Sunday, November 9, 2008

சூப்பர் ஸ்டாரும்,'என்னத்த' கண்ணையாவும்!


நான்கு நாட்களுக்கு முன்னதாக எந்த சேனலை பார்ப்பது என்ற குழப்பத்துடன் ரிமோட்டை வைத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது சன் தொலைக்காட்சியில், ரஜினி தன் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.


ரிமோட்டை கீழே வைத்துவிட்டு, ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ரஜினியின் முகமானது, நடிகர் 'என்னத்த' கண்ணையாவை நியாபகப்படுத்தியது. எந்திரனில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினியும், தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வரும் 'என்னத்த' கண்ணையாவும் மிக நெருக்கமான உருவ அமைப்புடன் இருந்தார்கள்.

'ரஜினி' என்ற நடிகனை வியாபாரிகள் (தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்) பன்ச் வசனம் பேசவைத்து வசூல் மன்னனாக மாற்றிவிட்டார்கள். ஆனால் 'என்னத்த' கண்ணையா பேசிய வசனங்கள்...

"என்னத்த...போயீ.., என்னத்த...செய்ய..?" (மன்னன்)
"வரும்... ஆனா வராது..!"
"சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு...மின்னுரிங்க..."(தொட்டால் பூ மலரும்) இப்படியே இழுத்து இழுத்து வசனம் பேசி, வெறும் கண்ணையா 'என்னத்த' கண்ணையாவாக மாறிவிட்டார்.
என் நண்பன் மகேஷ் அடிக்கடி சொல்வது மாதிரி எல்லாத்துக்கும் கட்டம்(ஜாதகம்) நல்லா இருக்கணும் போல! நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட கட்டம் நல்லா இருக்கானும் போல.., என்னுடைய கட்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்; இருளில் மூழ்கியபடி...

8 comments:

Jayaprakashvel said...

i ahve seen ur orkut account. natsaththirangalai uruvaakubavan, nalla thodar. also ur writings in the blog are all interesting and praise worthy.i wish u more success.

த.கிருஷ்ணமூர்த்தி said...

To Jayaprakashvel,
Thank u...

crazy said...

கட்டம் என்பதை விட ரஜினி அவர்கள் இளமையில் பட்ட கழ்டங்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் ... திணை விதைத்தவன் திணை அறுப்பான் ... உங்கள் நறுடல்கள்... சில நேரங்களில் காய படுத்துகிறது .. அவரை விமர்சிக்க யோசிப்பது நல்லது ...

YOKESH said...

Crazy அன்பரே..

ரஜினி காந்த அவர்களை கிருஷ்ணமூர்த்தி குறைத்து மதிப்பீடு செய்ததாக எனக்கு தோன்றவில்லை.."கட்டம்" என்றவர் கூறியது வெறும் வழக்கு சொல்லாகவே எனக்கு பட்டது..மேலும் ரஜினி அவர்கள் பட்ட கஷ்டங்கள் நமக்கு இயல்பாக தெரிய வந்தது..ஆனால் "என்னத்த" கண்ணய்யா என்ன பாடு பட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம்..! திரை உலகில் வெற்றி பெற திறமையோடு சந்தர்பங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து..!

-யோகேஷ்

பின் குறிப்பு: Blog என்பதின் நோக்கமே சுய கருத்துப் பதிவு தானே.

crazy said...

திரு.லோகேஷ் அவர்களுக்கு
ஜாதகம் என்று குறிப்பிடவே... நான் கூறினேன்... நான் இரண்டு வயதில் இருந்து ரஜினி படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தவன் ..பார்கிறவன் .. அதனால் என்னவோ .. பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் .. நீங்கள் கூறுவது சரி... திரை உலகில் மட்டும் அல்ல.. எல்லா இடங்களிலும் இரண்டும் தேவை... எனக்கு தோன்றியதை மட்டும் வெளி படுத்தினேன்... சுய கருது க்குட காயப்பட வைக்காத????? -செந்தில்

Anonymous said...

என்னத்த கண்ணைய்யா மீது தங்களுக்குள்ள கரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.ரஜினியின் முகம் என்னத்த கண்ணையா போன்று இருக்கிறது என்பது நல்ல கண்டுபிடிப்பு.
ரஜினியின் ஸ்டார்டோமையோ , ரசிகர்கள் அவர் கட்ட் அவுட்டிற்க்கு பால் ஊற்றுவதையோ விமர்சித்திருந்தால் பேச்சே இல்லை.ஆனால் அவர் உடல் வாகையும் முக அமைப்பயும் பற்றி விவரித்து அவரைக்குறைத்துக் கூறுவது மிகத்தவறானது.
மதுரைக்கு போனீங்கன்னா பாக்குறதுக்கு சின்ன வயசு வடிவேலு மாதிரியே குறைந்த பட்சம் 50 பேர பாக்கலாம் ஒரு நாளில்.வடிவேலுக்கு ஜாதகம் நல்லா இருந்தது அதனால காமெடியன் ஆயிட்டாரு.இன்னொருத்தனுக்கு ஜாதகம் நல்லா இல்ல அதனால அவன் டீ ஆத்திகிட்டு இருக்கான்னு சொல்ற மாதிரி இருக்கு.ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்று சில பெரிய இயக்குனர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.மறைந்த நடிகர் டி.எஸ்.பாலைய்யவிற்க்குப் பிறகு ஒரு பிரேமை ஆக்கிரமிப்பது ரஜினி என்கிறார்கள்.ரஜீனிக்குப் பிறகு வடிவேலு.
நல்லா ஜாதகம் பார்க்க தெரிந்த யாரிடமாவது கேளுங்கள்.ஒரே மாதிரி கிரங்களின் பார்வை பெற்ற ஜாதகர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழனும்ங்கற அவசியம் கிடையாது.
கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் கண்டதையும் கிறுக்கி பொதுவில் வைக்காதீர்கள்.
உங்களுடைய சில பதிவுகளில் கூரிய படைப்பற்றல் தெரிவதால் தான் இவள்வு பெரிய பதில் ் அடிக்க வேண்டி வந்தது.ஒரு நல்ல ஆல் ரவுன்டர் ஹிட் விக்கெட்டில் டக் அவுட் ஆன மாதிரி இருக்கு.

crazy said...

நன்றி கார்த்திகேயன் ...

த.கிருஷ்ணமூர்த்தி said...

TO
crazy,YOKESH,கார்த்திகேய‌ன் தவமியற்றி...

தங்களின் கருத்திற்க்கு நன்றி. நானும் ரஜினி ரசிகன் தான். முள்ளும் மலரும், மன்னன் மற்றும் தளபதி ஆகிய மூன்று திரைப்படங்களையும் இருபது முறைக்கு மேலாக பார்த்து ரசித்திருக்கிறேன். ஜாலியாக எழுதப்பட்ட ஓன்று தான் இந்தப் பத்தி.

'ரஜினி' என்ற நடிகனை வியாபாரிகள் (தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்) பன்ச் வசனம் பேசவைத்து வசூல் மன்னனாக மாற்றிவிட்டார்கள்.

இந்த வரியையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ரஜினி நல்ல நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மற்றபடி எனக்கு ஜாதகத்திலும் நம்பிக்கை இல்லை.