Tuesday, September 2, 2008

மானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வைஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாக்குமரியில் வானுயர வள்ளுவர் சிலை, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், மற்றும் செம்மொழி தகுதியை தமிழ் அடைந்தது வரை, கலைஞரின் தமிழ் பணியை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும், நமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிய மனக் குறை ஒன்று இருந்து வந்தது. அது திருக்குறளை ஒட்டி அமைந்த மனக்குறை.

திருக்குறளில் திருவள்ளுவர் "தமிழ்" என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என தமிழாசிரியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இந்த இடத்தில் தன் கலைஞர் நம்முடன் வித்யாசப்படுகிறார். அவர் பல நாட்களாக தலை கீழாக நின்று சிந்தித்ததன் விழைவு (இது ராமன் விழைவைக் காட்டிலும் அற்புதமானது) "மச்சான் விழைவு". இந்த மச்சான் என்ற வார்த்தையையும் வள்ளுவர் பயன்படுத்த வில்லை என்பதை அறிந்த கலைஞர், அதை உலகுக்கு அறிவிக்க ஆசைப்பட்டார். இதன் பயனே கலைஞர் டி.வி. இந்தியாவிலேயே பெயரை பதிவு செய்த அறுபத்து ஐந்து நாட்க்களுக்கு உள்ளாகவே டி.வி சேனலை தொடங்கிய குழுமம் கலைஞர் டி.வி. (அதிகார வர்க்கத்தின் வலிமை நிருபிக்கப்பட்ட இடம் அது)

கலைஞர் டி.வியின் ஆரம்ப நாட்களில் நல்ல தமிழில் நமீதா "மச்சான்" என்று அழைக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள்
சிலாகித்தார்கள். கலைஞர் கனவும் இனிதே நிறைவேறியது.

நமீதா பேசும் தமிழைக் கூட சகித்து கொள்ளலாம். அனால் நடன நிகழ்ச்சிகளில் "கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்" செய்கிறார்கள். எவன் பொண்டாட்டியோட எவன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்றது? _ _ _ _ _ _!
சன் மியூசிக், இசையருவி தொகுப்பாளிகள் சாப்டிங்களா? என்ன சாப்பாடு? யார லவ் பண்றீங்க? என்று பல்லை இளித்துக்கொண்டு கேட்கிறார்கள். இவர்கள் கேட்ட பிறகு தான் தமிழன் சோறு சமைப்பான், சாப்பிடுவான், காதல் செய்வான். இல்லையா?

சுதந்திர தினத்திற்கும் நமீதா, நயன்தாராவிட்கும் என்ன சார் சம்பந்தம்? நாம் ஏன் இப்படி அறிவீலிகளாக மாறிப்போனோம்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சுசில் குமார், விஜேந்தர் குமார் ஆகியோரைப் பற்றி அரை மணி நேரம் நிகழ்ச்சி வழங்க லாயக்கற்றவர்களாக டி.விக்கள் மாறிப்போனது யாருடைய சாபக்கேடு?

காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்று வந்த சாந்தி, பால்(ஆனா?பெண்ணா) சர்ச்சையில் சிக்கிய போது பிரச்சனையை ஊதி கிளப்பியதேயன்றி, எந்த ஊடகமும் குரல் கொடுக்க வில்லையே?

ஆகஸ்ட் 31ம் தேதி கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில், புதுக்கோட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் விஜயலட்சுமி(15) இரண்டாவது இடத்தையும், கவிதா(16) நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்த இருவரும் ஷூ அணியாமலேயே ரத்தம் கசிய ஓடி வந்து பரிசுகள் பெற்றனர். இதையெல்லாம் பற்றி பேச மீடியாவிற்க்கு நேரம் இல்லை. ஆனாலும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் பண்ணுவதிலும், காதலை சேர்த்து வைப்பதிலும் பெரும் சேவை புரிந்து வருகின்றன.

இந்த வேலைக்கெல்லாம் எங்கள் ஊரில் வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள்! அந்த பெயர் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்!

இந்த பத்தியைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

19 comments:

srinivasan said...

sariyana sattai adi. varaverkiren

macro said...

sariana kelvi nanba
ithu tamil natin ettu thikum ketkatum.

anbudan
velayutham

கிருஷ்ணமூர்த்தி said...
This comment has been removed by the author.
arshadh said...

ஏன் கலைஞர் டிவியில் மட்டும் தான் தொகுப்பாளினிகள் பல்லை காட்டிக்கொண்டு பேசுகிறார்களா...மற்ற டிவியில் இழுத்து போர்த்திக்கொண்டு வந்து போகிறார்களா...

புதுக்கோட்டை சாந்தி ஆனா? பெண்ணா ? என்கிற சர்ச்சை வந்த போது கலைஞர தான் கொடுப்பதாக இருந்த பதினைந்து லட்ச ரூபாய் கண்டிப்பாக தரப்படும் என்பதில் உறுதியாக நின்று, அந்த பெண்ணுக்கு ஆதரவளித்தார்... அதை மட்டும் ஏன் வசதியாக மறந்துவிட்டீர்கள்....

