Saturday, April 11, 2009

கார்த்திக் அனிதா - கொலை வெறித் தாக்குதல்!

நேற்று கார்த்திக் அனிதா திரைப்படத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். சரி, புது டைரக்டர் ஏதாவது பாக்கற மாதிரியாவது படம் இருக்கும்னு நினச்சு போன எனக்கு.... வேறு மாதிரியான அனுபவம் காத்திருந்து.

வேலைக்கே ஆகாத படமென்று முதல் பத்து நிமிடத்திலேயே தெரிந்து விட்டது. சீரியல் டைப் மேக்கிங். அதிலும் ஹீரோ, ஹீரோயின் பழி வாங்கும் படலம். உண்மையாவே முடியல டைரக்டர் சார்...

சில படங்கள் எல்லாம் உட்கார முடியாத அளவிற்க்கு சோதித்தால் யோசிக்காம வெளிய எழுந்து வந்து விடுவேன். அப்படி எழுந்து வந்த கடைசிப் படம் படிக்காதவன். அந்த படத்தைப் பத்தி இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறறேன். எல்லாம் என்னோட நல்லதுக்குத் தான். ஏன்னா ரத்தக் கொதிப்பு வந்திரக் கூடாதில்ல...

ஆனா கார்த்திக் அனிதா படம் எரிச்சல் வரமாதிரியெல்லாம் இல்லை. இது வேற டைப். அதாவது அவங்க சீரியசா நடிப்பாங்க ஆனா நம்ம சிருச்சுக்கிட்டே இருப்போம். ரெம்ம்ப பொறுமையா உட்கார்ந்து இடைவேளை பார்த்து விட்டேன். அதற்க்கு அப்புறம் பார்த்தால் பாதி திரைஅரங்கு காலியாகி விட்டது.

நான் பார்த்த படத்திலேயே இந்த படத்தின் தீம் பாடலுக்கு தான் ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு கொடுமை என்னன்னா ஸ்ரீவித்யா போட்டோவ இந்த படத்தில், இறந்து போன ஹீரோவின் அம்மாவா காட்டிஇருக்கிறார்கள். ('செத்தும் விட மாட்டிங்களான்னு' ஆங்காகே ஆடியன்ஸ் குரல்கள்) படத்தின் ஒரே ஆறுதல் மனோகரின் காமெடி மற்றும் சிங்கமுத்துவின் காமெடி. லொள்ளுசபா மனோகர் உண்மையிலேயே பின்னிட்டார்.

அப்புறம் கதைஎன்னன்னா.... கதை என்னன்னா... சத்தியமா தெரியல சார். 'neighbourhood love' ன்னு போஸ்டர்ல போட்ட்ருந்தாங்க, அதே மாதிரி கதை என்னன்னு போட்டாங்கன்னா ரெம்ப சவ்ரியமா இருக்கும். ஹீரோயின் மேக் அப். பார்க்க முடியலங்க... ஹீரோயினுக்கு ஜோதிகானு நெனப்பு. ஹீரோவின் நிலைமை பரிதாபம். கூட்டத்தில் தொலைந்த குழந்தை மாதிரி வந்து போகிறார்.

ரயில்வே ஸ்டேஷன் ஐ பார்த்திருப்பீர்களே அதைப் போல ஆடியன்ஸ் திரைஅரங்கினுள் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ரத்தினச் சுருக்காமாக சொல்ல வேண்டுமானால் கார்த்திக் அனிதா படம் ஒரு நவீன கொலைவெறித் தாக்குதல் என்றே சொல்வேன்.

4 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"அதாவது அவங்க சீரியசா நடிப்பாங்க ஆனா நம்ம சிருச்சுக்கிட்டே இருப்போம்..." நீங்கள் சொல்லியதால் தப்பிவிட்டேன். எனக்கு பொறுமை கிடையாது.

Senthil said...

cool

வழிப்போக்கன் said...

பயப்படாதீங்க பாஸ்...

நானெல்லாம் இந்த மாதிரி தலைப்பு வச்ச படங்களுக்கு போறதில்ல...
ஏன்னா எனக்கு முதவே தெரியும்..
இந்த மாதிரி பேர் வச்ச படமெல்லாம் சிரிப்பு படமுன்னு...
:)))