Thursday, October 9, 2008

தேவதைகள் உலாவும் வீதி

புளிய மரத்தின் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி அலறும் பேய்களும், என் மாரில் கால் வைத்து கூட்டம் கூட்டமாக ஓடும் டைனோசர்களுமாக என் கனவில் வந்து கொண்டிருந்த காலத்தில், என் கனவுலக நாடகத்திட்க்கு தேவதைகளை அனுப்பி வைத்தவள், அவள். (இங்கே 'அவள்' என்ற வார்த்தை இப்போதைக்கு போதுமானது)

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு மழை நாளில் அவள் என் முன் தோன்றினாள். அப்போது அவள் என்னிடம் ஏதேதோ சொன்னாள்.அவள் உதடு குவியும் புள்ளியில் லயித்துக் கிடந்ததால் எதுவும் புரியவில்லை எனக்கு. அன்றிலிருந்து ஒவொரு நாளும் என் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். (அவர்கள் பாரதிராஜா படங்களில் வரும் தேவதைகளைப் போல அவலட்சணமாக இல்லாமல், அழகாகவே இருக்கிறார்கள்)

எப்போதும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்த தேவதைகள் இரவில் தூக்கத்தையும், பகலில் நிஜங்களையும் தின்று கனவுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவளின் சார்பாக சில பரிசுகளையும் வழங்கினார்கள். அந்த பரிசுகள் யாவும் பரிசளித்தவளையே நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
தேவதை தந்த பரிசுகள் :
. தூக்கம் மறந்த விழிகள்
. நிலை கொள்ளாத மனது
. பசிகளை அறியாத வயிறு

. வருடிய படியே யோசிக்கத் தாடி
. சிதறிய நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் பொறுமை

. இரவின் நீளத்தை அளந்து பார்க்கும் திறமை
. அம்மாவிடம் பரிந்து பேச ஒரு வார்த்தை
. எப்போதும் பூக்கும் ஒரு புன்னகை
. உலகை வெல்லும் நம்பிக்கை
. அவள் வந்து போன மழை நாளின் ஈரம்
. இளைப்பாற விருட்சம்; அதற்க்கான விதைகள்
. கனவுகளைக் கட்டிப்போ சில கவிதைகள்...















அவள் வந்து போன
ஒரு மழை நாளில்
புட்கள் பணிந்தன
இலைகள் சிலிர்த்தன
மண் கரைந்தது
கூடவே நானும்...
. . . . . . . . . .

எனக்கென்று இருந்த
ஒரு சிலவும்
இல்லாமல் போனது
நீ போனதும்...
. . . . . . . . . .

இருப்பதற்க்கும்,
இறப்பதற்கும்

அர்த்தம் வேண்டும்
நீ வேண்டும்!
. . . . . . . . . .

எப்போதும் போல்
இருந்தேன்

நான்
நீ வந்தாய்

நான்
இல்லாமல் போனேன்.
. . . . . . . . . . .


மனிதனுக்கும், விலங்கிட்க்குமான

இடைவெளியை

அதிகப்படுத்திக் கொண்டிருந்தாள்
அவள்
அனுபவித்துக் கொண்டிருந்தது
காதல் .
. . . . . . . . . . .


முத்தங்கள் கொடு

எனக்கு உணர்வுகள் போதும்
உதடுகளை நீயே வைத்துக்கொள்.
. . . . . . . . . . .


தூக்கம் வேண்டாம்

நிஜங்களைத் தின்று
கனவுகளை வளர்க்கிறது
அது.

. . . . . . . . . . .


பிரிவு...

நீ வந்தால் மரிக்கும்.

. . . . . . . . . . .

(நீங்கள் இதை கவிதை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதையென்று சொல்லிக் கொள்வதால் நான் சந்தோசப்படுகிறேன். அதனால் கவிதையென்றும் சொல்லிக் கொள்கிறேன்.)

கனவுகளையும், தேவதைகளையும் விலக்கி வைத்து விட்டு, தேவதைகளின் தேவதைகளை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த ஒரு பொழுதில், அவள் அன்று சொல்லி புரியாமல் போன வார்த்தைகளுக்கு தேவதைகள் கூறிய விளக்கம்...

"உன் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பியுள்ளேன். கனவுகளை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிஜங்களை மட்டும் நீயே பார்த்துக்கொள். நீ என்னை பரிசாகக் கேட்காதே. என்னை ஒரு போதும் உனக்கு பரிசளிக்க முடியாது. என்னைப் பற்றி எழுதிச் சாக, உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கூழ் முட்டைகளை அடைகாப்பதால் எந்த பயனும் இல்லை. நினைவில் கொள். என்னை மற!"


நிலை கொள்ளாமல் ஒரு மவுனம் நீள்கிறது...



11 comments:

Apple Juice said...

en valkaiyil en manathai irandavathaga thotathu en kadhaliku piragu intha kavithaigal than.......

balaa said...

athu yeppadi kirshna..naan manathil ninaipathi neengalum ninaikirigal.. oh.. kaathal yellorukkum pothuvathu thane.. arumayana kavithaigal and pathivugal .. vazthukkal..--balaa(milki)

Travis Bickle said...

yaarkita AD ya work panringa

நிவேதிதா தேவி said...

Kavithai nalla irukku Krishnan :)

Jayanthan said...
This comment has been removed by the author.
Jayanthan said...

Ilangaiyai patri solvadhellam irukattum yedru nee ennidam sonna ilangay kadhaiyai padamaaka pogirai?..............

கிருஷ்ணமூர்த்தி, said...

to jay,
who is this?

நந்தா said...

படித்த உடனே வாவ் என்று சொல்ல வைக்கின்ற பதிவு இது. ஒரு வேளை காதல், தேவதைகள், அழகியல் என்ற கிளர்ச்சிக் காரணிகள் மேலதிக காரணங்களாய் இருக்கலாம்.

பதிவில் இருக்கும் Self narration அடுத்தவரின் டைரியில் எழுதப்பட்டிருக்கும் குட்டிக் குட்டிக் கவிதைகளை படித்துப் பார்ப்பது போன்றதோர் உணர்வினை ஏற்படுத்துகிறது.

கலக்கல். தொடரட்டும்.

வோர்ட் வெரிஃபிகேஷனை தூக்குங்க சாமி.

http://blog.nandhaonline.com

கிருஷ்ணமூர்த்தி, said...

நந்தவிட்க்கு...

வோர்ட் வெரிஃபிகேஷனை தூக்குங்க சாமி.

enna solla varinganu puriyalanga.

நந்தா said...

உங்களுக்கு பின்னூட்டம் போடும் போது வோர்ட் வெரிஃபிகேஷன் கேக்கும் பாருங்க. அதை தூக்குங்கன்னு சொன்னேன் சாரே.

Blogger settings ல இருக்கும் பாருங்க. :)

http://blog.nandhaonline.com

அன்புடன் அருணா said...

எதைச் சொல்ல எதை விட?
அத்தனையும் அருமையான வரிகள்...கலக்கல்.
அன்புடன் அருணா