Wednesday, August 27, 2008

எரியும் காடு


மழை காளானைப் போலவும் வளர்கிறது
மலை மூங்கிலை போலவும் வளர்கிறது
காமம்

மண் தின்னும் உடம்புக்குள்
எத்தனை அறுபடும் உணர்ச்சிகள்

பிடுங்கி எறியமுடிவதுமில்லை
தூக்கி அலைய முடிவதுமில்லை.

. . . . . . . . . .
. . . . . . . . . .

தனிமையின் பாடல்


வியர்வை இறங்கி
கண்ணில் பிசுபிசுக்கும்
பகல் வேளை

உறக்கம் அமர மறுத்த
இரவுகளில்
தனித்து அலையும்
கால்கள்

இப்படி இரவும் பகலும்
வண்ணங்களின் பேதமாய் மட்டும்
கடந்து விடுகிறது
காரணமற்ற துயரங்களை சுமந்து கொண்டு

கொட்டித் தீர்க்க
எவ்வளவு இருந்தும்
பகிர்ந்து கொள்ளப்படாத தனிமை

கால நேரமற்று
மூர்கமேறித் திரியும் காமம்

இடம் பொருள் ஏவலற்று
வெடிக்கும் கோபம்

கண்ணில் தேங்கி நிற்கும்
குழப்பங்கள்
ஒரு முறை கத்தி அழுதால்
கரையக்கூடும்

நோய்மை வாட்டத் துவங்கியதிலிருந்து
மவ்னம் கொள்ளத் துவங்கி விட்டாள்
அம்மா

என்னைப் போலவே அப்பாவும்
காரண மாற்ற துயரங்களை
கண்ணில் சுமந்து திரிகிறார்

நீயும் கூட என்னை அழவைத்து
வேடிக்கை பார்ப்பதயே விரும்புகிறாய்...

நீண்ட மவுனத்தில்
புதைந்து கொள்ள விரும்புகிறேன்
மரணம் என்னை எழுப்பும் வரையில்...


. . . . . . . . . . . . . . . . . . . .

ஊர் சுற்றும் புராணம்


வானவியல் ஆராய்ச்சி பற்றி தெரியாது
ஆனாலும்
நட்சத்திரகள் ரசிப்பேன்

சில வேளைகளில்
அதுவா?இதுவா?
குழப்பிக் கொள்வதுண்டு

அப்படி இருக்குமோ?
இப்படி இருக்குமோ? என எதிர்பார்த்து
எப்படியும் இல்லாமல் போவதுவும் உண்டு

நரகத்தை விட்டுத் தள்ளுங்கள்
நான் சொர்கத்தை அனுபவித்ததுண்டு
மலை பயணங்களில்
ஜன்னல் இருக்கைகளில்..!


Saturday, August 23, 2008

ரஜினி, விஜய் பத்திரிக்கைகள் உருவாக்கும் அதி புனைவு


1967 பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் ஒ.பன்னீர் செல்வத்தை தவிர அனைத்து முதல்வர்களும் சினிமா துறையை சார்ந்தவர்களே. கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் தொடர்ந்து எழுதி
அழுத்துப்போன பத்திரிக்கைகள் 'பாட்சா' படம் வெளியான நாளிலிருந்து ரஜினியை துரத்தி கொண்டிருதன. 'வரும் ஆனா வராது' என்று வடிவேலு பாணியில் இழுத்தடித்து கொண்டிருந்த ரஜினியின் பிம்பம் நெய்வேலியில் நடந்த கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுத்து எடுபடாமல்போன பின்பும் , அதை தொடர்ந்து ஒக்கேனக்கல் பிரச்சனையை லாவகமாக கையாண்டு தாபித்தபின்பு,குசேலன் படத்திற்காக மன்னிப்பு கேட்டபோது சுக்கு தூளாக சிதரிபோனது.

பலரும் ரஜினியை கிழித் தெடுத்தபோது பாலச்சந்தர் மட்டும் 'குரு' என்ற முறையில் ரஜினிக்காக பரிந்து பேசினார். இதை சரியான வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட பாரதிராஜாவும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் . உண்மையான தமிழன் எனவும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்
.

பின்குறிப்பு :

பாலச்சந்தருக்கு குசேலன் நடித்து கொடுத்ததைப் போன்று , பாரதிராஜாவின் தயாரிப்பில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்தால் நன்றிக் கடனாக அமையும் .

இதையெல்லாம் பத்திரிக்கைகள் பேசி ஓய்தாகி விட்டது . அதனால்தான் இளையதளபதி விஜயின் தலையில் அரசியல் மஞ்சத்தண்ணியை
ஊத்து
கிறார்கள் விஜயும் முனைப்பாக ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார்.வணிக பத்திரிக்கைகள் தங்களுக்கு பெருந்தீனி கிடைத்தது என்ற சந்தோஷத்தில விஜயைப் பற்றி எழுதித் குவிக்கின்றன.

இளையதளபதியின் வரலாறு?

இளையதளபதியின் தந்தை சந்திரசேகர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்ப்பட்ட திரைபடங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கற்பழிப்பு காட்சிகளை வைத்து புரட்சி ஏற்படுத்தியவர்.விஜயின் ஆரம்ப காலங்களின் அவரது படத்தை அவரது தந்தை சந்திரசேகரே இயக்கினர்.யுவராணி,சங்கவி ஆகியோர் நனைந்த படி ஆடும் காட்சிகள் இல்லாத விஜய் படங்களும் கவர்சிக்க்காகவே ஓடிக் கொண்டிருந்தன.இன்றும் தெளிவாக சொல்வதானால் விஜய் செக்ஸ் பட நடிகராகவே அறியப்பட்டார். விஜயின் தந்தையே எதிர்பாராத வகையில் விஜயின் வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் வெளிவந்தன இளைய தளபதியாகவும் மாறினார்.கொஞ்சம் கூட சிந்திக்க இயலாத இளைஞர்,இளைஞிகளின் கனவு நாயகனாக மாறினார்.

இந்த உயரத்தை தக்கவைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்த விஜயும் அவரது தந்தையும் எடுத்த முதல் முடிவு தான் ரசிகர் மன்றக் கொடி.

பூமியின் வெப்பத்தை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.நகரமெங்கும் இலை உதிர்வதைப் போல கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிக்கைகள் விஜயை மகாத்மாவாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்கின்றன.

பின்குறிப்பு :

விஜயின் 'திருமலை' பட பேனர் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 'சுரேஷ்' என்பவர். காரைக்குடியில் எனது வீட்டின் அருகே இருந்தவர்.கனவுகளையும்,சுரேஷையும் இழந்த அவனது அம்மா இன்று பள்ளிக்கூட வாசல்களில் மிட்டாய் விற்று பிழைத்து வருகிறார்.

அரசியலும்,ஊடகமும் மக்களின் நம்பிக்கையை இழந்த பின்பும்,அது பாமர மக்களை பெருந்தீனிகளாக மாற்றி விட முயற்சிக்கிறது.