Monday, November 24, 2008

நடிகர் விஜய் அவர்களே தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்!

நடிகர் விஜய் அவர்களுக்கு,
எந்த ஒரு நாட்டில் கலையும், அரசியலும் சிறந்து விளங்குகிறதோ அந்த நாட்டில் உள்ள மக்கள் அறிவிலும், செல்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், நமது தமிழ்நாட்டில் 'திரைப்படம்' எனும் 20ம் நூற்றாண்டின் ஒரு ஆகச்சிறந்த கலையை மிகமோசமாக பயன்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை.

வாழ்க்கையை பதிவுசெய்யும் கலையை பொழுதுபோக்குக் களமாக, நடனம் எனும் நளினத்தை குரங்காட்டமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்.

ஒரு மனிதன் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறானோ அந்தத் துறையை தன்னால் இயன்றவரை சில கட்டங்களாவது உயர்த்துவானேயானால், அவன் மதிப்பிற்குரியவன் ஆவான். பாலுமகேந்த்ரா, மகேந்திரன், மணிரத்னம், பாலா போன்ற சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் உயரத்தை அதிகரிக்க முயலும் போதெல்லாம் குரங்காட்டம் மூலம் நிங்கள் அதனை தெருவுக்கு இழுத்து வந்து விடுகிறீர்கள். இந்த உண்மையை எந்த ஒரு தரமான சினிமா விரும்பியும் மறுக்கமாட்டான்.

அடுத்ததாக அரசியல். அரிசி கொடுத்தவன், அயன் பாக்ஸ் கொடுத்தவன், காலை ஏழு மணிக்கே மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு 8லிருந்து 4மணிவரை உண்ணாவிரதம் இருந்தவனெல்லாம் அரசியல் நடத்தினா நாடு எப்படி இருக்கும்.

சினிமாவைக் கெடுத்து போதாதென்று அரசியல் வேறு. விஜய் அவர்களே உங்கள் தந்தையைப் போன்று குடும்ப உறவுகளை!? சித்தரிக்கும் (கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த) படங்களை எடுக்கும் சிந்தனைவாதிகள் உங்கள் பின்னே இருப்பது தான் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

உங்களுக்காக ரசிகர்கள் 37ஊர்களில் உண்ணாவிரதமிருந்தார்கள். சராசரியாக 50 பேர் என்று கணக்கிட்டால் மொத்தம் 37 X 50 = 1850 பேர். டெப்பாசிட் பணம் கூட கிடைக்காது சார்.

நான் கூறுவது இல்லாமல், உங்கள் கணக்கு சரியாகுமானால் எங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. ஏற்கனவே அரசியல் கெட்டுவிட்டது. நீங்களும் கெடுக்க வேண்டாம். உங்களுக்கு உரிமை இருக்கிறது தான். மறுப்பதற்கில்லை. நேர்மையானவர்கள் வரட்டும்.

நிஜத்தில் நடித்தது போதும்; இனியாவது சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள். நான் வேண்டுமானால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களில் பயன்படுத்திய 'ஒரே பாடலில் பணக்காரனாகும்' பாடல் கேசட்டை வாங்கித்தருகிறேன். வைத்துக்கொண்டு பெரிய ஆள் ஆகிவிடுங்கள்.

"சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேண்டும் பேரப்புள்ள" என்று உங்கள் படங்களுக்கு தொடர்ந்து ஜால்ரா பாடல்களை எழுதி வரும் பா. விஜய்யைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன். அதனால் தான் சொல்கிறேன்.நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்!

20 comments:

முரளிகண்ணன் said...

நெத்தியடி

Dharani said...

Nandraaga ulladhu ungal padaippu

mano said...

VERY GOOD Blog i like this

crazy said...

அருமை .. விஜய் படத்தை எப்போது இயக்க போகிறிர்கள் ...

Ellora JPS said...

nan yarukum rasiganillai...but Innum ethanai kalathukuthan solvenga?! immm!. Ippa arasiyalil ullavarkal ellam romba yokiyama...
kadupa irukuthunga. arasiyalai partha vamit varuthu... so Inda nadum nattu makkalum nasama pokatum.... veerapa vasanam nabakathuku varuthu... but ur comment is nice.

Anonymous said...

நல்லதொரு பதிவு. அண்ணா எப்படிங்கண்ணா உங்களல் மட்டும் முடிது? கலக்கிட்டிங்க.

Anonymous said...

vijay entra oru selfish manithanin muha thirayai kiliththathatku nantri...

Anonymous said...

YES VIJAY...LISTEN TO THE PUBLIC COMMENTS BEFORE YOU ENTER THE NASTY POLITICS...OK.

Nam-Tamil said...

நண்பரே,
அருமையன் பதிவு.... இதைவிட யாரும் அழகாக சொல்ல இயலாது......!!

