விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பொழுது, அரசியல்வாதிகள் பலராலும் கோமாளியாக சித்தரிக்கப்பட்டார். ஆனால் எந்த குரலுக்கும் நடுங்கி விடாத விஜயகாந்த் தொடர்ந்து தன்னுடைய குரலையும் உயர்த்திப் பேசினார்.
அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதி, விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தார். விஜயகந்திட்கு பதில் தந்து அவரை பெரிய ஆளாக மாற்ற வேண்டாம் என்பதே கருணாநிதியின் நோக்கமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் ஜெயலலிதா, விஜயகாந்தைப் பார்த்து 'குடிகாரன்' என்று சொல்ல, பதிலுக்கு விஜயகாந்தும் 'ஆமாம், நீங்க தான் ஊதிக் கொடுத்திங்க' என்று சொல்ல, அரசியல் நாடகத்தின் 'பன்ச்' பறக்க ஆரம்பித்தது. காலை, மாலை, வார, மாத இதழ்கள் எல்லாம் இந்த டீக்கடை சண்டையை புலனாய்வு செய்தன.
அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க கணிசமான வாக்குகளைப் பெற, அரசியல் வாதிகள் பலரும் ஆடித்தான் போனார்கள். அதைத் தொடந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க 27% வாக்குகள் பெற, விஜயகாந்தின் கோமாளி பிம்பம் களைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் தயாநிதி மாறனுடனான மனமுறிவிட்கு பிறகு சன் குழுமத்திலிருந்து இருந்து வெளியேறியது தி.மு.க. நுழைந்தது தே.மு.தி.க.
நேற்று:
18.10.08 சனிக்கிழமை தீவுத் திடலில் நடைபெற்ற தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டில் பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். விஜயகாந்தும் கார சாரமாக வார்த்தைகளை அள்ளி வீசினார். குறிப்பாக குடும அரசியலைப் பற்றி பேசினார். (மனைவியையும், மைத்துனரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு முதலில் காமெடியாக, நேரம் ஆக ஆக இன்னும் காமெடியாக). சன் குழுமம் அதனை வரிந்து கட்டிக் கொண்டு ஒளிபரப்பியது.
இன்று:
பிரியாணி பொட்டலங்கள் கொடுக்காமலேயே பதினைந்து லட்சம் பேர் திரண்டதால் பொறுக்காத தி.மு.க ஆதரவு மாலை நாளிதழான எதிரொலி, 19.10.08 அன்று வெளியிட்ட செய்தியின் விபரம்:
"கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி கோட்டைக்கு வந்து விட முடியாது. அரசியல் பயணம் இதுவல்ல. சில ஜென்மங்களுக்கு சொன்னால் தெரியாது. பட்டால் தான் புரியும். விஜயகந்திட்கு போகப் போகத்தான் புரியும். இன்னும் அரசியல் சோதனைகள் அவருக்கு ஆரம்பிக்கவே இல்லை. எல்லாம் இனிமேல் தான் இருக்கிறது."
இதில் திருக்குறள் வேறு;
"உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல
கற்றும் கல்லார் அறிவிலாதார்"
(நல்லவேளை திருவள்ளுவர் உயிரோடு இல்லை)
இந்த வார்த்தைகளின் நோக்கம் விஜயகந்திட்க்கு அறிவுரை தருவதல்ல; எச்சரிக்கையை முன் வைக்கிறது. எதிரொலி நாளிதழ் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்க வேண்டாம்.
நாளை:
இதையெல்லாம் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ரசிப்பார்களா?
பின்குறிப்பு:
கட்சிகளும், தலைவர்களும் தீவிர கதியில் கேவலங்களாக மாறிக்கொண்டிருக்க, நாடு நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கருப்பு, வெள்ளைத் திரைப்படத்தில் (பெயர் தெரியவில்லை) நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்கள் "இந்த நாடும் நாடு மக்களும் ஒரு நாள் நாசமாய்ப் போகும்" என்று நக்கலாகச் சொல்வார். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் பி.எஸ்.வீரப்பாவின் வார்த்தைகள் நிஜமாகக் கூடும்.
5 comments:
murasoli ellaam orru paper...addhai poi paddichuttu..viddungga ppa
avar sonnathu ethirolinga
கிருஷ்ணமூர்த்தி!
இந்த விபரீதங்களோடுதான் நாமும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து, பெரிதாய் சித்தரிக்கப்பட்டவுடன் கோவை மாவட்டத்து ரஜினி ரசிகர்கள் பொங்கி எழுந்து, அவர்களாகவே ரஜினி பேரில் கட்சி ஆரம்பித்ததாய் அறிவித்தார்கள். அப்போது அந்த ரசிகர்களில் ஒருவன் சொன்னார் "நான் 23 வயதில் ரஜின் ரசிகரானேன். இப்போது 45. எத்தனை நாள்தான் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பது"தந்த நபர் மீது போபமும், பச்சாதபமும் சேர்த்து வருகின்றன. முதலில் ரசிகத்தன்மையும், பிறகு அந்த நடிகரே எல்லாமும் என ஏற்படுத்தப்படும் பிம்பங்களுக்கு மிக முக்கிய காரணம் ஊடகங்கள்தான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒருவரை அவர்கள் திட்டமிடு உருவாக்குகிறார்கள். ரஜினிக்குப் பிறகு ஒருவரை இப்போதே திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்." கஞ்சி குடிப்பதிற்கிலார், அதன் காரணமும் அறிகிலார'ய் இருக்கும் நம் மக்கள் ஆவேசமாய் கூட்டத்தில் நின்று கைதட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
//ஒரு கருப்பு, வெள்ளைத் திரைப்படத்தில் (பெயர் தெரியவில்லை) நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் "இந்த நாடும் நாடு மக்களும் ஒரு நாள் நாசமாய்ப் போகும்" என்று நக்கலாகச் சொல்வார். //
இதை எம்.ஆர்.ராதா சொல்லவில்லை, பி.எஸ்.வீரப்பா சொன்னது. படம் பெயர் சரியாக நியாபகம் இல்லை, நாடோடி மன்னன் என்று நினைக்குறேன்
கோவை விமல்(vimal)....
தங்களின் திருத்ததிட்க்கு நன்றி!
Post a Comment