Thursday, September 25, 2008

J.K.ரித்தீஸ் குமார்-காலத்தின் கட்டாயம்

இருபது நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாலையில், என்னுடைய நண்பன் விஜேந்திரன் சிங்கப்பூரிலிருந்து என்னை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினான். இங்கே சென்னையில் இருந்த நாட்களில் காலை பத்து மணி வரை தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் அவன், அதி காலையில் எனக்குபோன் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. போனை எடுத்து பேசிய போது விஜேந்திரனின் குரல் மிகவும் பதட்டமாக இருந்தது.காரணம் கேட்டபோது, அவன்கூறிய செய்திகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

"
முந்தய நாள் இரவு J.K.ரித்தீஸ் குமார் நடித்த நாயகன் படம் பார்த்ததாகவும், அப்போதிலிருந்து இன்னும் தூக்கம் வரவில்லை. நீ அந்தபடத்தைப் பற்றி ப்ளோகில் எழுத வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டான். நாயகன் ட்ரைலரை பார்த்த எனக்குபடம் பார்க்கும் தைரியம் வரவில்லை. ஆனாலும்விஜேந்திரன் எனக்கு தொடர்ந்து போன் செய்து எழுதுமாறு கேட்டுக்கொண்டான்.


"ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா?" என நினைத்ததைத் தவிர எழுதாததட்க்கு வேறு எந்தகாரணமும் இல்லை.

நடிகர் விஜயின் முதல் பட விமர்சனத்தில் "இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்குதேவையா?" எனக் கேட்ட ஆனந்த விகடன், சச்சின் திரைப் படத்திற்க்கு எழுதியவிமர்சனத்தில் "விஜயின் கன்னங்கள் ஆப்பிள் போல இருக்கிறது" என்றுஎழுதியது.(எழுதியவரின் மன நிலையை பற்றி நீங்கள் சாவகாசமாக சிந்தித்துப்பாருங்கள்)

ஆகவே வீரத்தளபதி கவலைப் படத் தேவையில்லை. அடுத்த பட விமர்சனத்தில் விகடன் நண்பர்கள் 100க்கு 35 மதிப்பெண்கள் வழங்கி உங்கள் கன்னங்களை பலாப்பழம் என்றோ அன்னாசி பழம் என்றோ வருணிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ப்ரொடக்சன் மேனஜர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் "வீரத்தளபதி கிட்ட எதாவது இங்கிலீஷ் படக் கதையைசொல்லி படம் பண்ணப்போறேன்" என்று சொன்னேன். அதற்க்கு அவர் அதெல்லாம் சிரமப்பட வேண்டாம். ஏதாவது தமிழ் படக் கதையவே சொல்லி படம் பண்ணிரு!' என்றார்.

ஆகவே நண்பர்களே, இந்த பத்தியை கண்டு கொள்ளாதிர்கள். முடிந்தால் மறந்துவிடுங்கள். விரைவில் வீரத்தளபதியை வைத்து ஒரு படம்(பாடம்) எடுக்கப்போகிறேன். அதற்க்கு உங்களின் மேலான ஆதரவையும் வேண்டுகிறேன்.


10 comments:

அ.பொ.ஜெ.பூங்கதிர்வேல் said...

வணக்கம் நண்பரே...
நானும் நாயகன் படம் பார்த்தேன். ஆனால் அதற்கு முன்னால் அந்த ஆங்கிலப்படத்தையும் பார்த்துவிட்டேன். நானும் ஒரு ஆங்கிலக் கதை வைத்திருக்கிறேன். அண்ணன்கிட்ட சொல்லி சட்டுப்புட்டுன்னு ஒரு படத்த எடுத்துப்புடனும்.

இராவணன் said...

//ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா?"//

:)))))))

Lakshmi Sahambari said...

:-)

Unknown said...

veerathalapathi vengayathalabathi.evan padatha paakapona thirumbi vara mudiyathu samathithan

VANDHIYATHEVAN said...

Mr.Kriss,
Pls leave ur Ass.Director job,
Keep writing,i think u have a good future to become a writer.

Unknown said...

r u fool

கிருஷ்ணமூர்த்தி, said...

சார்மிக்கு...
நீங்கள் யார்?
J.K.ரித்திஸின் மனைவியா?

Unknown said...

மழையில் முளைத்த காளன்கள் இரண்டு நாட்களில் சூரியனிடம் அழியும் ... பணம்... உள்ளவரை சகித்து கொள்ள வேண்டும்...

Prabu M said...

JKR padathai paartha neegadhaanga unmaiyaana "Veera thalapathigal!!"
Enaku elllaam avvalavu "Veeram" illainga... :)

Manoj said...

vanakkam mr.peyaratra yaathrigan....
j.k.rithisha pathi pesumbodhu
edhuku VIJAYa ilukuringa...