Saturday, June 19, 2010

ராவணா - ரிலையன்சின் குரல்!

மணிரத்னம் எப்போதும் அரசியலை முன் வைக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். இந்த வகையில் ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து வரிசையில் ராவணாவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்த முறை மணிரத்தினம் நக்சல் இயக்கங்களை தொடர்பு படுத்தியே விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கியுள்ளார். 'நக்சல்' போன்ற இயக்கங்களை சித்தரிக்கும் பொழுது இயக்கம் சார்ந்த உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளவது அவசியம்.

'நக்சலைட்' என்பவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகளே. அவர்களின் போராட்டம் தங்களின் வாழ்வாதாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்க்கான முயற்சியே. நக்சல் பழங்குடிகள் வாழும் மலைகள் வெறும் பாறைகள் அல்ல. அங்கிருக்கும் மலைகள் முழுக்க "பாக்சைட் கனிமம்". எண்ணிலடங்கா கோடிகள் விலை போகும் இந்த மலையை விலைக்கு வாங்க முனைப்பு காட்டும் ரிலையன்ஸ், வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் நிறுவனங்கள்; அதனை தடுக்க போராடும் நக்சலைட்; இதில் மணிரத்தினம் ரிலையன்ஸ் பக்கம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் முதலாளிகளான அம்பானி சகோதரர்களை குளிர்விக்கும் பொருட்டு 'குரு' படத்தில் குரு(திரு)பாயின் திருட்டுகளை ஞாயப்படுத்தினார். மணிரத்தினத்தின் இந்த செயலுக்கு அம்பானி சகோதரர்கள் குளிர்ந்து போய் வழங்கியது தான் 'ராவணா'!

ராவணாவில் மலைவாழ் மக்களாக(நக்சலைட்டின் ஆடை அமைப்புடன்) சித்தரிக்காப்படும் நாயகனை 'பொம்பளை பொருக்கி என்றும், ஒரு பொம்பளையைக் கூட விடமாட்டான்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதைவிடவும் நாயகன் வாயிலாகவே 'எங்க கை எச்சிக் கை தான்' என்று குறிப்பிடுகிறார். கொள்கைகளுக்காக போராடும் இயக்கங்களை இழிவுபடுத்தியுள்ளனர். 'வசனம்' என்ற பெயரில் சுகாசினி மணிரத்னம் படம் முழுக்க வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்.

ராமன்-சீதை-ராவணன் கதையை எடுத்துக் கொண்ட மணிரத்தினம் இதனை சிறப்பாக செய்திருந்தால் ஹாங்-ஹாங்கின் 'IN THE MOOD FOR LOVE' திரைப்படத்தைப் போல காவியமாக வந்திருக்கும். ஆனால் ஹாலிவுட் தரத்திற்க்கு தொழில் நுட்பங்களை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தும் மணிரத்னம் பெரும் முதலாளிகளின் கைக் கூலியாக செயல்படுவது வேதனைக்குரியது.

படத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ள கதாபாத்திரம் ப்ரியாமணியின் கதாபாத்திரம்தான். மன்சூரலிகானின் டப்பிங்!? ப்ரியாமணியின் கதாபாத்திரத்தை ஓவியமாக்கியிருக்கிறது!???

ஜெயா TV-யில் வாய் கிழிய தமது மேதமையை நிரூபிக்கும் சுகாசினி இனி செய்ய வேண்டியது மணிரத்தினதிற்க்கு அடுத்த மாரடைப்பு வராமல் அவரைப் பார்த்துக் கொள்ளவது மட்டும் தான். பல நூறு பேரைக் கொள்ளவதை காட்டிலும், ஒருவரை காப்பாற்றுவது மேலான செயல் அல்லவா?

இந்த செயலை செய்ய முனைந்தாலே இந்திய சினிமா உங்களுக்கு தலை வணங்கும். மற்றபடி வசனம் எழுதும் வேலையெல்லாம் யாராவது வேலை இல்லாதவர்கள் பார்த்துக் கொள்ளவார்கள்.

NT tv, CNN - எல்லாம் சொல்வது மாதிரி படம் ஆகா ஒஹோ என இல்லாவிட்டாலும் படத்தை திரையில் கண்டு மகிழுங்கள்.

8 comments:

Anonymous said...

super

Anonymous said...

that is not NT tv... 'NDTV' first u understand this, then you can write review..........

Anonymous said...

Venum na ungaluku vasanam eluthura velaiya vangi thara solava... Velai illama thirinja ipadi than puthi kiruku puduchu aliumam...

நாகை சிவா said...

//ராவணாவில் மலைவாழ் மக்களாக(நக்சலைட்டின் ஆடை அமைப்புடன்) சித்தரிக்காப்படும் நாயகனை 'பொம்பளை பொருக்கி என்றும், ஒரு பொம்பளையைக் கூட விடமாட்டான்' என்றும் குறிப்பிடுகின்றனர். //

அந்த காட்சி அமைப்பை சரியாக பார்த்தீர்களா... 10 நபர்கள் 10 விதமான கருத்தை சொல்வதாக அமைக்கப்பட்ட காட்சி அது. உங்களுக்கு தேவைப்படும் ஒரே ஒரு வசனத்தை மட்டும் எடுத்துட்டு மத்த 9 வசனத்தையும் விட்டு விட்டீர்களே... ;)

Jayanthan said...

Comment ezhudhuravanunga paeraiye ezhudha mudiyala apparam edhukku comment mattum ezhudhanum .

Jayanthan said...

Padam sodhappal mattumae... Vikram endra oru nadiganai mani ratnam kaalam kadakka vaithu thanadhhu vaazhkaiyai viraiyam seidhu vittar.

geethappriyan said...

நல்லா எழுதுறீங்க நண்பா,
நிறைய எழுதுங்க,ஃபாலோவராயிட்டேன்,இனி அடிக்கடி வ்ரேன்

Unknown said...

Innum ungakitta eathirparkira pa mm