Thursday, October 23, 2008

காலம் மறந்த கலைஞன்

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களைத் தந்ததில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு மிகப் பெரியது. மிகக் குறைவான திரைப்படங்களில் தன்னுடைய ஆளுமையை நிருபித்தவர். (பாரதியின் கவிதையைப் போல). ஆனால், இன்று கேளிச் சித்திரங்களை உருவாக்கும் பேரரசு போன்றோரின் அளவுக்குக் கூட இயக்குனர் மகேந்திரனின் பெயர் உச்சரிக்கப்படாமல் போனது, மிகப் பெரிய அவலம்.


மகேந்திரன் இயக்கிய திரைப்படங்கள்:
1) முள்ளும் மலரும்
2) உதிரிப் பூக்கள்
3) பூட்டாத பூட்டுக்கள்
4) ஜானி
5) நெஞ்சத்தைக் கிள்ளாதே
6) மெட்டி
7) நண்டு
8) கண்ணுக்கு மை எழுது
9) அழகியக் கண்ணே
10) ஊர் பஞ்சாயத்து
11) கை கொடுக்கும் கை
12) சாசனம்
13) அர்த்தம் (Teleplay)
14) காட்டுப் பூக்கள் (Teleplay)
மேலும் 26 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

லீலா மணிமேகலை அவர்களால் நடத்தப்பட்ட (இப்போது நின்றுவிட்டது) 'திரை' மாத இதழில் (ஜனவரி 2006), புதிய தலைமுறை தமிழ் சினிமா பற்றிய கேள்விக்கு இயக்குனர் மகேந்திரன் அளித்த பேட்டியின் சிறு பகுதி:

புதிய தலைமுறை தமிழ் சினிமா பத்தி உங்கள் கருத்து?
"இப்ப உள்ள இளைஞர்கள் சினிமாவில் வெற்றி பெறணும்னு நினைக்கிறாங்களே தவிர அதற்குரிய உரத்தை ஏற்றிக்கொள்ள மறுக்குறாங்க. இலக்கியம் படிக்கிறதில்லை. சமுகத்தை அவதனிக்கிறதில்லை. ஒரே ஒரு கேள்வி, காதலைத் தவிர நமக்குச் சொல்லறதுக்கு வேற ஒன்னும் இல்லையா? சர்வதேச அரங்கில் தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் தமிழர்களுக்கு ஐ லவ் யூ சொல்றதைத் தவிர வேறு பிரச்சினையே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரவில் நிர்வாணமாக இருப்பார்கள் கணவனும், மனைவியும், பகலில் மனைவி உடை மாத்தும்போது கணவன் வந்துட்டா அய்யய்யோ என்று பதறி கதவைச் சாத்துவாங்க. அது அழகு. வாழ்கையில் ஆழமான விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு டூயட், குத்துப்பாட்டு என்று எடுப்பது சரியில்லை. கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட காட்சிக்குத் தேவைப்படும்போது அப்படியே காட்டுவதில் தவறில்லை. ஆனால் கையை வெட்டி, காலை வெட்டி, pelvic movements காட்டி, ஆபாசமாக நடனமாட விடுவது கோரம்.



கோவிலில் நிர்வாண சிலைகள் இருக்கு. ஆனா அதை ஏன் கோவிலில் வச்சாங்க. இவ்வளவுதாண்டா, பார்த்துகோங்க என்று கோவிலில் தெய்வங்களை நிர்வாணமாக்கியிருந்தங்க நம்ம முன்னோர்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களிலை. இங்கு கதை இல்லாமல் கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் தொப்புள் இல்லாமல் படம் எடுக்கிறார்களா? ஆண் லுங்கியைத் தூக்கிக் காட்டுகிறான். பெண் பாவாடையைத் தூக்கிக் காட்டுகிறாள். மானக்கேடு".

இயக்குனர் மகேந்திரனின் சாதனைகள் சொல்லில் அடங்காது. மனதுக்கு நெருக்கமானது. இளம் இயக்குனர்கள் யாராவது, ஏதாவது ஒரு பத்திரிக்கையில் 'தனக்கு பிடித்த படம் உதிரிப் பூக்கள்' என்று பேட்டி கொடுப்பதோடு மகேந்திரன் மறக்கப்படுக்கிறார். இயக்குனர் மகேந்திரனின் சாதனைக்கு நிகரான மரியாதையை நாம் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

3 comments:

முகம்மது அமீன் said...

மிக யோசிக்க வேண்டிய செய்தி.... தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்....

Raj said...

நல்ல பதிவு...!

Prabu M said...

வணக்கம்,

சந்தேகமில்லாமல் இது ஓர் அருமையான பதிவு... எனினும்.. "காலம் மறந்த கலைஞன்" என்னும் தலைப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.....
காசு பணம் அள்ளும் நோக்கமில்லாமல் சினிமாவுக்கு வரும் மகேந்திரன் போன்ற கலைஞர்கள் மட்டுமே காலத்தை வெல்கிறார்கள்..... காலங்காலமாக மறக்கப் படாது அவர்களது படைப்புகள்... இந்த தொப்புளை நம்பிப் படமெடுக்கும் கலைஞர்கள் தரும் அல்லது அவர்களுக்குத் எளிதில் தரப்பட்டுவிடும் அங்கீகாரத்தையா மகேந்திரன் எதிர்பார்க்கப் போகிறார்??? காலத்தை வென்ற படைப்புகளைத் தந்துவிட்டு மன நிறைவோடு இருக்கும் கலைஞர்களுக்கும் பொன்னும், புகழும் தேவைப்படுவதில்லை..
அவர்களது பயணமே உண்மையான வெற்றிப்பயணம்.... இது என் கருத்து