Wednesday, August 27, 2008

எரியும் காடு


மழை காளானைப் போலவும் வளர்கிறது
மலை மூங்கிலை போலவும் வளர்கிறது
காமம்

மண் தின்னும் உடம்புக்குள்
எத்தனை அறுபடும் உணர்ச்சிகள்

பிடுங்கி எறியமுடிவதுமில்லை
தூக்கி அலைய முடிவதுமில்லை.

. . . . . . . . . .
. . . . . . . . . .

தனிமையின் பாடல்


வியர்வை இறங்கி
கண்ணில் பிசுபிசுக்கும்
பகல் வேளை

உறக்கம் அமர மறுத்த
இரவுகளில்
தனித்து அலையும்
கால்கள்

இப்படி இரவும் பகலும்
வண்ணங்களின் பேதமாய் மட்டும்
கடந்து விடுகிறது
காரணமற்ற துயரங்களை சுமந்து கொண்டு

கொட்டித் தீர்க்க
எவ்வளவு இருந்தும்
பகிர்ந்து கொள்ளப்படாத தனிமை

கால நேரமற்று
மூர்கமேறித் திரியும் காமம்

இடம் பொருள் ஏவலற்று
வெடிக்கும் கோபம்

கண்ணில் தேங்கி நிற்கும்
குழப்பங்கள்
ஒரு முறை கத்தி அழுதால்
கரையக்கூடும்

நோய்மை வாட்டத் துவங்கியதிலிருந்து
மவ்னம் கொள்ளத் துவங்கி விட்டாள்
அம்மா

என்னைப் போலவே அப்பாவும்
காரண மாற்ற துயரங்களை
கண்ணில் சுமந்து திரிகிறார்

நீயும் கூட என்னை அழவைத்து
வேடிக்கை பார்ப்பதயே விரும்புகிறாய்...

நீண்ட மவுனத்தில்
புதைந்து கொள்ள விரும்புகிறேன்
மரணம் என்னை எழுப்பும் வரையில்...


. . . . . . . . . . . . . . . . . . . .

ஊர் சுற்றும் புராணம்


வானவியல் ஆராய்ச்சி பற்றி தெரியாது
ஆனாலும்
நட்சத்திரகள் ரசிப்பேன்

சில வேளைகளில்
அதுவா?இதுவா?
குழப்பிக் கொள்வதுண்டு

அப்படி இருக்குமோ?
இப்படி இருக்குமோ? என எதிர்பார்த்து
எப்படியும் இல்லாமல் போவதுவும் உண்டு

நரகத்தை விட்டுத் தள்ளுங்கள்
நான் சொர்கத்தை அனுபவித்ததுண்டு
மலை பயணங்களில்
ஜன்னல் இருக்கைகளில்..!


2 comments:

mahesh said...

mapla romba feel panni eludhi iruka pola....

Shyam said...

hi u r a very gr8 person because human being life is very awesome but sometimes its simple......so everyone its intresting u said..keep it up congratulation