அக்டோபர் 28ம் தேதி காலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குமாரபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம். ஆனால் அவர்களின் குறி தப்பி... போரினால் இடம் பெயர்ந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியது. இதில் மூன்று பேர் இறந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட பிரபாகரன் இலங்கை ராணுவம் மீது விமானத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
28ம் தேதி இரவு புலிகளின் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், மன்னார் மாவட்டத்திலுள்ள தள்ளாடி என்ற இடத்தில் இருக்கும் சிங்கள ராணுவ தரைப்படைத் தளத்தை இலக்கு வைத்து சீறிப்பாய்ந்தது. சரியாக 10.20 மணிக்கு இலக்கை அடைந்த புலிகளின் விமானம் தரைப்படைத் தளத்திற்க்கு நேர் உச்சியிலிருந்து மூன்று குண்டுகளை அடுத்தடுத்து பிரசவிக்க தரைப்படைத்தளம் வெடித்து சிதறியது.
"இந்த தளத்தில் இயங்கிவந்த ரேடார் முற்றிலுமாக லாக் ஆகி விட்டதால் புலிகளின் விமானத் தாக்குதலை தடுக்க முடியவில்லை. சீனாவிலும், இஸ்ரோவிலிருந்தும் தருவித்த அதி நவீன 20 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளது" என்கின்றனர் ராணுவத்தினரே.
இலங்கை ராணுவம் சுதாரிப்பதட்க்குள் இலங்கையின் வட பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு அப்படியே கிழக்கு பகுதியில் உள்ள கொழும்பு நகரை நோக்கி அதிவேகத்தில் சீறிப்பாய்ந்துள்ளனர் வான் படையினர்.
கொழும்பு நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெலனி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் கேலனிதிச அனல் மின் நிலையத்தை சரியாக இரவு 11.45க்கு இரண்டு குண்டுகளை விடுவித்து ட்ராம்ஸ்பார்ம்களையும் அழித்தனர். தாக்குதல் நடந்த சமயத்தில் மின் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்பலி நிகழவில்லை.
163 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், சுமார் 800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையம் தான் கொழும்பு நகரத்தின் மின் தேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. "அதி முக்கியமான இந்த மின் நிலையத்தை குறிவைத்து புலிகள் தாக்கியதை அறிந்து ராணுவத்தினரே நிலை குலைந்து விட்டனர்" என்கிறார்கள் மிரட்சியுடன் கேலனிதிச மின் ஊழியர்கள்.
பின்குறிப்பு:
1) கொழும்பு நகரத்திற்க்கு மற்றொரு பகுதியிலிருந்து மின்சாரம் வழங்க 4 மணி நேரம் போராடியிருக்கிறார்கள்.
2) இது விடுதலைப் புலிகளின் 8வது ஏர்அட்டாக்.
3) ஒரே சமயத்தி இரண்டு தாக்குதலை புலிகள் நடத்தியதும் இது தான் முதல்முறை.
4) வடக்கில் அட்டாக் நடத்தியதுமே, ராணுவத்தின் அத்தனைப் படைகளும் உஷார் நிலைக்கு வந்துவிட்டன. அப்படியிருந்தும் இலக்கை தாக்குவதட்க்காக ஒன்னே கால் மணி நேரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த புலிகளின் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளது ராணுவம்.
5) இரு மாதங்களுக்கு முன்னால் வவுனியா ராணுவ முகாம் மீது புலிகள் ஏர் அட்டாக் நடத்திய போது இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்தி:
"புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம். அவர்களிடம் விமானப்படை இனி இல்லை
நன்றி:நக்கீரன்
4 comments:
Hi ,
I read all your posting in this blog.Its fantastic.I wish you all
the best for you career.
Thanks
Siva shankar
the poem on the title is ok...
"Maramaga aagivital kiligalai pidikkamudiyahi..."
I cant understand this line...
Do u want people not to become like a tree ..?? if so.... why do u want to catch the free moving independent birds... ??
your poem is confusing, banal, trite and insipid
mama ur blog is very nice da...really i impressed by ur words..kalakittada
thanks da machi...
Post a Comment