Sunday, June 7, 2009

தமிழகத்தில் திறந்தவெளி விபச்சாரம்!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அலுவல் காரணமாக நள்ளிரவு 1:30 மணியளவில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு, நண்பனுடன் காரில் பயணித்தேன். பயண அழுப்பு தெரியாமல் இருக்க இருவரும் பேசிக் கொண்டே சென்றுகொண்டிருந்தோம்.

பின்னிரவு வேளையில் எங்களது வாகனம் திண்டிவனத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ஊரைத் தாண்டிய ஒரு வெளியில் டார்ச் லைட் வெளிச்சம் எங்கள் வாகனத்தின் மீது விழுந்தது. நாங்கள் வந்து கொண்டிருந்தவேகத்தில் வெளிச்சம் வந்த இடத்தைக் கடந்து சென்றோம். மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே போல எங்கள் வாகனத்தை நோக்கி டார்ச் லைட்டின் வெளிச்சம் வரவே, நண்பன் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து வெளிச்சம் வரும் திசையை நெருங்கினான். அப்போது அங்கே 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எங்களை நெருங்கி வந்து என்னையும் என் நண்பனையும் நோட்டமிட்டாள். அப்போது அவள் எங்களை நோக்கி "வரிங்களா?" என்றாள். ஆம்; அவள் ஒரு விபச்சாரி! ஒருநிமிடம் அதிர்ச்சி தாளாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, 'வேண்டாம்' என தலையசைத்தவாறே வாகனத்தை அங்கிருந்து நகர்த்தினான் நண்பன்.

தொடர்ந்து நாங்கள் செல்லச் செல்ல உளுந்தூர்பேட்டை எல்லை முடிவு வரையிலும் டார்ச் லைட்டின் வெளிச்சம் எங்களையும், எங்களோடு பயணிக்கும் கார், மற்றும் லாரிகளை நோக்கியும் அந்த ஒளி நீண்டு கொண்டே வந்தது. அன்றைய பயணத்தில் நாங்கள் கண்ட பெண்கள் 13 வயதிலிருந்து 45 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள்.

என்னுடைய நண்பன் ஒரு டிரைவர் என்பதாலும், இது போல பல வெளிச்சங்களை கடந்து சென்றவன் என்பதாலும், இந்த நிகழ்வை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எங்கள் பயணம் முடியும் வரையிலும் இது போல பல கதைகளை சொல்லிக் கொண்டேவந்தான். அன்றைய இரவு, என்னுள் மிகுந்த பிசுபிசுப்புடனும், ஆழ்ந்த துயரத்தோடும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நண்பன் சொன்ன பல சம்பவங்களில் வரும் வேசைகள் 50க்கும், 100க்கும் படுக்கையை பகிர்ந்து கொள்பவர்களாகவும், கணவர்களால் கைவிடப்பட்டவர்களும், சிறுமிகளும், விதவைகளும், குறைந்த பட்ச கூலி வேலை கூட கிடைக்காதவர்களும் தான். இதில் பாலியல் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

இந்த நிகழ்வுகள் வெறும் சம்பவங்கள் மட்டுமல்ல... மிகப் பெரிய அரசியல்! கடந்த ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் இருந்தும் அந்த பகுதியில் எந்த ஒரு தொழில் சாலைகளும் துவக்கப்படவில்லை. எல்லா தொழில் வளங்களும் சென்னையில் தான் குவிக்கப்படுக்கிறது. சென்னையைத் தவிர்த்த மற்ற தமிழகத்தின் பல பகுதிகளும் வெகுவாக புறக்கணிக்கப்படுகின்றன. இம்முறையும் தமிழகத்திலிருந்து 9 மத்திய அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடத்த முறையைப் போல இம்முறையும் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் பட்டால் கூடிய விரைவில் தமிழகம் ஒரு திறந்தவெளி விபச்சார விடுதியாக மாறிவிடும். எல்லா தொழில் வளங்களும் சென்னையிலேயே அமையும் பட்சத்தில், ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சென்னைக்கு படையெடுக்க வேண்டி வரும். அப்புறம் எழுத்தாளர் கோணங்கி சொன்னதைப் போல " ஒருநாள் வெளி ஊரிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்கள் பெய்யும் மூத்திரத்தில் சென்னை முழ்கிப் போகப்போகிறது".

