அருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.
Sunday, November 15, 2009
தசாவதாரம் கமலும், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும்...
தசாவதாரம் படத்தை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் வரும் flash back காட்சிகள் ஆதாவது 12-ஆம் நூற்றாண்டு காட்சிகள்; வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. பெருமாள் இருந்த இடத்தில் சோழ மன்னன் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிப்பார். பராகிரமசாலியான நம்பி (கமலஹாசன்) தனது புஜ வலிமையால் சோழ மன்னனின் படை வீரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுவார்.
இந்த படத்தை பார்த்ததிலிருந்தே சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.அது கடந்த மாதம் தான் நிறைவேறியது.
முந்தைய நாள் இரவே சிதம்பரத்தில் தங்கிவிட்டு விடியற் காலையில் கோவிலுக்குள் நுழைந்தேன். பொதுவாகவே வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் மனது பின்னோக்கி செல்லவது இயல்பானதாகி விடுகிறது.அதுவும் என்னை மாதிரி கனவுலக வாசிகளுக்கு சொல்லவே வேண்டாம். குலோத்துங்க மன்னனின் யானை நிலம் அதிர நடந்து சென்றதும் , படை வீரர்கள் அணிவகுத்து வந்த குதிரைகளின் குளம்படி ஓசைகளும், தீட்சிதர்கள் முணுமுணுத்த மந்திரங்களும் என் காதுகளில் ரிங்காரமிட்டபடியிருந்தது. "லொள்" ஒரு நாய் குலைத்த போது தான் நிகழ் காலத்திற்க்கு வந்தேன். அப்போதுதான் என்னைக் கடந்து இரண்டு நாய்கள் கடந்து ஓடின.
மற்ற கோவில்களைக் காட்டிலும் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. நடராஜர் சிலைக்கு காலை ஏழு மணியளவில் பூஜை வெகு சிறப்பாக நடந்தது. அக்காலத்திலேயே மக்கள் கலைகளுக்கு உரிய மரியாதையை அளித்து வந்தது அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வின் சான்று என்று தான் சொல்ல வேண்டும்.
அங்குள்ள தீட்சிதருடன் வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தீட்சிதர் பார்பதற்க்கு மிகவும் மெலிந்தவராகவும், கேட்ட கேள்விக்கு மட்டுமே அமைதியாக பதில் சொல்பவராகவுமே இருந்தார்.
அப்போது மீண்டும் தசாவதாரத்தின் காட்சிகள் மீண்டும் ஞாபகத்திற்க்கு வந்தது.
ஆளவந்தானின் இரண்டாம் பாகம் போல் எதிரிகளை துவம்சம் கமலஹாசனின் உடலையும், அங்கிருந்த தீட்சிதர்களையும் ஒப்பிட்டு பார்த்த போது சிரிப்பு தான் வந்தது. 12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று. கடவுளின் பெயரால் விரதங்கள் மேற்கொண்டு, நாமம் பாடும் பக்கதன் 'அர்னால்டின்' தம்பியைப் போலவா இருப்பான். ஆனால் நான் பார்த்த தீட்சிதர்கள், ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டினான் கூட "same to you" என்று சொல்பவராகத்தான் இருந்தார்கள்.
உண்மையிலேயே வரலாறு என்பது "வென்றவர்கள் தங்களுக்கு தாமே வரைந்து கொள்ளும் வரைபடம். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். தோற்பவர்களுக்கு அதில் இடம் கிடையாது. வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம் கொள்ளுமிடம்." என்று மனதிற்க்குள் ஏதேதோ தோன்ற மீண்டும் அந்த நாய்கள் குலைத்துக் கொண்டே என்னைக் கடந்து சென்றன. பொதுவாக வரலாற்றைப் பற்றிய அக்கறை, கவலையெல்லாம் மனிதனுக்குத்தான். நாய்களுக்கு இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
கமல் படத்தைப் போட்டதற்கு பதிலாக சிதம்பரம் கோவில் படம் போட்டிருக்கலாம்
//வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம்.//
இது என்றும் நிலையானதல்ல என்பதை போட்டுடைப்பதற்கு உங்களைப் பலரும் முன்வர வேண்டும்.
