இந்த பதிவை 2008 அக்டோபர் மாதம் எழுதினேன். ஆதாவது 'யோகி' வெளி வருவதற்க்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னமே tsotsi என்ற ஆப்பிரிக்க படத்தில் தழுவல் என்றும் எழுதினேன். இன்றைக்கு அந்த உண்மையை!!!??? பல பேர் கண்டறிந்து சிலாகிக்கிறார்கள். சிலர் பின்னூட்டங்களைக் கொடுத்து ஆராதிக்கிறார்கள். ஆனால் ஒன்னரை வருடத்திற்க்கு முன் வலைப் பதிவர்கள் என்னை வறுத்தெடுத்து விட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதனை thamizhstudio தளத்தில் வெளியிட்டார்கள். சமீபத்தில் கூட 'நிழல்' பத்திரிக்கையில் என்னுடைய பதிவை ஒட்டிய ஒரு நீண்ட (திருடப்பட்ட) பட்டியலை வெளியிட்டார்கள்.
thamizhstudio -வின் உரிமையாளர்களில் ஒருவரான அருணை சந்தித்து "என்னுடைய பதிவை நீக்கும் படியும் திட்டு வாங்கி சக முடிய வில்லை" என்றும் கேட்டுக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே 'முடியாது' என்றார். விதி வலியது! வேறென்ன சொல்ல......
பழைய பதிவை படித்து திட்ட விரும்புபவர்கள் வாங்க...
http://www.thamizhstudio.com/valaipookkal_3.htm
2 comments:
இப்படி திருடி விட்டு ஹாலிவுட் காரன் எங்கள் முன் பிச்சை எடுக்கணும்.ஜப்பான் இயக்குனருடன் சேர்ந்து படம் பாக்கணும்,அவங்க வீடு ஹால்ல முறுக்கு சுடணும்,அப்படியே இந்த படத்தை யாராவது வேறு மொழியில் எடுத்தால் எம் படத்தைத் திருடி விட்டார்கள் என்று கேஸ் போடுவேன் என்று சொல்லி கொண்டு திரிவார்கள்.
எப்படிங்க அந்த நீளமான பட்டியலை தயாரிச்சீங்க?
சில படங்களின் கதை ஏற்கனவே தழுவல் என தெரிந்தது தான் ஆனால் அதே கண்கள் போன்ற படங்களும் சுடப் பட்டவை என தேயும் பொது டரியல் ஆகி விட்டேன்.
Post a Comment