Thursday, January 1, 2009

நான் கடவுள்! (அஹம் பிரம்மாஸ்மி)



பாலாவின் படைப்பாளுமையைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. கங்கை நதியின் ஓரத்தில் வாழும் அஹோரி (aghoris) என்னும் பிணம் தின்னும் மனிதர்களைப் பற்றிய கதைதான் 'நான்கடவுள்'.

மேலும் இந்தக் கதை, எழுத்தாளர் ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். 'ஏழாம் உலகம்' நாவலில் முக்கிய கதாபாத்திரங்களான பிச்சைக்காரர்களைப் பற்றிய வருணனைகள் மிகவும் அந்தரங்கமான முறையில் எழுதப்பட்டிருக்கும். சகிக்க முடியாத உணர்வுகளின் தொகுப்பாக, விளிம்புநிலை மக்களின் பதிவாகவும் இருக்கும். படிக்கவே திணறும் இந்த நாவலைத் தழுவி திரைப்படமே உருவாக்கியிருக்கிறார்,பாலா. "பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்" என்று சொன்ன பாரதியைப் போல.


நேற்று இரவு பாலாவின் "நான் கடவுள்" பாடல் வெளியீட்டு விழாவைப் பார்த்ததிலிருந்தே, மனதுக்கு என்னமோ போல் இருந்தது. பாலாவைப் பற்றியே வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். 'பாலாவின் படைப்பாளுமை பேசித் தீராது' என்று தெரிந்தும்.
இடைமறித்து, நண்பன் சொன்னான்: மச்சி எதையும் குழப்பிக்காத. வில்லு ட்ரைலர் பாரு எல்லாம் சரியாகிரும்...

ஒன்றும் சொல்வதற்கில்லை என்பதைப் போல வாயை மூடிக்கொண்டேன்.


Aghori @ AGHORIES (YouTube)
http://in.youtube.com/watch?v=9GlKmMVzrK0

8 comments:

கைப்புள்ள said...

//இடைமறித்து, நண்பன் சொன்னான்: மச்சி எதையும் குழப்பிக்காத. வில்லு ட்ரைலர் பாரு எல்லாம் சரியாகிரும்... //

அது என்னமோ வாஸ்தவம் தான் :)

Anonymous said...

I have seen a documentry about them and it was shocking to see them eating corpse. Eventhough they are in small numbers, no one dares to questioning them. They are telling that eating the corpse make them to feel near to Lord Shiva. - Arun

கிரி said...

இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பாலாவின் திரைப்படத்தில் பல காட்சிகள் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதே அதன் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

Raj said...

//வில்லு ட்ரைலர் பாரு எல்லாம் சரியாகிரும்... //

தலவலி மருந்தா....இல்ல தலவலிக்கு மருந்தா

Raj said...

நாளைக்கு நீங்க இயக்குனராக ஜெயிக்கும்போது....விஜய்க்கு படம் செய்யவே மாட்டீர்களா!

Anonymous said...

This is the first time Arya performed in a strange role.

butterfly Surya said...

வில்லு டிரைலர் பார்தால் எல்லாம் சரியாகும்.

படம் பார்த்தால் " நான் கடவுள்" முயற்ச்சிக்கலாம்.

வில்லு.. கொடுமை.. கொடுமை. அதை நான் பார்த்ததுதான்..

Anonymous said...

Hi.... I like ur blog.. its so good.. Director bala really a great director and I am awaiting for this movie to release.. :)