//நிஜத்தில் நடித்தது போதும்; இனியாவது சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள்.//

சவுக்கடி....! இதற்கு மேலும் அவர் அரசியல் வந்தால்....?? அவரின் புர்வஜென்ம பாவம்....!!! (ரஜினி சொல்வதை போல்.... இது அவருக்கும் பொருந்தும்... !!)

இன்னும் நிறைய எழுதுங்கள்...!! உங்கள் எழுதுத்தை நாங்கள் தொடர்ந்து படிக்கிறோம்...... நன்றி...!!!

Raj said...

நல்ல கட்டுரை...ஆனா அதுக்கு எங்கே புரியப்போகுது

ஜுர்கேன் க்ருகேர் said...

நல்லவர்களை வரவும், வளரவும் விடாத இச்சமுதாயத்தினால்தான் திரையில் ஆட்டம் போட்டு சம்பாதித்தது பத்தாதென்று திரை மறைவிலும் ஆட்டம் போட விரும்புகிறார்கள் இந்த ஆட்ட நாயகர்கள்!

Chuttiarun said...

hi krishna.. please give link to www.thamizhstudio.com in your blog.. please dont foeget.

screwers said...

this is johnny da.. i know when yu read this definitely scold me coz my comments in english.. irunthalum vijaya pathi yezhuthunathu nalla iruku.. paa vijaya pathi inum yethir paakurom..

sujithan said...

இணையத்தள நன்பரே
விஜய் என்றாலே உங்களுக்கு விசித்திரமாக இருக்கிரதோ
விஜய் போல நல்ல நடிகர்கள் அரசியளுக்கு வருவது தவறல்ல
சினிமாவையும் அப்பாற்பட்டு சமுதாயத்திற்க்கு வந்து அக்கறையுடன் ஈடுபடுவது
சிறப்பு. எந்த நடிகனுக்கும் இல்லாத சிறந்த உணர்வு சிறப்பு விஜயுக்கு உள்ள்து அதையிட்டு பெருமைப்படுங்கள்
அவர் அரசியளுக்கு வந்து நல்ல வழிகாட்டியாக இருப்பார்
ஈழ்த்தமிழர்களின் உணர்வுகளை உணர்ந்து அதற்க்காக உண்ணாவிரதம் இருந்தது அது அவர் ஒரு உன்னதமான தமிழன் என்று வெளிப்படுத்தினார் அது ஈழத்தமிழர்களின் கண்ணீர்களை துடைத்தது
இனிமேலாவது இவ்வாறு விமர்சிக்கதீர்கள்

ஆட்டம் போட்டு பல்லாயிரக்கனக்கான் ரசிகர்களை வைத்திருப்பது என்பது சுலபமான காரியமல்ல

kanojan said...

தங்களின் ஈழ தமிழர் மீதான பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.
இளையதளபதியின் போராட்டம், ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.

இனிமேலாவது இவ்வாறு விமர்சிக்கதீர்கள்

Will said...

lol. I'm sorry that I have to comment in English. Your article was genuinely funny and I really liked your sarcastic comments. Let's leave the film category, because, Vijay never wants to improve anyway. I just have a few questions for you:
1. Are you "the" mutton biryani caterer? or are you a cook at Vijay's home? or did you see him eating it?
2. He gave "Free rice", "Free Iron" to people to improve his image in politics. I feel, although, the returns he expects might seem selfish, it DOES help few people. Have you ever done anything selflessly(I mean it!) by spending money from your own pocket? Answer honestly, I'll be checking your reply.
3. I see you care about politics and our people. What have you done to improve the society? One simple thing? You might be a great assistant director and I wish you become a wonderful director soon. Then, I'll see whether you prefer improving the "art" of cinema rather than going after mere "fame" and "money".

Sorry, if I had been offensive. I'm neither a fan of Vijay nor do I hate him. I just can't tolerate people who write bullshit(especially about politics) with hardly any facts.

துளசி கோபால் said...

துணை இயக்குனரா?

அப்ப டாக்குட்டர் படத்துலே உங்களுக்கு நோ ச்சான்ஸ்!!!!!

உண்மையைப் புட்டுப்புட்டு வச்சதுக்கு இன்னுமா 'ஆட்டோ' வரலை??

நல்ல பதிவு.

Suresh said...

//அடுத்ததாக அரசியல். அரிசி கொடுத்தவன், அயன் பாக்ஸ் கொடுத்தவன், காலை ஏழு மணிக்கே மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு 8லிருந்து 4மணிவரை உண்ணாவிரதம் இருந்தவனெல்லாம் அரசியல் நடத்தினா நாடு எப்படி இருக்கும்.//

Nan ungaludan kaikorkirane :)
Enoda kanavum athu than,

unga post padichi romba santhosa pattan, enoda postyum parunga, padichi pidichi iruntha ungaloda ukkathai karuthaiyum solung. voteum podunga.

Soon we can start a young politics association irrespective of cinema and bad politicians

udhaya said...

hahahahaha Semma comedy paa...

Semma Lines...

Hats Off

Anonymous said...

arumai thola....