Monday, December 22, 2008

ஒரு கோப்பை மதுவும், விடுதலைக்கான வழியும்!

இறுக்கம் தளர்ந்து
கண்கள் பணிகின்றன

சூழ்ந்தவை யாவும்
நீர்க்குமிழ்களைப் போல
காணாமல் போகின்றன

போகிற போக்கில்
போய்விட்டால்
வலி ஏதுமில்லை

வளைக்கிற போதெல்லாம்
வளைய மறுக்கிறது
மனதும், உடம்பும்

மன்றாடினாலும்
காதுக்குக் கேட்பது
மனதுக்குக் கேட்பதில்லை

மனம் தூங்கிவிட்டால்
துக்கமேதுமில்லை

இருப்பதால் தான்
எல்லாம்.
இல்லாமல் போய்விட்டால்...

அதற்க்காகத்தான்
கொஞ்சம்
கொஞ்சமாக
ஓன்று
இரண்டு என்று
பல அவுன்ஸ்களாய்
பிராந்திப் புட்டிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்










ஓருலகம் உடைந்து
சில்லுச் சில்லாய்
சிதறிக் கிடைக்கிறது

எந்தப் பிரங்கையுமற்று
கண்கள்
தூக்கதிட்க்காக ஏங்குகின்றன.

2 comments:

Anonymous said...

"ஒரு கோப்பை மதுவும், விடுதலைக்கான வழியும் என்றபோது ஏதோ விடுதலை புலிகளை செல்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடிச்சிருக்குங்க கவிதை.