Wednesday, November 11, 2009

இந்தியா ஒரு poor country-இல்லையா?


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள குரூஸ் கப்பலில் photographer வேலைக்காக நானும் எனது நண்பர் சரவணனும் தி.நகரில் உள்ள கிளை அலுவலகத்திட்க்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் மேலாளர் நாங்கள் எடுத்த புகைப் படங்களைப் பார்த்து விட்டு "உங்கள் புகைப்படங்கள் இந்தியாவை, ஒரு poor country-ன்னு சொல்லற மாதிரி இருக்கு" என்று நிராகரித்து விட்டார்.

இந்த நிகழ்வை மறந்து போன ஒரு நாளில் பாண்டிச்சேரி, சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை மற்றும் மதுரை என்று நானும் நண்பரும் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தோம். வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை கோவில், கோவிலாக சுற்றிக்கொண்டிருந்தோம். பாண்டிச்சேரியைத் தவிர.

இந்த ஊர் சுற்றலின் போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஓன்று நம்முடைய தெய்வ நம்பிக்கைகளைப் பற்றியது. இதனை இங்கே பேச இயலாது. சர்ச்சைக்குரியதாக மாறிவிடும்.

இன்னொன்று, பல்வேறு வகையான நில அமைப்புக்களை சார்ந்து வாழும் மக்க்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லச் செல்ல அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள், வாழும் முறை, பழக்க வழக்கங்கள், வட்டார மொழி என்று மாற்றங்களின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருந்தது.

சென்ற இடங்களில் எல்லாம் மாறாமல் இருந்தது குடிநீர் பிரச்சனைகளும், நீக்கமற நிறைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் தான்.

எங்கு பார்த்தாலும் சுகாதாரமற்ற குடிநீரே கிடைத்தது. இது ஒரு விதமான வாழ்வாதார பிரச்சனை என்றால் இனொரு புறம் பிச்சைக்காரர்கள். கோவில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் அதனை இடங்களிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களும், வயோதிகர்களும், உழைக்க மறந்தவர்களும் பிச்சைக்காரர்களாக சுற்றிதிரிந்தனர்.

வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள கேசட் கடைகளில் பக்தி பாடல்களும், நமீதா க்ளாமர் பாடல்களும் ஒரே கடைகளில் சூடு பறக்க விற்பனையானது. தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டினரை விரட்டி விரட்டி பிச்சை எடுத்தனர். இதற்க்கு ஒரு படி மேலே இருந்தது நாகூர் தர்ஹா. மசூதி முழுக்க மன நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க்கும் ஒரு சமூகத்தில், மூத்திரம் பெய்ய இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

இன்றைய சூழலில் "இந்தியா முழுக்க 4 மில்லியன் மக்கள் ரத்தக் கொதிப்பு நோயாலும், 10 மில்லியன் மக்கள் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

'உலகம் முழுவதிலும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 80% பேர் இந்தியர்கள்' என ஐ.நா அறிக்கை விடுகிறது. தினமும் 4 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. (இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.)

இப்படியாக வயிற்றுப்பாட்டிட்க்கே அலையும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும், குஷ்பூ, நமீதாவின் பெருத்த ......களைக் கொண்டாடி கோவில் எழுப்பியும், எழுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சிந்தனை வறட்சி கொண்டவர்களையும்; வறுமையும், ரோகமும், ஊழலும், பொய்யும், புரட்டும், கொலையும், கற்பழிப்பும் தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. உங்களுக்கு?

11 comments:

Anonymous said...

இந்தியா ஒரு பிச்சைக்கார நாடுதான்
அதில் எதுவித சந்தேகமும் உங்களுக்
குவேண்டாம். மக்களுக்கு எதுவும்
செய்யாத நாடு இந்த உலகில் இருந்தால்
அது இந்தியா என்ற பிச்சைக்கார நாடு
ஒன்று மட்டுமே.
ம.பரணீதரன்

Anonymous said...

I bet Mr. Bharani who made the first comment on this post did so from sitting in a comfortable place in a western country. I also bet he would have got his basic education with no cost to him as provided free to its people by the Govt of India. And he would have thought all his life different ways to evade tax to the Govt.

