Friday, October 17, 2008

முற்றுப்பெற்ற கவிதையும், முடிவில்லாத கோபங்களும்...

நாய்கள் யாவும்
நிலை குலைந்து ஓட
முடிந்த மட்டும்
சிறகடித்துப் பறக்கிறது
ஒரு பெட்டைக் கோழி

அதிர்ந்து அடங்குகிறது
பாதசாரியின் மனம்
சிறகொடிந்து விழுகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்

ஆனாலும்
கானலை விரட்டியபடி செல்கின்றன
நெடுஞ்சாலை வாகனங்கள்!
.................................
................................
இலைகளின்
......................................
மண்டியிட விருப்பமில்லாததால்
அவஸ்தைகள் நீள்கிறது
ஆனாலும்
மண்டியிட முடியாது
என்னால்!
......................................
இனி
அப்பாவின் தயவு தேவையில்லை
வேலை கிடைத்து
அடிமை சாசனம் எழுதுகிறேன்
பிழைத்துக் கொள்வேன்!

2 comments:

களந்தை பீர்முகம்மது said...

http://allinall01.wordpress.com/

Muhammad Anas said...

///// சிறகொடிந்து விழுகின்றன
வண்ணத்துப் பூச்சிகள் ஆனாலும் கானலை விரட்டியபடி செல்கின்றன
நெடுஞ்சாலை வாகனங்கள்! /////

ஆம் முடிவில்லாத கோபங்கள்தான்....