Monday, June 29, 2009

சாருநிவேதிதாவும், தெருச் சண்டையும்!

நான் கடந்த ஐந்து வருடங்களாக சாருவின் எழுத்துக்களை தொடந்து படித்து வருகிறேன். 'உயிர்மை' இலக்கிய இதழின் வாயிலாகத்தான் முதலில் நான் சாருவை அறிந்தேன். முதன் முறையாக அவரது கட்டுரைகளை படித்த பொழுது எல்லையற்ற பரவசம் அடைந்தேன். அரேபிய இலக்கியங்களை தொடந்து அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிறந்த முயற்சியாகும்.

ஆனால், சமீப காலமாக உயிர்மையின் பக்கங்களை a.r.ரகுமானுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதுவதிலும், இளையராஜாவை திட்டித் தீர்ப்பதிலுமே ஓட்டிக்கொண்டிருக்கிறார். சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக அவருடைய உளறல்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அவரது உளறல்களுக்கு உதாரணமாக, 'நான் கடவுள்' திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரையில் "எனக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவும், ஜெயமோகனும் இந்த படத்தில் வேலை பார்த்தாலே, நான் அந்த திரைப் படத்தைப் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு கட்டுரையைப் ஆரம்பிக்கிறார். 'விமர்சனம்' என்பது நடுநிலையான கருத்துக்களை வாசகர்கள் முன்னிலையில் வைப்பதாகும். இந்த சின்ன நடைமுறை கூட தெரியாதவரா சாருநிவேதிதா?.. அடுத்ததாக 'பசங்க' திரைப்பட விமர்சனம்; உலக அபத்தம்! நம்ம ஊரில் சிறந்த படமாக 'பசங்க' படம் அமைந்தால் பாராட்ட வேண்டியதுதான். அதற்க்காக "childran of heaven" எனும் உலகின் ஒப்பற்ற திரைப்படத்தைவிட 'பசங்க' படம் பல மடங்கு உயர்ந்தது' எனும் கோமாளித்தனமான (கேவலமான) கட்டுரையைக் குறிப்பிடலாம்.

தன்னுடைய சரக்கு(அறிவு) காலியாகிவிட்டதை வாசகன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதை மிகுந்த கவனத்தில் கொண்டு, உளறல்களையும், அபத்தங்களையும் கிடைத்த பத்திரிக்கைகளில் எல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சாரு தன் அபத்தங்களை குமுதத்தில் 'கோணல் பக்கங்கள்' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியில் நின்று போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன் விளைவாக, மற்ற எழுத்தாளர்களை திட்டி எழுதி பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்ற நினைப்பும் இப்போது தலை தூக்கி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" குறுநாவலை 'வெறும் காட்சிகள் மட்டுமே உள்ளது. நாவலை காணவில்லை' என்றும்; "நெடுங்குருதி" நாவலை 'தலையணை அளவிற்க்கு உள்ளதே தவிர வேறொன்றும் இல்லை' எனக் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு ராமகிருஷ்ணனின் நாவல்களையும், சாருவின் 'ஜீரோ டிகிரி மற்றும் ராசலீலா' நாவல்களையும் படித்துப் பாருங்கள். சாரு, ராமகிருஷ்ணனின் நாவல்களை விமர்சிக்கும் தகுதி அற்றவர் என்பது புரியும்.

மேலும், ஜெயமோகனை தனது தளத்தில் மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்டு, ஒரு தெருச் சண்டைக்கு தயாராகி வருகிறார் சாரு.
http://www.charuonline.com/June2009/jeya.html
உலக இலக்கியங்களை உயர்வாகக் குறிப்பிடும் நீங்கள் இப்படி தெருச் சண்டைக்கு முனைப்பாக இருந்தால் எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும். உங்களின் தெருச் சண்டையைக் கைவிடுங்கள். சாளரங்களில் இரைச்சல்களை எழுப்பாதீர்கள்!

4 comments:

Sure said...

I accept your points. The way in which Chru's writting going on is highly condemnable.Lots of ' JALRAS" are also there in blogger world with a wrong assumption that mentioning or follwing chru's Name in their writting would fetch a status for them.

Karthikeyan G said...

//நீங்கள் இப்படி தெருச் சண்டைக்கு முனைப்பாக இருந்தால் எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும்.//

யாத்ரீகன் சார், நீங்களும் ஒரு நல்ல இலக்கிய படைப்பை அறிமுகம் செய்வதை விட்டுட்டு இப்படி தெரு சண்டையில் கவனத்தை திருப்பி அதற்க்கு விளம்பரம் கொடுத்தா எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும்.

Anonymous said...

?

Anonymous said...

கலைஞசனுக்கு கர்வம் என்றும் கூடாது...