11 comments:

ttpian said...

விபச்சாரமா?
நமது முதல் அமைசர்கல் கருனையும்,தோட்டமும் எங்கிருந்து வந்தார்கள்?

ரங்குடு said...

கலஞரும், செல்வியும் எங்கிருந்துவந்தனர்? அதே தொழிலைக் கவுரவமாக 'சினிமா' என்று செய்யும் இடத்திலிருந்து தானே?


அவர்கள் ஆளும் நாட்டில் வேறு என்ன தொழில் செழித்து வளரும்?

Anonymous said...

உளுந்தூர்பேட்டையில் விபச்சாரம் நடக்குது என்பது ஊருக்கே தெரியும். பச்சப்புள்ளயா இருக்கீங்களே சாமி

இராகவன் நைஜிரியா said...

நீங்கச் சொல்வது 100 க்கு 100 சரி. தொழிற்ச்சாலைகள் தொடங்கப் படுவது பரவலாக்கப் படவில்லை.

சென்னையை தாண்டி இன்னும் தொழிற் தொடங்குவதற்கான சாத்தியங்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.

Suresh Kumar said...

இதெல்லாம் இப்பவா நடக்குது

Anonymous said...

இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?திராவிட தமிழ் கலாசாரம் அப்படி.திராவிட தமிழர்களின் ஐகன்கள்(icons) என்று போற்றப்படுகின்ற பெரிய தாடிக்கார அய்யா,அண்ணாதுரை அய்யா,மற்றூம் தமிழினக் காவலன் மஞ்ச துண்டு அய்யா ஆகியவர்களே கஸ்டமர்களாக இருந்து இந்த தொழிலை ஊக்குவித்த உத்தமர்கள் தான்.இந்த மூஞ்சிகளை போற்றும் கும்பலின் கலாசாரம் வேறு எப்படி இருக்க முடியும்?

சரவணகுமரன் said...

ம்ம்ம்... என்னத்த சொல்ல?

Anonymous said...

//இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?திராவிட தமிழ் கலாசாரம் அப்படி.திராவிட தமிழர்களின் ஐகன்கள்(icons) என்று போற்றப்படுகின்ற பெரிய தாடிக்கார அய்யா,அண்ணாதுரை அய்யா,மற்றூம் தமிழினக் காவலன் மஞ்ச துண்டு அய்யா ஆகியவர்களே கஸ்டமர்களாக இருந்து இந்த தொழிலை ஊக்குவித்த உத்தமர்கள் தான்.இந்த மூஞ்சிகளை போற்றும் கும்பலின் கலாசாரம் வேறு எப்படி இருக்க முடியும்?//

ஆரிய நாய்கள் அறைகளில் ஆயிரத்திற்கு பன்னுவதை பாவம் திராவிட அனாதைகள் தெருவில் நின்று செய்கிறார்கள்.

Anonymous said...

//ஆரிய நாய்கள் அறைகளில் ஆயிரத்திற்கு பன்னுவதை பாவம் திராவிட அனாதைகள் தெருவில் நின்று செய்கிறார்கள்.//

அப்பாடி, இதுலயாவது ஆரியனும் திராவிடனும் ஒத்து போகறீங்களே!!!

ரங்குடு said...

இதிலும் இட ஒதுக்கீடு அமலுக்குக் கொண்டு வந்தால் பெரியாரின் ஆத்மா சாந்தி பெறும்.

Joe said...

நல்ல பதிவு.

எழுத்துப் பிழைகள் அதிகம், சரி செய்யவும்.