Saturday, November 15, 2008

அந்த அயோக்கியனை தேடிக் கொண்டிருக்கிறேன்!


இந்த உலகத்தில்
யாரைவிடவும்
என்னை அதிகமாய் வெறுப்பவன்
ஒருவன் இருக்கிறான். அவன்,
நான் சிரிக்கும் பொழுது
என்னை உறுத்தும்படியாகப் பார்க்கிறான்
நிலைகுலைந்து கண்கள் கலங்கும் தருணங்களில்
பரிகாசம் செய்கிறான்.

வெயில் எரிக்கும் சமயங்களில்
மூச்சுக் காற்றால்
மேலுமென்னை சுட்டெரிக்கவும்,
இரவுகளில் தனிமைப்படுத்தவும்
அவன் தயங்குவதேயில்லை.

முற்றங்களில் தொலைத்துவிட்டுப் போகவும்
நான் வாழ்நாள் முழுக்க நோகவும்
அவன் தன்னை உரமேற்றிக் கொண்டிருக்கிறான்.

என்னைப் பலகீனப்படுத்தும்
அவனிடம் ஒரே ஒரு உதவிகேட்டேன்.
"நான் மீள முடியாதபடி
தயக்கம் என்னை
இரு கரங்களாலும் பற்றிக் கொண்டுள்ளது.
என்னைத் தயக்கங்களிலிருந்தும், தனிமையிலிருந்தும்
விடுவிக்கும் ஒருத்தி இருக்கிறாள்.
அவளிடம் என் காதலைச் சொல்ல
உதவி செய்" என்றேன்.
மறுத்தான் அவன்.

அவன் கால்களில் விழுந்து அழுதேன்.
எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்தான்.

அந்த அயோக்கியன் எனக்குள் இருக்கிறான்,
நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

3 comments:

Unknown said...

Dear krishna, unnudaiya thrimaimeethu yenekku yellalavum santhegam illai. annal thamil thirai ulagam thiramai mikkavarkalai thamathamagathan thiribi parkkum... yenave sornthuvidamal muyarchi sei.....

கிருஷ்ணமூர்த்தி, said...

thanks ebe.

Unknown said...

அன்புள்ள த.கிருஷ்ணமூர்த்தி,

கவிதை படித்தேன் ஒ.கே.

இங்கு சொல்ல வந்தது 'என்னத்த' கன்னையாவைப்பற்றி அவருக்கு "என்னத்த' கன்னையா என்ற பெயர் 1960 வந்த "நான்" என்ற படத்தின் மூலம் வந்தது .அதில்தான்
"என்னத்த...சொல்லி i.., என்னத்த...பண்றது" வசனம்
வரும்.


என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.

ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
எல்லாம் உண்டு.

"மீண்டும் ஒரு காதல் கதை" சினிமா தலைப்பில் இன்று ஒரு கதை.

சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.

அன்புடன்
கே .ரவிஷங்கர்