அந்தரங்கமற்ற நெருக்கடியில், அதேவேளையில்
கூட்டத்திலிருந்து விடுபட விரும்பும் 12 பேர் நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் மேலும்
ஒருவனாக நான் பிறந்தேன். ஏற்கனவே இருந்த 12 பேரின் நெருக்கடியும், தூங்கும்போது கூட
கேட்டுக்கொண்டிருக்கும் இடைவிடாத சப்தங்களும், வெறுப்பும், நிராகரிப்பும், சிறிய தவறுகளுக்கு
கூட எல்லோரையும் எதிர்கொள்ளும் ஆளாக நான் இருந்தேன்.
என் குடும்பத்தில் உள்ள பலரும்
என் மீது அதீத ஒழுக்கத்தை திணித்துக் கொண்டிருந்த போது, சச்சின் என்ற மந்திரச் சொல்லைக்
பின்தொடர்ந்தபோது, சச்சினின் இயல்பான அமைதி மற்றும் இதனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில்
அவர் கடைபிடித்த தீவிர ஒழுக்கத்தால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டேன்.
இந்தியாவில் உள்ள பலரைப் போலவே
நானும், சச்சின் என்கிற பிம்பத்தோடு தொடர்ந்து நானும் என் கனவுகளை வளர்த்துக் கொண்டிருந்தேன். கடும் உழைப்பையும், அர்பணிப்பு
உணர்வையும், ஒவ்வொரு போட்டியில் களம் இறங்கும் போதும் தன் முதல் போட்டியைப் போலவே அணுகிய
அவரது ஆர்வமும், எனக்கு ஒரு தந்தையைப் போல வழிகாட்டுதலும், நண்பனைப் போன்ற இணக்கமும்,
காதலியைப் போல அந்தரங்கமும் உருவாகக் காரணமாக இருந்தன
என்னுடைய 19வது வயதில் நான் திரைப்படத்துறைக்கு
வந்த பின்பு அகிரா குரசவாவையும், ஸ்டான்ட்லி குப்ரிக்கையும் குருவாக ஏற்றுக் கொண்டபோதும்
கூட அவர்கள் எனக்குள் 2 மற்றும் 3வது இடன்கையே பிடித்தனர்.
தன்னிறைவு பெற்ற குடும்பத்திலிருந்து
வந்த ஒருவருக்கு வேண்டுமானால் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் ஆகியோரின் இசைவான ஆட்டம் பிடிக்கலாம்.
ஆனால் சச்சின், நெருக்கடிகளில் அடையாளங்களைத் தொலைத்தவர்களின் கனவு நாயகன். கனவுகளை
விதைப்பவன். ரட்சகன். அதனாலேயே கடந்த 25 ஆண்டுகளில், கடுமையாக போராட வேண்டிய வறண்ட
இந்திய நிலப்பரப்பில் (கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நீங்களாக) கிரிக்கெட் மதமாகவும்,
சச்சின் கடவுளாகவும் இருக்கிறார்.
அதனாலேயே சச்சினின் பிரிவுஉபச்சார
நிகழ்சிகள் சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு தந்தையின், நண்பனின், காதலியின் மரணத்தைப் போல
ஒவோருவரையும் நிலைகுலையச் செய்துள்ளது. இன்று நெருங்கிய உறவினர் இறந்தால் கூட காலம்
உணர்த்தும் மரணத்தின் முன்பாக அமைதிகாத்து விடுகிறோம். ஆனால், சச்சினின் பிரிவின்போது நிலைகொள்ளாமல் கண்ணீர்
பெருகிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே காலம் என்கிற பெரும் உண்மை மீது கோபம் வருகிறது.
ஏனென்றால், சச்சின் அடையளமற்றவர்களின் அடையாளம்! பெருங்கனவின் கடவுள்!