What a perverted comment!

AboutSriLanka.WordPress.com said...

good article. interesting. please continue to write more like this. Don't be put off by people who attack you for telling the truth about India. You say what needs to be said. If you really love India, then you should be able to discuss these issues, talk about what can be done to improve the situation, etc.

To all those who try to defend India's current pathetic state, just LOOK AT CHINA. Even with a bigger population, they are cleaner and better developed. COMPARE INDIA TO CHINA and India will have to feel ashamed. Tourists from Western countries will go to China instead of India.

The "people of India" need to demand from their politicians actions that would make India a better country.

Saying India provides free education is nonsense when there are MILLIONS of poor children in India who are not able to go to school, doing slave labor.

BONIFACE said...

//.....தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா// சந்தேகமில்லை எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

vasan said...

CHINA IS BETTER THAN INDIA SINCE, THEY HAVE ONE LEADER SELECTED BY THE PARTY. BUT HERE WE HAVE MANY RULERS (CENTRAL & STATE) ELECTED BY THE MASS WHO SELL THEIR VOTES. HENCE OUR POLITICIANS ARE MAKING MONEY FROM ALL SOURCES. IF WE VOTE FOR THE GOOD GOVT, POLITICIAN WILL TRY TO DO GOOD. WE HAVE DEFEATED ALL THE SELFLESS LEADERS & ELECTED THE CHEAT. DO WE DESERVE ANY BETTER STATE?

Nanum enn Kadavulum... said...

India does have the face of poverty. But that is not the only face. We as a non-poor people still live in India and benefit the richenesses she hold. We do have the ability to send satellites to moon and discover water. We do have the ability to make nano-cars. We do have the ability to produce tons of IT techs to work abroad to bring money back to our country. There are different faces the country holds. We don't have to emphasize the poverty only. Even the so called powerful countries has to deal with homeless, poor people with it's one of the faces. So it is not fair to call India as a poor country. "Developing country" may be the right term. And as the photographers, you can bring out the other sides of India as well.
I love my mother India, despite of her abilities and disabilites. We have richness in many aspects. So please don't be rude to give her the name of poverty. I do understand your emotions. Thanks for the expression.

moulefrite said...

Hi, Krsinamurthy,
what you said about India is absalute
truth and don't worry about the anonimous bastard,he is an impotent, Even to give his comment,opinion he is courage enough to give his and to tell real truth you don't have to worry about the comments of these cowards I personelly appreciate your boldness to tell raw truth about the poverty in India

Anonymous said...

யார் பிச்சைக்காரன் ?
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியன்,
அரசு ஊழியனை லஞ்சம் வாங்க
நிர்பந்திக்கும் அரசியல்வாதி,
உலக பணக்காரர்கள் பட்டியலில்
புதிதாய் சேர்ந்த கருநாநிதியின்
சன் டி வி குழுமம்

tamiluthayam said...

விட்டீர்கள்.
உடல் முழுக்க வியாதி. பெயர் மட்டும் ஆரோக்கியசாமியாம். இது தான் நம் தேசம்.

Anonymous said...

லாஞ்சம் என்று ஒலிக்கா படுகிறதோ... அன்று தான் இந்தியா....
ஒரு பணகார நாடாக வரும் .....
-ஆபிரகாம் [நெல்லை]

enpaarvaiyil said...

பிச்சைகார நாடு மட்டுமல்ல ,கடன்கார நாடு ,மக்களுக்கு தெரியாமல் மக்களை கடன்காரர்களாக்கிய கையாலாகாத அரசுகள் ஆளும் நாடு ,உலகத்திலேயே கேடுகெட்ட அரசியல்வாதிகளை நம்பி மோசம் போகும் மக்கள் நிறைந்த நாடு,மோசடிபேர்வழிகள், ஏமாற்றுகாரர்கள், நிறைந்த நாடு,மூட நம்பிக்கைகள் மலிந்த நாடு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். என்ன செய்வது,இந்நிலையை எப்படி மாற்றுவது என்றுதான் புரியவில்லை