கிருஷ்ணமூர்த்தி said...

நண்பரே இந்த பத்தியின் நோக்கம் கலைஞரின் அரசியல் திறமையை விமர்சிப்பதல்ல. கண்ணகிக்கு சிலை வைத்த கலைஞரின் திறனில் உருவான மானாட மயிலாட நிகழ்ச்சியையும்,அனைத்து சேனல்களின் பொறுப்பின்மையின் கோபமே....

One and only said...
This comment has been removed by the author.
மதிபாலா said...

அது சரி...இதுக்கு பதில் உங்க பதிவிலயே இருக்கே..சற்றேறக்குறைய இதோ போன்ற நிகழ்ச்சிகள் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்தபோதும் நீங்கள் குறிப்பிட்டு கலைஞர் தொலைக்காட்சியையும் , இசையருவியையும் சாடும்போதே உங்கள் நடுநிலைமை நச்சுன்னு தெரியுது தலைவரே..அத எதுக்கு நீங்க தெளிவா விளக்குறீங்க????

ஆமா , கலைஞருக்கும் , நமீதா சொல்ற மச்சானுக்கும் , வள்ளுவர் எழுதாம விட்ட "தமிழ்"ங்கிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்???????

நம்ம மட்டும் இப்படி மொட்டத்தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சி போட்டு மக்கள குழப்பலாமா??

Ganesan said...

There are both positive and negative things in this part. Kalignar has contributed lot to modern tamil literature.

Namitha's tamil should not be a concern and cannot be linked with this context.

heidi said...

Ungaloda vayasuku ivalvo sindhipadhu adhigam dhaannn...Roomba nalla solirukeenga...Naada thiruthra madhiri PADAM eduka ennoduya vazhthukkal thambi......

Dr.Sarathy said...

உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதோ?
ஆமா , கலைஞருக்கும் , நமீதா சொல்ற மச்சானுக்கும் , வள்ளுவர் எழுதாம விட்ட "தமிழ்"ங்கிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்???????

ரெம்ப கேவலமான பதிவு

மனுஷம் said...

vaa thalai
kadaisiya oru thamiz kural

vaazththukkal

endrum, endrenrum

manusham

saran said...

TO SARATHY.

திருக்குறளுக்கும் , தமிழனுக்கும் சம்மந்தம் இல்லையா ?
கலைஞர்க்கும் , கலைஞர் டிவி க்கும் சம்மந்தம் இல்லையா?
கலைஞர் டிவி க்கும் நமிதாவுக்கும் சம்மந்தம் இல்லையா ?
என்னைய பேசுற சாரதி.தம்பி சரியாதான சொல்லுது .

Balaji Rao N said...

in Namitha Left corner letters dikkilona? what is that meaning?

arivu said...

nanbarkale mattravarkalum muththamilviththakarum ondra evarudaya tv poruppatru seyalpadalama saathien mulam arasiyalukku vandha ramamadossukku ulla poruppu(makkal tv)thamil mulam ariyanai eriavarukku vendama.varalaru muththamilviththakarai mannikkathu.

Yazh said...

Ithu mathiriyana nigazhchikalukku kaaranam, thamizharkalin neenda nagarikathai pathi ariyathavargal tholaikatchikalin mukkiya porupil irukirarkal avarkal than naam ethai rasikka vendum entru theermanikkum kodumai ingae nadakirathu.Ithai matra ungalaipol kalithurail iruppavarkal mun vara vendum.
Melum ulagamayamakkalum oru mosamana karanam.

clairvoyance.2008 said...

Karunanidhi avargal seitha mukiyamana paniyil hindhi edhurpu porattamum ondru...

Hindhiyai edhirthu... hindhiyai tamil naatil adiyodu ozhithuvittar... bale bale....

adhanal... avarukku migapperiya payan kittiyadhu ....ariyanai earinaar...

aanal makkal innum mooda nambikayil uzhangirargal.. innamum hindhi vendam engirargal... idhu paithiyakkarathanam... tamilzhayum padi... hindhiyayum katrukkol..

hindiyum aangilamum theriyamal.. kundisettil kudhirai ottugirargal...

Pira mozhippulamai onrum kuttramillai ...

Moolai irundhal sindhikkalam ...

Anonymous said...

What you tring to say... why you do like this...give me ur news properly... i am not getting what you trying to say.. you waste your time and my time also....

Anonymous said...

hes a nut... maan mayil irandilum aan mattumae azhagaaha irukkum... appadi endral jodi nadanathirku indha peyar evvaru porundhum? thamizh vaazhga...

Prasad said...

Arputham thalaiva... yenna sonnalum intha pasangalukku mandai la yerathu...yellam pooota case