மகன் விஜய்கந்துக்கே வெளிநாட்டில் ஆர்டர் செய்து வாங்கிய விக்கென்றால், அப்பா விஜயகாந்த் என்றால் சும்மாவா? ஒரு கனமான மீசை ("கிடாய் மீசை" என்று எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க) அதில் பொங்கலுக்கு அடிக்கும் சுண்ணாம்பு கொஞ்சம் அடித்திருந்தார்கள். ஆதாவது வயதான தோற்றத்தில் நடிக்கிறாராம்???? விஜயகாந்த்...

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்(remix) வருகிறது. காண கண் கோடி வேண்டுமென்பார்களே, அதைப் போல எல்லாம் இல்லை. அந்த பாடலைப் பார்ப்பதற்கு பதிலாக நான் கடவுள் அம்சவல்லி போல கண் பார்வை இல்லாமல் போனாலும் சந்தோசமே...
பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூணைச் சுற்றிவந்து ஆடுவாரே, அதைப் போல மீரா ஜாஸ்மீன் விஜயகாந்தை சுற்றி வந்து ஆடுகிறார். விரைவில்....(அவஸ்தைகள்) என்று திகில் படம் பார்த்த உணர்வோடு அந்த ட்ரைலர் முடிகிறது... விடாது கருப்பு!!.........
4 comments:
பார்த்து பயந்தவர்களில் நானும் ஒருவன் ரொம்ப மிரண்டு போயிட்டேன்.
miga sariyaga soneergal!!
:)
தவசி ல வாங்கி அடி ரமணா வில் சரி ஆச்சு...
தர்மபுரியில் வாங்கிய அடி மரண அடி!
அதையும் தாண்டி ஒரு அடி விழுந்துடுமா என்ன?
யாத்ரீகன் அவர்களே,
நானும் பார்த்துத் தொலைத்தேன் இந்த அபத்தக் களஞ்சியத்தை!
டபுள் ரோல் விஜயகாந்த், பழசாய்ப் போனா மீனா , இன்னும் அரதப் பழசான 'அந்த ஏழு நாட்கள்', 'சகலகலாவல்லவன்' காலத்து அம்பிகா என்று ஏதோ 1998-99 இல் ரிலீஸான விக்ரமன் படம் பார்ப்பது போல் இருக்கிறது! தப்பித் தவறி actual படம் நன்றாக இருக்குமா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
'மரியாதை', ரசிகனின் சுயமரியாதைக்கு அவமரியாதை!
நன்றி!
சினிமா விரும்பி
Post a Comment