
நீங்கள் வேற்று மொழி தெரிந்த ஆட்களுக்கு மத்தியில் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நண்பர்களாக அருகில் வருபவர்கள் கூட உங்களின் பலகீனங்களை தேடி அலைவார்கள். "நீங்கள் எவ்வளவு உணவு அருந்துகிறீர்கள்? எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எத்தனை நேரம் கழிவறையை பயன்படுத்துகிறீர்கள்? எல்லோரையும் விட அதிகமாக உழைக்கிரீர்களா?" என்று!
சில நேரங்களில் உங்களுக்கு தெரியாது என்றெண்ணி மனம் நொறுங்கச் செய்யும் வார்த்தைகளால் உங்களை நோகடிக்கக் கூடும். அப்போது நீங்கள் உணர்சிகளற்ற நிலையில், எதுவுமே தெரியாதது போல் நடிக்க வேண்டும். நீங்கள் நடிப்பதும் அவர்களுக்கு தெரியக்கூடாது. தெரிந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உங்களைப் பார்த்து பரிகசிக்க நிறைய ஆள் கிடைக்கும். உங்களுக்காக வருத்தப் பாடவும், ஆறுதல் சொல்லவும் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். அவர்களுக்கு ஓன்று மட்டும் புரிவதில்லை. "உலகம் முழுதும் சந்தோசப்படுவதற்கும், அழுவதற்கும் காரணமான உணர்சிகள் பொதுவானவை" என்று!
6 comments:
நூறு வீதம் உண்மை நண்பரே .. நானும் இப்படி தான் அனுபவிக்கிறேன்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
என் மனச நானே அலசி பார்த்தது போல இருந்திச்சு
வாழ்த்துக்கள் நண்பரே
உண்மை
Very Nice. unmai kasakkum.
love-coffee-stories.blogspot.com
you saying all of correct
மனித நேயம் இல்லாத அறிவு......
மண்ணில் விழாத மழைக்குச் சமம்....
அருமையான வலைத்தளம்!!!!!
சண்முகசுந்தரம்
பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips
Post a Comment