்டு பெண்ணாகவோ அல்லது நான்கு தங்கைகளை, மூன்று தம்பிகளை கரை சேர்க்கும் ஏழை பெண்ணாகவோ இருப்பாள்.
* காரணமே இல்லாமல் சிரிப்பாள்.
* குழந்தைகளோடு விளையாடுவாள்.
* கனவுப் பாடலில் நிச்சயமாக வெள்ளை உடைதான் அணிவாள்.
* 'இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ் ' இந்த மூன்று வார்த்தைகளை நிச்சயமாக பயன்படுத்துவாள்.
* நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும்.
* காசு வாங்காத வாட்ச்மேனாக நாயகன் இருப்பதால், நமது நாயகி நள்ளிரவு 12 மணிக்கு கூட தனியாக நடந்து வருவாள்.
* ஆரம்பத்தில் திமிர் பிடித்தவளாக இருந்தாலும் கூட நமது நாயகன் கூட்டத்தில் கட்டியணைத்து முத்தமிட்டப் பிறகு பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம் Exetra எல்லாம் வந்து விடும்.
*சில நேரங்களில் தத்துவம் பேசுவாள். (அதைக் கூட தாங்கிக் கொள்ளலாம்) அழுது கொண்டே சிரிப்பாள். அதைத்தான் நம்மால்...
* கதாநாயகனின் தங்கையைக் கூட கற்பழித்து விடலாம் ஆனால் நாயகியை வில்லன்களால் தொடவே முடியாது.
* நாயகியின் அம்மா அராத்தாகவோ அல்லது சோகத்தைப் பிழிபவராகவோ இருப்பாள்.
* நாயகியின் தந்தைகள் குழாய் சிகரட்டை புகைத்துக்கொண்டே "என்னோட bank balance என்னதெரியுமா" என்பார்கள். அல்லது எதுக்கும் லாயக்கில்லாத குடிகாரர்களாக இருப்பார்கள்.

வில்லன்கள்:


* இந்த இடத்தை கதாநாயகிகளின் அப்பாவே நிரப்பி விடுவார்கள்.
* அப்படி இல்லாத பட்சத்தில் கடத்தல்காரர்களின் தலைவன் வில்லனாக இருப்பான். சில நேரங்களில் அரசியல் தலைவர்கள்.
* விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் மட்டும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே வில்லன்கள்.
*வில்லன்களுகேன்றே பிரத்யோக பனியன்கள் செய்யப் பட்டிருக்கும்.
* வில்லன்கள் தங்களது சட்டையைக் கழட்டி விட்டோ, லெக் பீஸ் கடித்துக் கொண்டோதான் சண்டை போடுவார்கள்.
* நாயகன் அடித்தால் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுவார்கள்.
* வில்லன்களுக்கு இரண்டு பிரதான வேலைகள் இருக்கும். ஓன்று ரேப் செய்வது. இரண்டு பிரதமரைக் கடத்துவது.
* ரேப் செய்ய வரும் வில்லன்கள் பெண்களின் கைகளையே பிடித்துக் கொண்டு மல்லுக் கட்டுவார்கள்.
* மூன்று அடிக்கு மேல் ஹீரோவை அவர்களால் அடிக்க முடிவதேயில்லை.
* 'ப்ளடி பாஸ்டட்' என்று அடிக்கடி உரக்க கத்துவார்கள்.
* கிளைமாக்ஸ்க்குள் இறந்து விடுவான். அல்லது ஹீரோ மன்னித்தவுடன் திருந்திவிடுவார்கள்.

கண்ணியம் குறையாத காவல் துறையினர்:

* 'I am so proud of you' என்று நமது நாயகனை பெருமைப் படுத்துவார்கள்.
* நிச்சயமாக பிரச்சனை முடிந்ததும் வந்து வில்லனை கைது செய்வார்கள்.
* IG -யாக மேஜர்.சுந்தர்ராஜனோ, ஜெய்சங்கரோ இருப்பார்கள்.
* இவர்களின் பிரதான வேலை சில நேரங்களில் கமலையும், பல நேரங்களில் விஜயகாந்தையும், அர்ஜுனையும் உற்சாகப் படுத்துவார்கள்.
* நேர்மையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவப் படுத்துவார்கள்.
* தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு 'ஐடியா' மட்டுமே கொடுப்பார்கள்.

இப்படியே தமிழ் சினிமாவைப் பற்றிய பகடிக்கு 1000 பக்க புத்தகமே வெளியிடலாம். சில விதிகள் மெல்ல மாறும். நாம் ஒரு கால கட்டத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்த வேலைகள் இன்னொரு காலத்தில் மிகுந்த நகைப்புக் கூறியதாக மாறி விடுகிறது. அதற்க்கு தமிழ் சினிமா ஒன்றும் விதி விலக்கல்ல... இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் நீங்கள் தொடருங்கள்...

Tuesday, December 22, 2009

தமிழ் சினிமாவின் தீர்க்கப்படாத கேள்விகள்...

இந்த பதிவு திருத்தப்பட்டுள்ளதால் மேலும் படிக்க க்ளிக் செய்யவும்!http://starmakerstudio.blogspot.com/2009/12/blog-post_27.html