"ஆண்டவன்" மீண்டும் நல்ல படி ஆளட்டும்,
அண்ணா.. நம்ம கமல் ஒரு தீர்க தரிசிண்ணா... தசாவதார வி்ஞ்ஞானின்னார்.. அதே போல சிதம்பரம் விஞ்ஞானி நோபல் பரிசு வாங்கிட்டார்.. அமெரிக்க தீவிரவாதின்னார்.. அதே போல எக்லின்னு ஒரு தீவிரவாதி ஒருத்தன் இந்தியா வந்துருக்கானாம்.. அவரு சொல்றது பலிக்குது பாத்தீயளா...
//உண்மையிலேயே வரலாறு என்பது "வென்றவர்கள் தங்களுக்கு தாமே வரைந்து கொள்ளும் வரைபடம். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். தோற்பவர்களுக்கு அதில் இடம் கிடையாது. வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம் கொள்ளுமிடம்." //
உண்மை !
//....//
கோவி கண்ணன் கோட் பண்ணிய வ்ரிகளையை என் அடைப்புக்குறிகளுக்குள் போட்டுக்கொள்க.
இப்போது நீங்கள் பார்க்கும் சிதம்பரம் பூஜாரிகளை, 12ம் நூற்றாண்டைச்சேர்ந்தாக கற்பனைச்செய்யப்பட்ட வைணவ நம்பியோடு ஒப்பிட்டுபார்க்கும் உங்கள் முயற்சி ஒரு நல்ல காமெடி.
இன்னொரு காமெடியும் உண்டு.
வரலாறு பற்றி நீங்கள் எழ்தியதுதான் அது.
இங்கே வென்றவர் யார்? தோற்றவர் யார்?
சைவம் - அஃதாவது, சிதம்பரம் பூசாரிகள் - வென்றது.
வைணவம் தோற்றது. இராமனுஜர் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். பெரிய நம்பியின் கண்களும் கூரேசராழ்வாரின் கண்களும் தோண்டியெடுக்கப்பட்டன.
தோற்றவர் யார்? வைணவர்கள்.
இப்போது சொல்லுங்கள். யார் வரலாற்றை எழுதியது?
//12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று.//
தாங்கள் தசாவதாரம் படத்தை கவனித்து பார்க்கவில்லை என்பது தெரிகிறது, சோழனின் காவலர்களுடன் சண்டை நடக்குமே தவிர தீட்சிதர்களுடன் அல்ல.மேலும் பெருமாள் சிலையை சோழன் நீக்குவானே தவிர அந்த இடத்தில் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிக்க மாட்டன். நேரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கவும்.
\\krubha said...
//12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று.//
தாங்கள் தசாவதாரம் படத்தை கவனித்து பார்க்கவில்லை என்பது தெரிகிறது, சோழனின் காவலர்களுடன் சண்டை நடக்குமே தவிர தீட்சிதர்களுடன் அல்ல.மேலும் பெருமாள் சிலையை சோழன் நீக்குவானே தவிர அந்த இடத்தில் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிக்க மாட்டன். நேரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கவும்....//
அட என்ன கொடுமைங்க.....அப்போ தீட்சிதரா வர்ற கமல் யாருங்க?
இதுல இன்னொரு காமெடி என்னன்னா சோழ போர் வீரர்களுடன் இந்த தீட்சிதர்கள் வீரமா போரிட்ற மாதிரி காமிக்கிறது தான்....
சைவம் வைணவம் சண்டை நடந்ததெல்லாம் உண்மைதான்.....ஆனா அவங்களுக்காக போரிட்டதேல்லாம் அந்தந்த நாட்டைச் சேர்ந்த சத்ரியர்களும் சூத்திரர்களுமே...!
\\அருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு....//
இப்டி ஒரு சொல் வழக்கு தென் தமிழகத்துல ரொம்ப காலத்துக்கு முன்னமே புழக்கத்துல இருக்கு தோழா....
உண்மை ! உண்மை !
Post a Comment