Thursday, January 6, 2011

சாருவின் "தேகம்" - "மலக்கிடங்கு"

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்த கையோடு அவரது "தேகம்" நாவலையும் "ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி" சிறுகதை தொகுப்பையும் வாங்கிவந்தேன். தேகத்தை அன்றைய தினமே வாசித்து முடித்தேன். இதனைத் தொடர்ந்து நாவலைப்பற்றிய என்னுடைய கருத்துக்கு நேர்மாறான விமர்சனம் சாருவின் வலைப்பதிவில் வெளியாகிக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன். இந்த இரண்டாவது வாசிப்பில் எனக்கு மேலும் சில விஷயங்கள் தெளிவாகின.

1) சாருவின் தேகம் வதையைப் பற்றியது என்றார். ஆனால் வதையானது நாவலின் கதாபாத்திரங்களுக்குள் நிகழ்கிறதா? அல்லது சாரு வாசகன் மேல் நிகழ்த்துவதா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

2) நாவலை படித்து முடித்த இரண்டு முறையுமே, ஒரு மலக்கிடங்கிற்குள் விழுந்து எழுந்த அசூசையான உணர்வு எழுந்தது.

3) நாவலைப் பற்றி வலைப்பூக்களில் எழுதப்படுவது யாவும் விமர்சனமல்ல. வெறும் பாராட்டுரைகளே.

4)இவர்கள் யாவரும் சாருவின் வலைப்பதிவில் இடம் பெற்று பெருந்திரளான வாசகர்களால் தானும் அறிவுஜீவியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடையவர்களாகவே படுகிறார்கள்.

5) பன்றி குறித்தும், சிறுவனின் மன ஓட்டம் குறித்தும் வரும் பகுதிகள் மட்டுமே நாவலின் சிறப்பான பகுதிகளாக குறிப்பிட முடியும்.

6) "சரோஜா தேவி புத்தகம்" என்று மிஷ்கின் குறிப்பிட்டதை, தேகம் நாவலுக்கான அதிகபட்ச பாராட்டாகவே கருதுகிறேன்.

7) பல விதமான ஆண் குறிகளையும், பல விதமான மனித மலத்தையும், பெண்களின் உடலையும், குறிப்பாக குறுகிய எலிப் பொந்துகளையும் பற்றி எழுதினால் நாவல் உலகத்தரமானதாக மாறிவிடுமா?

8) மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட செக்ஸ் புத்தகங்கள் தற்போது உயிர்மை மூலமாக தரமான அட்டை மற்றும் தாள்களில் வெளியாவது மனதுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒருசேரத் தருகிறது.

9) இது போன்ற புத்தகங்களை படிக்கும் அளவிற்க்கு எனக்கு சகிப்புத்தன்மை அதிகரித்திருப்பது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி.

10)சாரு வெகுநாளாகவே தான் நோபெல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். சாருவுக்கு கொடுக்கலாம் தான், ஆனால் நோபெல் கமிட்டி தன்னுடைய தகுதியை இழக்க தயாராக உள்ளதா? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். (போர்கேஸ்- க்கே நோபெல் வழங்கப் படவில்லை)

11) Auto-Fiction வகையின் முதல் எழுத்தாளர் சாரு என பிரகடனம் செய்வதில் சில சங்கடங்கள் உள்ளது. ஏனெனில் எல்லா படைப்பாளியும் தனுடைய ஏதோ ஒரு அனுபவத்தின் வழியாகவே உருவாக்குகிறான். முழுக்க கற்பனை என்று இந்த உலகத்தில் ஓன்று உள்ளதா என்ன?

12)மேலும், சாருவின் அடிவருடிகள் என்னை பின்னூட்டங்களால் பின்னி எடுக்க வேண்டாம். ஏனென்றால் நான் கருணாநிதி மாதிரி எதையும் தாங்கும் இதயமல்ல!

16 comments:

Chittoor Murugesan said...

//மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட செக்ஸ் புத்தகங்கள் தற்போது உயிர்மை மூலமாக தரமான அட்டை மற்றும் தாள்களில் வெளியாவது மனதுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒருசேரத் தருகிறது.//

இதை நான் ஏற்கெனவே ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறேன்.

வைஸ் மென் திங்க் அலைக்

Anonymous said...

Had the same feelings when i read the "ZERO DEGREE" novel,but coudnt finish it till today.but charu's writings in his blog is very interseting.we can ignore his novels.

Anonymous said...

i think it is a waste of our valuable time in reading his novels.

priyamudanprabu said...

mmm

பொன் மாலை பொழுது said...

நாயை அடிப்பானேன். அப்புறம் சுமப்பானேன்.

Anonymous said...

Charuvin adipodikalalla charuve ungalai kummiyedukka vaaippullathu.

kargil Jay said...

எதுக்குப் படிக்கணும்? எதுக்குச் சுமக்கணும்?

jill_online said...

கொஞ்சம் கூட மிகையில்லை. சரியான விமர்சனம்

Unknown said...

mathavarajum இதே கருத்தைதான் பிரதிபலித்தார்.ஆனால் twitter -லேயும்,முகநூளிலும்,ப்ளாக் களிலும் ஒரு கூட்டமே இவரை தூக்கி பிடிக்கிறார்களே.வேதனை.

Dr.JP.Rajendran said...

"இது போன்ற புத்தகங்களை படிக்கும் அளவிற்க்கு எனக்கு சகிப்புத்தன்மை அதிகரித்திருப்பது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி"

Great Spirit , Keep Going .

Anonymous said...

i lost all my memories abt yur comments on chaaru Bcoz atlast yu mentioned one line kn)மேலும், சாருவின் அடிவருடிகள் என்னை பின்னூட்டங்களால் பின்னி எடுக்க வேண்டாம். ஏனென்றால் நான் கருணாநிதி மாதிரி எதையும் தாங்கும் இதயமல்ல!

un style ye style thaan keep going..

by johnny

nandhu said...

சரியான விமர்சனம். SUPER.

Reemus Kumar said...

really good review.

அம்பலத்தார் said...

3) நாவலைப் பற்றி வலைப்பூக்களில் எழுதப்படுவது யாவும் விமர்சனமல்ல. வெறும் பாராட்டுரைகளே.

4)இவர்கள் யாவரும் சாருவின் வலைப்பதிவில் இடம் பெற்று பெருந்திரளான வாசகர்களால் தானும் அறிவுஜீவியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடையவர்களாகவே படுகிறார்கள்.... உண்மையை வெளிப்படையாகச் சொல்லியதற்குப் பாராட்டுகள்

Anonymous said...

ungal padaippugal tharamaanavai.
naan ungalai madhikkiren...

Changeevan said...

Hi anna